என்னை பற்றி சில வரிகள்

 எனது பெயர் கந்தசாமி இராஜேந்திரகுமார் சொந்த இடம் இணுவில் வளர்ந்தது எல்லாமே யாழ்ப்பாணம் brown road . என்னுடைய கல்வி கொக்குவில் இந்துக் கல்லூரி.1987 லண்டன் வந்து சேர்ந்தேன்.என்னுடைய கலைப்பயணம் 2007 ஆண்டு ஆரம்பித்தது.சிறு வயதில் பாடல்கள் கவிதைகள் எழுதும் பழக்கம் இருந்தாலும் என்னை அடையாளப்படுத்திக்கொண்ட வருடம் 2007 என்றே சொல்லலாம்.
அந்த வருடம் தான் என்னுடைய முதலாவது இசைத்தட்டை வெளியிட்டேன். ஆடல் பாடல் கும்மாளம்.அதனை தொடர்ந்து. 2008 அகதியின் குரல்,2009 குல தெய்வங்களுக்கு ஒரு பாமாலை, 2010 குயிலா மயிலா என்னும் நான்கு இசைத்தட்டுக்களை இதுவரைக்கும் வெளியிட்டு இருக்கின்றேன்.தீபம் தொலைக்காட்சியில் கவிதா நேரம் என்னும் நிகழ்ச்சியில் என்னை அடையாளப்படுத்தி.பிடிக்கலை பிடிக்கலை.கருத்தாடுகளம்,மீள் விசாரணை போன்ற நிகழ்ச்சியில் மூலம் என்னை மக்கள் முன் அடையாளப்படுத்திக்கொண்டேன்,இப்பொழுது என்னுடைய சொந்த தயாரிப்பான  சில குறும்படங்களை தயாரித்து இயக்கி வருகின்றேன்.என்னுடைய கவிதை புத்தகம் ஒன்று வெகு விரைவில் தமிழ் நாட்டில் வெளியாக உள்ளது.அம்மாவுக்கு ஒரு முத்தம் என்ற ஒரு இசைத்தட்டையும் இப்பொழுது செய்து வருகின்றேன் இது தான் என்னைப்பற்றிய சிறு விளக்கமாகும்.