Monday, January 28, 2013

வறுமை...!!!





உள்ளத்தில்...
வைத்துக்கொண்டு...
உடலால்...
காட்டத் துடிக்கும்...
மனிதனே...!!!

வாழத் தெரியாது...
பிதற்றுக்கின்றாயா...
இல்லை வாழ்வே....
பிடிக்காததினால்...
துடிக்கின்றாயா...!!!

பத்து மாதம்...
நீயும் தானே...
கருவறை கண்டாய்...
உன் வாழ்வு மட்டும்...
கானல் நீராகப்....
பாய்வது....
எதனால் தானோ...!!!

கூக்குரல் உனக்கு...
சொந்தாமாகி விட்டதா...
கேட்கும் காதுகளும்...
செவிடாகிவிட்டதா...
உன் கைகளும்...
முடமாகி விட்டதா...
கால்கள் கூட...
நடை தளர்ந்து விட்டதா...!!!

வாழப் பிறந்த...
உலகத்தில்...
உனக்கெதற்கு...
சோகமும் வறுமையும்...!!!

வாழ்ந்து பாரடா மனிதா...
வறுமை...
உன்...
பொறுமையால் தானே...
உன்னை சுற்றுகின்றது...!!!

பொங்கியெழு...
அதுவே பதுங்கி...
ஓடிவிடும்...
உன் சீற்றத்தின் முன்னே...
மண்டியிடும்...!!!

தூக்க மாத்திரைகள்...!!!





ஜெயிக்க தெரியாது...
உடைந்து...
போகத் துடிக்கும்...
முகங்கள் தானே...!!!

போலியான வேலிகளை...
போடத்துடித்து....
புழுங்கி வாழ்ந்து...
முகவுரை தொலைப்பதில்...
என்ன நாட்டமோ ...!!!

காலத்தோடு போராட...
கலக்கமா...
உனக்குள் தயக்கமா...
இல்லை....
கண்ணீரில் மட்டும்....
உறக்கமா...
ஏன் தான் இந்த...
ஏக்கமோ...!!!

கல்லடிகள்...
பட்டுக்கொண்டுதானே...
இருக்கும்...
சொல்லடிகள்...
தொடர்ந்துகொண்டு தானே...
இருக்கும்...
தூயவர்கள் வாழ்வோ...
மலர்ந்து கொண்டுதானே...
இருக்கும்...!!!

காண்ணாமூச்சி...
உலகம் தானே...
கவலை இல்லா..
மனிதனுண்டோ..
நீயும் தான்...
கண்டதுண்டோ...!!!

வாழும் வரை...
வாழ்ந்துடுவோம்...
தூக்கங்களோடு வந்த ...
துக்கங்களை...
தொலைத்துவிட்டு...!!!

கூட்டுக்குடும்பம்...!!!



தேன் கூடுகள்...
சுவை குன்றா...
தேன் கூடுகள்...
பாசப்பினைப்புகளால்...
தசை நார்கள்...
ஒட்டி உறவாடிய...
தேன்கூடுகள்...!!!

பரம்பரை...
பெயர் சொல்லியே...
நெஞ்சை நிமிர்த்தி...
பல கதைகள்....
சொல்லுமே...!!!

உறவுகள்...
சொந்தம் கூடி...
அழைக்கும் பொழுது...
இரத்த பந்தங்கள்...
சுண்டிப் பார்க்குமே...
சுகம் காணுமே...!!!

இன்றோ...
கதைகளில் மட்டும்...
படிக்கின்றோம்...
கண் மடல்களை...
அகல விரித்து...
படங்களில் மட்டும்...
பார்த்து ரசிக்கின்றோம்...!!!

எங்கே தொலைத்தோம்...
எங்கள் விழுமியங்களை...
பந்த பாசங்களை...
எங்கே தான்...
பறிகொடுத்தோம்...!!!

கண்டதுக்கும் ஆசைப்பட்டு...
காக்க வேண்டிய...
உணர்வுகளை...
காவு கொடுத்தோமே...
அழித்து விட்டோமே...
அறிவை அடைவு வைத்தே...
தொலைத்து விட்டோமே...!!!

பற்றி எரிகின்றது....
பேராசைகளினால்...
இழந்துவிட்ட...
இனிமையான வாழ்வை...
மீண்டும் பெற முடியா...
பற்றி எரிகின்றது...!!!

வேடிக்கை மனிதனே...
கூட்டுக்குடும்பம் ...
என்னும் தேன் கூட்டை...
குலைத்துவிட்டு...
ஒன்று சேர்க்க...
துடிக்கின்றோம்...
கிடைக்குமா அந்த வாழ்வு...!!!

காற்றுக்கென்ன வேலி...!!!


சுதந்திர காற்றில்...
மூச்சு...
விட வேண்டும்...
தூய்மையான...
அன்பு...
பக்கம் வேண்டும்...!!!

காலம் வந்து...
கை...
கோர்க்க வேண்டும்...
கனத்த இதயங்கள...
பண்பாய்..
மாறிட வேண்டும்...!!!

தேடலும் கூடலும்...
இனிதாய்..
மலர்ந்திட வேண்டும் ...
இன்பம் மட்டும்...
சேர்ந்திட வேண்டும் ...!!!

வாட்டமும் நோட்டமும்...
மறைந்திட வேண்டும்...
மனித முகங்களில்...
மாற்றங்கள் வேண்டும்...
அன்பான மாற்றங்கள்...
வேண்டும்...!!!

பிறந்தோம் வளர்ந்தோம்...
கண்டது என்ன...
கற்பனையிலா ...
முடிந்திட வேண்டும் ...
சாதனை...
வாழ்வில் தானே ...
முடிந்திட வேண்டும்...!!!

இத்தனை தடைகள்...
யாருக்கு வேண்டும்...
வேலியத் தாண்டும்...
பயம் தான்...
யாருக்கு வேண்டும்...!!!

வஞ்சமில்லா...
நெஞ்சமுள்ளவன்...
வாழ்வில்...
தடை போடத்தான் ...
யார் உண்டோ...
யாருக்குத் தான்...
துணிவுண்டோ...!!!

பாவம் ஒரு பக்கம் பழி????



பாவம் செய்தவன்...
தப்பி விட ...
பழி....
பாவப் பட்டவள் பக்கம்
ஒட்டிக்கொண்டதே...!!!

யாதும் அறியா...
பேதை வாழ்வோ ...
நாதியற்று...
நடைபிணமாக...
நாட்கள் சிதைந்ததே...!!!

வஞ்சகன் யார் தானோ ...
நஞ்சைக் கலந்து விட்டு...
நாயகனாக வேஷம்...
போடுகின்றானே ...
துடிப்பது மௌனம் தானே...!!!

பார்த்து பார்த்து...
பழகிய உள்ளம்...
பருதவிக்கின்றதே...
பாதைகள் குத்திக்கொண்டதா...!!!

வார்த்தைகள்...
சிதறியது இல்லை...
இன்று வாட்டமும்...
சேர்ந்துகொண்டதால்...
அவள் வாழ்வும்...
திசையை...
மாற்றிக்கொண்டதா...!!!

காலங்களும் பதிலைத் தேடி...
அலைகின்றன...
பதிலும் சேர்ந்து...
பொய்யானதால்...
கரையத் தொடுமா...
பேதையின் வாழ்வும்...!!!

Sunday, January 27, 2013

நம்பி தொலைத்தேன்...!!!



தொலைந்தது...
காலம் இல்லை...
கனவும் சேர்ந்து...
தொலைந்ததே...!!!

கலையை மறந்து...
என் நிலையை மறந்து...
இதயம் பலகாலம்...
தடுமாறி நின்றதே...!!!

சோகங்களை...
புகிர்த்திக்கொண்டு...
சுதந்திரங்களை...
தொலைத்துவிட்டு...
நடைபிணம் ஆனேன்...
நாகரீகம் அற்றவனாய்...!!!

இன்று தலை நிமிர்ந்தேன்...
இருந்தும் வடுக்கள்...
என்னைக்...
கொல்கின்றதே...!!!

என்னை வைத்து...
பாவப் பட்டவள் வாழ்வு...
சதுரங்கள் ஆடுகின்றதே...
பார்த்த என் கண்களில் ...
இரத்த துளிகள்...
தெரிக்கின்றனவே...!!!

பாதைகள் தடுமாறி...
திக்குத் தெரியாத...
வனவாசம்...
சென்று விட்டேனா...
திரும்ப வழியின்றி...
விழி இழந்து தடுமாறி...
சாய்ந்தேனா...!!!

கால்கள் இருப்பதால்...
தொடர்ந்து நடக்கின்றேன்....
வரும் பாதைகள்...
நல்ல பாதைகளாக...
என் கைபிடித்து.செல்லும்...
நம்பிக்கையில் நடக்கின்றேன்..
.!!!

தவறு செய்யா தண்டனையா...!!!



காற்றுக்கு வேலி...
போட்டாள்...
கவிதை மட்டும்...
வடித்து வந்தாள்...!!!

காலம் செய்த...
கோலத்தினால்...
தன்னைத் தானே...
பறி கொடுத்தாள்...!!!

தேவதை போல்...
வாழ்ந்தவள்...
இன்று தேவையின்றி...
சிக்கித் தவிக்கின்றாளே...!!!

கல்லெறி படுகின்றது...
காரணம் இன்றி...
வலிக்கின்றதே...!!!

யாரிடம்...
சொல்லித்தான் ...
அழுது முடிப்பாள் ...
அவள்...
வேதனை தான்...
யாரறிவார்...!!!

அணைக்க வந்தவரும்...
கோடரிப்பாம்புகளாக...
மாறிவிட...
அவள் விதியோ..
தட்டுத் தடுமாறுகின்றதே ...!!!

பாவத்தின் கண்கள்...
பார்த்தறியா...
அவள் உள்ளம்...
பதறுகின்றது...
பாவ மூட்டைகள்..
வீசப் பட்டபொழுது...!!!

காலத்தின் கைகளில்....
அவளைக் ....
கொடுத்துவிட்டு ...
கடந்து செல்கின்றாள் ...
கதறல்களோடு...
அவள் கண்ணீரின்...
கதைகளோடு...!!!

மனைவி...!!!



குத்து விளக்குகள்...
அணைவதுண்டு...
குல விளக்குகள்..
அணைவதுண்டோ...!!!

திருமண பந்தத்தில்...
ஏற்றி வைத்த...
மனைவி என்னும்..
ஒளிவிளக்கால்....
பிரகாசமானது...
நானல்லோ...!!!

எத்தனை துன்பங்கள்...
விழுங்கிக்கொண்டு...
இன்பத்தை மட்டும்...
படைக்கின்றாளே...
யார் கொடுத்த வரமோ...!!!

பொறுமை...
இவர்களிடம் மட்டும்
மண்டியிட்டு ...
கிடக்கின்றதே...
எப்படி....
இவர்களிடம் மட்டும்...
சரணடந்ததோ...!!!

கருவில்...
என் உயிரை சுமந்து...
கெளரவம் என்னும்...
தகமை தந்து...
மனிதனாக இன்று...
உலா வருகின்றேன்...
மனைவி என்னும்...
தாய்மையால்...!!!

நீ இல்லாத உலகம்...!!!



நிம்மதி தான் என்ன
விலையோ
நீ இல்லாத உலகத்தில்
என் மதியும் கேட்கின்றதே
விரக்தியில்
ஏதோ ஒரு உணர்வு பிறப்பதால்
இதயம் நொந்து தான்
தேடுகின்றதே...!!!

வெற்றுக் கிரகத்தில்
தனியாகப் புலம்புகின்றேன்
உன்னைக் காணாது
உறவாடத் தெரியாமல்
உணர்வாலேயே
புதைகின்றேன்
அடக்கம்
பண்ணத் தான் நீயும்
தேடிவருவாயோ என்னவளே
நானும் கேட்கின்றேன்...!!!

கடிதம் போட்டுத்தான்
தேடுவதற்கு
நீ தான் காத்து
இருக்கவில்லையே
கண்ணுக்குள் உன்னை
மூடி வைக்கத்தான்
என் கண்ணிலும் இடம்
இல்லையே...!!!

வருவாய் என்று
வாசல் கதவை மூடிவிட்டு
காத்து இருக்கின்றேன்
பைத்தியக்கார உலகத்தில்
நானும் ஒரு வைத்தியனாகவே...!!!

கவிதையும் காதலும்...!!!



வளர்ந்தது காதல்
மட்டும் இல்லை
கனவில் தோன்றிய
வரிகளில்
கவிதையும் தானே...!!!

கண்ணே மணியே என்று
வாய் முணுக்க
வண்ணத்து பூச்சி போல்
நீயும் சிறகடிக்க
மலர்கள் என் மேல் பட்டு
படபடக்க
மறந்தேனே பலநாட்கள்
கண்ணயர்ந்தே...!!!

காதும் காதும்
பேசிக்கொண்டன
உன் வாய் முணுப்பை
பார்க்கத்தானே கண்களும்
முழித்துக்கொண்டன
என் வார்த்தைகள் கூட
சிக்கிக்கொண்டன
உன் அழகுக்கு முன்
மௌனம்
தொற்றிக்கொண்டன...!!!

கவிதை வரைய
பேனா தேடுகின்றேன்
உன் கண் மைகள்
என் கைகளில்
கொட்டிவிடுவதால்
நானும் தடுமாறுகின்றேன்...!!!

இமை மூடி
என்னை வருடும் நீ
எனக்குள் புதைந்து
போகின்றாய் தினம் தினம்
கவிதையாகவே
நானும் மறந்து போகின்றேன்
உன் நினைவாலேயே...!!!

Tuesday, January 22, 2013

சாவின் கயிறு...!!!



சாவைத் தொட்டேன்...
சுகமாய் உணர்ந்தேன்...
மீண்டு வந்த பொழுது...
வெறுப்பாய் மிதந்தேன்...!!!

கருப்பு உலகத்தில்...
கை பிடித்து...
சென்றவர் யாரோ...
கண் மூடி...
திறந்த பொழுது...
கை விட்டு...
சென்றவர் யாரோ...!!!

சுதந்திர காற்றை...
சுவாசித்தேன்...
அதில்...
விஷம் இல்லை...
விபரீதம் இல்லை...
கலங்கம் இல்லை...
கடனில்லை...!!!

கண் விழித்த பொழுது...
உணர்ந்தேன்...
பாசக் கயிறுகளின்...
கண்ணீர் ஊற்றுக்களை...!!!

இத்தனை ...
பாசங்களை விட்டு...
நான் போகத் துணிந்த...
இடம் தான் எங்கே?..!!!

சுகங்கள் தேடி ...
இருட்டறை சென்றேனா...
சுயநலம் தேடி...
பாசங்களை...
புதைத்து சென்றேனா...!!!

மனைவி பிள்ளைகள்...
உற்றார் உறவினர்...
நண்பர்கள் கதறல்கள்...
மீண்டும் அழைத்து வந்ததே...
இந்த பூமிக்கு...
புதிய மனிதனாக...!!!

எழுதுகோல் கரைகின்றது...!!!



உன்
நினைவில் கரைந்தது
என் இதயம்
ஏக்கத்தில் தினம் ஒரு
கவிதை வடித்தேன்
இன்று கரைகின்றதே
என்
எழுதுகோலும் சேர்ந்தே...!!!

கூட்டம் கூடி
ரசித்துதானே சுவைத்தனர்
எழுதுகோல் வடித்த
கண்ணீரை முகர்ந்து
பார்த்துத் தானே
மலர்ந்தனர்
கண்ணீர்க் கசிவுகள் சொன்ன
கதைகள் தான்
எத்தனை எத்தனையோ
காவியம் ஆகாத
கருங்கல் சிற்பங்களாக...!!!

முற்றத்து நிலாவை
புன்னகையால்
புரிந்துகொண்டு புதிர் போட்டு
நான் அழைக்க
கண்ணசைவில்
கௌவிக்கொண்டு தான்
சிரிக்க
கைகொண்டு நானும்
மடல் வடிக்க
கையும் முடமாகி
என் சிந்தனையும்
கரைந்து போனதே
எழுதுகோலும் என்னை
மறந்து போனதால்...!!!

Monday, January 21, 2013

தடுமாற்றம்...!!!



கண்கள் மூடிக்கொண்டு...
விரல்கள்...
நொறுக்கிக்கொண்டு...
என்னை...
மறைத்துக் கொண்டு...
வடிக்கின்றேன்...
புதிய பல்லவி...!!!

வேதனையில்...
சூடு போட்டு...
விரக்தியில்...
ஆசை காட்டி...
விழுங்குகின்றேன்...
புதிய வார்த்தைகள்...!!!

எல்லாமே...
புது யுகம்...
மதிகள் மயங்கி...
தாலாட்டுப் பாடுதே...
தயங்காது...
கேள்விகள்...
வேள்வியாகிப்போனதே...!!!

பாரத்தை...
சுமக்கின்றேன்...
பாரங்கள்...
கூடிச் செல்வதால்...
முதுகெலும்பை...
முறிக்கின்றேன்....
முடியாததால் தானோ...!!!

இன்று மௌனமாக....
கழிக்கின்றேன் ...
மௌனத்தின் சுகம்...
என்னைச்...
சுற்றுவதனால் தானோ...!!!

காலங்கள் ஓடி...
என்னை...
கரை சேர்க்கட்டும்...
நான்...
அடங்கிப்போகும் முன்னே...!!!

நடுக் காட்டில்....!!!





திக்குத் தெரியாத...
காட்டில்...
விடப்பட்டாளா...!!!

கண்கள் மூடி...
கவி வடித்தவள் இதயம்...
இன்று கிழிக்கப்பட்டு...
அவள் கண்களில்...
அருவி ஊற்றேடுத்ததே...!!!

பாவத்தைக் கண்டு...
கலங்கும் இதயம்....
இன்று சாபத்தில்...
தடுமாறி நின்றதோ...!!!

வேஷம்...
போடத் தெரியாததால்...
வனவாசம் போல்...
அவள் உள்ளத்தை...
மாற்றிக்கொண்டாளா...!!!

கலங்கம் இல்லாதவள்....
கலங்குவது...
அவளின் வலியில்...
குளிர் காய...
நினைப்பவர்களுக்கு...
புரியாதோ...
இல்லை புரிந்தும்..
புரியாது புது வேசமா...!!!

அவள் என் பார்வையில்...
என்றும் என்...
கண்பாவையில்...
என் இதயத்தின்....
ஓரப்பார்வையில்...!!!

உன்னோடு என் பயணம்....!!!



ஊமை விழிகள்
பேசிக்கொள்ளும் பாஷையில்
தடுமாறி தன்னம் தனியே
எனக்குள் ஒரு சதுரங்கம்
நானே வரைந்து கொண்டு
வாழ்க்கை என்னும் ஓடத்திலே...
பயணிக்கின்றேன்...
பாதைகளை
வரைந்துகொண்டே...!!!

காலம் தான் கயிறு கட்டி...
கண்
வைக்கத் துடிக்கின்றது
கருமேகங்கள்
சூழ்ந்துகொண்டு என்
இதயத்தைத் தான் பதம்
பார்க்கின்றனவே...!!!

பார்த்து மறந்து
பழகித்தான் போனது
பைத்தியம் குறைந்து
எனக்கும் முதுமைகள்
பிறந்த பொழுதும் கூட
கனத்த மழையினுள்
வாழ்வும்
நனைந்து தான் போனது...!!!

வீசிய புயலின் ஊடாக
வீராப்புடன் நடக்கின்றேன்
வார்த்தைக்கு வார்த்தை
முழங்கும்
கருத்துக்களைக் கூட
காணாது நானும்
மறைகின்றேன் உன்னோடு
பயணித்துக்கொண்டே...!!!

Saturday, January 19, 2013

குளிரும் சுடுகின்றது...!!!



உன் நினைவுகள்...
என்னுள்...
தாலாட்டும் பொழுது...
என்னை மறந்தே...
நானும் மிதக்கின்றேன்...!!!

கண்களின் கருவிழிகள்...
கவிபாடத்தான்...
என்கரங்கள்...
பற்றுகின்றனவே...
கைவிரல்களில்...
குளிர்காற்றுக்கள் வந்து...
முத்தமழை இட்டுத்தான்...
செல்கின்றனவே...!!!

பஞ்சாக மனம் வெந்து ...
அவளைக் காணாது...
தினம் நொந்து ...
முத்தாகத் தான்...
வெடித்துச்சிதறி...
வேடிக்கை காட்டுகின்றனவே...
என் இதயமும்...
மஞ்சத்தில் நனைகின்றதே...!!!

புயல் காற்றுக்கள்...
கடந்து செல்கின்றன...
புண்ணியம் செய்த...
மழைத் துளிகள்...
என்னை நனைத்து...
மகிழ்கின்றன ...!!!

பனிக்கட்டிகள் என்னை...
மூடிக்கொள்கின்றன...
இருந்தும் சுடுகின்றது...
என்னை தொட்டு மகிழும்...
குளிரை மறந்தே...!!!

சொல்லத் தெரியவில்லை...!!!






சொல்லி...
சொல்லிப் பார்த்தேன்...
உள்ளம் புரியவில்லை...
எனக்கு சொல்லவும்...
தெரியவில்லை...!!!

கண்ணீர் கொண்டு...
கருத்துக்களையும்...
விழுங்கினேன்....
பன்னீர் தெளித்து...
அணைப்பார் என்று...
வெந்நீராகிப் போனதே...
வேதாந்தங்கள் எல்லாம்...!!!

மூட நம்பிக்கைக்கு...
முழுக்குப் போட்டேன்...
முன்னாள் வந்து...
சம்மணம் கட்டியதே...
என் கையைப்...
பிடித்துக்கொண்டே...!!!

காதலுக்கு...
கைகள் நீட்டி...
கண்ணைக் குத்தியே...
நானும்...
அணைத்துக்கொண்டேன்...
கரங்கள் வெட்டுப்பட்டது...
தெரியாமல் நானே...!!!

பிரபஞ்சத்தில்...
இறக்கை கட்டித்தான்...
நானும் பறக்கின்றேன்...
வழி தெரியாமல் ...
இறங்கத்தான்...
தடமின்றி தவிக்கின்றேன்...!!!

எல்லாமே...
சொல்லத்தான்...
துடிக்கின்றேன்...
சொல்லத் தெரியாததினால்...
எனக்குள்ளே...
மறைக்கின்றேன்...
வார்த்தைகள் இன்றியே...!!!

Wednesday, January 16, 2013

முதுமை....!!!





முகமும் உடலும்...
தளர்வடைந்து....
சுருக்கம்...
கண்டதால்...
முதுமையா...!!!

உலகத்தின்...
அநீதிகளை...
கண்டு வெடித்து...
கிடைத்த...
எதிரொளிகளா...!!!

கோலத்தின்...
நடுவே....
காலத்தை...
வென்றவர்கள்...!!!

முகவுரை...
தொலைக்கா...
முத்துக்கள்..
தேடியவர்கள்...!!!

மௌனத்தில்...
இன்று...
பல சிற்றாலயங்களில்...
பதுங்கிக் கொண்டார்கள்...
உடல் தளர்ந்து...
விட்டதால் தானோ...!!!

குழந்தைகளின்...
மனதோடு மனதாக...
ஒட்டிக்கொண்டார்கள்...
முதுமை தந்த...
பாடத்தினால் தானோ....

காவோலை...
விழ...
குருத்தோலை...
சிரிக்கவில்லை...
சிந்திக்கின்றது....!!!

இதயம் சுட்டது..!!!






இன்று பேசினேன்...
நின்று...
பேசினேன்...
நினைவில்...
நான் இல்லை...
தெரிந்துகொண்டேன்...

கனவில் மட்டும்...
அவள் வந்தாள்...
கவிதை மட்டும்...
தந்து சென்றாள்...!!!

அவள்...
பேசியதெல்லாம்...
தத்துவாமாக...
உணர்ந்தேன்...
அவள்...
இன்று பேசிய பொழுது...
தனி மனிதனாக...
உணர்ந்தேன்...!!!

வாழ்கின்றேன்...
அவள்...
பேசிய வார்த்தைகளில்...
வாழ்கின்றேன்....
இதயத்தை மட்டும்...
கேட்டேன் தரவில்லை...
நினைவோடு...
நான் மட்டும் ...
வாழ்கின்றேன் ...!!!

உறவில் அவள்...
ஒரு...
புன்னகை...
என் மனம்...
எனக்கு...
மட்டும் சொன்னது...
என்னைப் பார்த்து...
மூடன் என்று...!!!

உணர்வுள்ள உள்ளம்...!!!



உள்ளுக்குள்...
பூட்டி வைத்து....
கண்ணீர்த் தொட்டிகள்...
சுமந்து வாழும்...
பேதை அவள்...!!!

மனது...
தூய்மையானதால்...
வேதனைகள்...
தேடிவந்து...
அவளை...
ஒட்டிக்கொண்டதோ...!!!

கலங்கரை விளக்காய் ...
அவள் இருந்தாள்
பல பேருக்கு...
இன்று கலங்கி...
நிற்கிறாள்..
பதில் தெரியாது...!!!

பதில்களும்...
சுருங்கிக் கொண்டு...
கேள்வியாக...
வாட்டி...
வதைக்கின்றதே...!!!

கரு மேகங்கள்...
சூழ்ந்து...
கொண்டதோ...
இவள் கண்ணீரை...
மறைக்கத் தான்...
காற்றோடு...
இடியுடன் மழையும்...
தெறித்ததோ...!!!

அவள்...
வீழ்ந்து கிடக்க...
யானை இல்லை...
அழகிய குதிரை..
மீண்டு வருவாள்...
என் கண்முன்னே...
வாழ்ந்து காட்டுவாள் ...!!!

தொழிலாளர் தினம்...!!!



முதலாளிகள்...
வர்க்கத்தை...
அடக்க...
நினைத்த தினமா...!!!

இல்லை...
முதுகெலும்பு
முறிந்தும்
வாழ்வில்...
வசந்தமில்லா...
துடித்த தினமா...!!!

காலமெல்லாம்...
கனவுகளில் மிதந்து...
கை நழுவிப் போகும்...
உண்மை...
உணர்வுகளில் துடிக்கும்...
உணர்வாளர்களின்...
தினமா...!!!

எத்தனை...
குமுறல்கள்...
ஓங்கி ஒலித்தும்...
செவிடர் காதுகள்...
திறந்து...
கொண்டு தான்..
விட்டதா...
வசந்த வாழ்வும்...
இவர்கள் பக்கம் ...
திரும்பித்தான்...
விட்டதா...!!!

தொண்டைத் தண்ணி...
வற்றும் வரைக்கும்...
நாங்களும்...
விடோம்...
விடியலுக்காக...
விடியல்...
எங்களுக்காக....
விடியும் வரைக்கும்...!!!

Tuesday, January 15, 2013

நம்பிக்கை...!!!




உலகம்....
உருண்டோடுகின்றது...
உணர்வுகள்....
தினம் சாகின்றது...!!!

உணர்ந்தவன்...
வாழ்வு தானே....
உதயமாகின்றது...!!!

வாழ்வில்....
எத்தனை...
அழுக்குகள்...
எத்தனை...
பழுக்கள்....!!!

நீதி இல்லை...
என்றும்...
நேர்மை இல்லை....!!!

பாவத்தின்...
கரங்கள் தானே...
பிறக்கின்றதே...
தினம் தினம்....!!!

வாழ்விலே...
பிடிப்பில்லாமல்....
பறந்தோடுதே...
மனித இனம்...!!!

ஏன் இந்த...
கொடிய வாழ்வு...
யாரால் வந்தது...
எழிய வாழ்வு...!!!

பிறந்ததற்கு...
ஒரு புகழ் காணு...
உண்மை...
மனிதனாய்...
தினம் வாழு....!!!

கையிலேதானே...
இந்த பூமி...
அதனையே...
தினம் யோசி...!!!

வாழ்வை...
நம்பிக்கையோடு...
நீயும்...
என்றும் நேசி...!!!

ஒரு முறை...
வாழ்ந்து பார்...
உனக்கே...
உன்னை பிடிக்கும்...!!!

கலங்கமில்லாதவள்...!!!



யாரோ....
ஒருவனை ....
இதயத்தில்...
சுமந்ததினால்...
தன்னையே...
வருத்திக்கொள்ளும்...
பைத்தியக்காரியை ....
கண்டதுண்டோ,...!!!

அவன்...
சோகம் கேட்டு...
தனக்குள்...
புதைத்துக்கொண்டாள்....
சோகத்தை...!!!

கள்ளம்...
கபடம் அற்ற...
அவள் உள்ளம்...
கசங்கிப் போய்...
வாய் பேசா...
ஊமையாக நடிக்கின்றதே...
யார் அறிவர்...!!!

தேவதையாக...
நான்...
ஏற்றுக்கொண்டதால்...
துன்பம் அவளை...
வாட்டுகின்றதா...
சந்தேகக் கண்களோடு...!!!

தலையங்கம்...
தந்தவள்...
இன்று தடுமாறி...
நிற்கின்றாள்...
தன் உள்ளத்தை...
மட்டும்...
இழந்ததினால்....!!!

கோயிலில்...
இருக்கவேண்டிய...
சாமியவள்...
கும்பிடத் தெரியாதவன்..
கோவிச்சு போனால்...
என்ன பயன்...!!!

தேவதையாக...
சிம்மாசனம்...
இட்டவள்...
என் இதயத்தில்...
மட்டுமே...!!!

தூங்காத இரவுகள்...!!!



நினைவுகள்...
தடம்...
பிரண்டதால்...
நிர்க்கதியானேன்...
நிலை தடுமாறியே...!!!

கதிரவனின்...
வரவுக்காக...
பல இரவுகளை...
தொலைத்துவிட்டேன்...
என்னை மறந்தே...!!!

மலர்கள்...
மலர்கின்றன...
என்னைகண்டு...
வாடுவதேனோ...!!!

முற்கள் மட்டும்...
சொந்தாமகின்றனவே...
என் முகராசியில்...
கோளாறு....
இருப்பதால் தானோ...!!!

என் பயணமும்...
கரடு முரடானதே...
பாதைகள்...
பிழையாகி...
விட்டாதாக...
உணர்கின்றேனே...!!!

ஏதோ ஒன்று...
தனிமையில்...
கூட்டிச் செல்கின்றது...
தாகம் தீர்ந்திடுமா....
இல்லை அதுவே....
நிரந்தரமாகிடுமா...!!!

அவள்....
வாழ்வு மலர்ந்திட...
கொடுப்பதற்கு...
ஒன்றும்....
இல்லையே என்னிடம்...
கெடுக்காமலாவது...
விலகிச் செல்கின்றேன்...

காலத்தை நோக்கி...
நகர்கின்றேன்....
என் கவிகளுக்கு...
ஓய்வு கொடுத்து...
என்னை....
இழந்துகொண்டே...
அவள் வாழ்வுக்காக...!!!

காகித ஓடம்...!!!





விளை நிலத்தில்....
பயிரிட்டோம்....
விதை நெல்லை...
தொலைத்துவிட்டு...!!!

களை பிடிங்கி...
வாழ்வை...
தொடங்கி...
நிலை தடுமாறி...
நாம் நின்றோம்...!!!

நீதிமான்கள்...
கூடிவிட்டதால்...
சட்டங்கள்...
தலை தெறித்ததோ...!!!

சாமானியர்...
தப்பித்துவிட...
தரித்திரம்...
யாரைத்தொட்டதோ...!!!

யாரை...
வசைபாடி...
யாரிடம்...
முறையிடுவோம்...
யதார்த்தங்களை...!!!

கதிரவனும்...
கோபித்துகொண்டு...
சென்றுவிட்டான்...!!!
இருலவனும்...
தேடிவந்து...
அணைத்துக்...
கொண்டான்...!!!

இருதலைக்கொல்லி...
எறும்புபோல்....
தடுமாறி...
தாகம்கொண்டோம்...!!!

கூட்டான்...
சோற்றுக்குள்....
குழவிகள்...
கூடுகட்டுதே...!!!

குயில்கள்...
குரல் மாற்றி...
அலறுகின்றதே...
யாரைக்கண்டு...!!!

யாவரும்...
ஓடத்தில்...
புறப்பட்டுவிட்டோம்...
ஓடமும்..
கரைவது தெரியாது...!!!

நிலவு....!!!




ஏதோ ஒரு...
புதிய பரவசம்....
என்னைத் தொட்டு...
நலம் விசாரித்தது...!!!

உடம்பெல்லாம்...
புத்தியிர் பெற்று...
புன்னகைத்தது...!!!

மனதை...
உருவிவிட்டு...
உள்ளே...
ஒரு இன்பக்காற்று...
முத்தமிட்டது...!!!

எனக்கே...
புரியாத...
ஒரு ஏக்கம்...
ஏன் இந்த தாக்கம்...!!!

வானத்தில் இருந்து....
புதிய ஓசையா...
இல்லை...
புரியாத பாஷையா...!!!

கண்கள்...
பேச மறுக்கின்றது....
காதில் வந்து...
சொல்லிப்...
போனதோடு சரியா...!!!

நிச்சயம் என்னில்...
ஒரு மாறுதல்...
தெரிகின்றது...
எதனைக்கண்டேன்...
நான் இன்று...!!!

இளவல்...
காத்த கிளிபோல்...
துடித்த மனசு...
புது உவகை...
கொண்டதேன்...!!!

மனசும்...
சுவைத்தது ....
தேனுண்ட ...
சுவையாகவே
உணர்ந்தது...!!!

கண்களும்...
குளமாகின்றது...
கருத்துக்கள்...
சேர்ந்துகொண்டனவா...!!!

நிலவவள்...
நெஞ்சைத்...
தொட்டதால்...
எல்லாமே...
மாறி விட்டதா...!!!

ஏமாற்றம்...!!!



கிடைக்கும்...
ஆனந்தம்...
நழுவிப் போகும்...
நம்மை....
அறியாமலேயே...!!!

வார்த்தை...
ஜாலங்கள்...
மயக்கிடும்...
எம்மை அறியாது...
மயங்கிடும்....!!!

சில...
நிமிடங்கள்...
இன்பத்தில் மிதந்து...
துடித்திடும் உள்ளம்...
தூங்காது...
விழித்திடும் எண்ணம்...!!!

அவள்...
உள்ளம் மட்டும்...
எனக்காக ஏங்கும்...
அந்த...
கற்பனையில் மட்டும்...
நானும் வாழ்கின்றேன்...
நினைவுகள் மட்டுமே...
சுமந்து கொண்டே...!!!!

கண்கள் பனிக்கும்...
அவளைக் காணாது...
உள்ளம் துடிக்கும்...
ஊமையாக...
வாழ்ந்திடவே
எண்ணம் தேடும்...!!!

அவள் தரும்...
வார்த்தைகள்...
ஏமாற்றத்தை...
தருகின்றனவா...
அதுவும் எனக்கொரு...
சுகமான வலி தான்...!!!
வலியுடன்...???

என் உயிர்த்தோழி ...!!!





முதல் முதல் கண்ட...
உண்மை முகம்..
என்னைத்தேடி வந்து...
தாலாட்டிக்கொண்ட...
புதுமை முகம் ...!!!

களங்கமில்லை...
பேசும் திறமை...
எங்கிருந்து வந்து...
அவளை...
ஆட்கொண்டதோ...
அறியாது ...
நான் பார்த்து...
வியந்த நட்பு அவள்...!!!

என்றும் என் மனதில்...
நிரந்தரமாகிப்போன...
நிதர்சனம்...
எனக்காக என்றும்...
துடிக்கும்...
என்னுயிர்த் தோழி அவள்...
எனக்காக மட்டும்...
பிறந்துவிட்ட...
இன்பத் தோழி அவள்...!!!

Friday, January 11, 2013

கனவிலும் உன்னோடு...



வாழ்ந்து...
பழக்கப்பட்டு...
விட்டேன்...
கனவு கண்டு தான்...
பழக்கப்பட்டு...
விட்டேன்... !!!

அவள்...
வருகையில்...
மீண்டும்...
ஒரு...
ஒளிக்கீற்று...
என்னை...
தழுவிச் சென்றதே...!!!

அவள்...
ஆனந்தம்...
எனக்குள்...
கிடைத்த...
பேரானந்தமா...
இல்லை...
பேராசையா...!!!

குறிப்பறிந்து..
பேசும்...
குழந்தை...
உள்ளம்...
இன்று புதுமையானாள்...
எனக்குள்...
நிரந்தரமானாள்...!!!

தெளிந்த...
நீரோடையில்...
மிதந்து...
செல்கின்றேன்...
அவள் புன்னகை...
தாலாட்டியதால்...
மறந்து...
செல்கின்றேன்...!!!

பூவையே...
நீ சூடிக்கொள்ளும்...
மலர்களில்...
வாசனையாக ...
வீசிக்கொண்டு....
இருப்பேன்...
காலம் எல்லாம்...
உன்...
கை கோர்த்து...!!!

Thursday, January 10, 2013

மரணம்



கருணை...
மனம் கொண்டு...
கட்டியணைக்க...
தேடிவரும்...
சொந்தம் தானே...
பிறக்கும் பொழுதே...
உன்னோடு...
பிணைந்துவிட்ட...
பந்தம் தானே...!!!

காற்றுக்கள்...
கொஞ்ச நேரம் அசந்து...
தூங்கிவிட்டால்...
உன் மூச்சுகள்...
முண்டியடிக்குமே...
புதிய முகவுரை...
தேடித்தான்...
தந்தியடிக்குமே...!!!

எல்லோருக்கும்...
எப்பொழுதுமே...
ஒருகாலம் உண்டு...
யார் முந்தி...
போவதில் தானே
சோகமும் உண்டு...!!!

ஆசைகளை மூட்டை கட்டி...
சுமக்கத் துடிக்கும்...
மனிதனே...
மோகங்கள் உன்னை...
வாட்டி வதைக்கின்றனவே...
நீ வாடாமல்...
வாழ்ந்து விடுவாய் என்ற...
நம்பிக்கையில் தானோ...!!!

Wednesday, January 9, 2013

காலத்தை வென்றவள்...!!!




என் காலத்தை...
சொன்னவளே...
நீ...
தூங்குவது...
முறை தானோ...!!!

உன் நினைவில்...
நான் இங்கே...
உன்னை...
கொண்டுபோகத்....
துடிக்கும் கழுகள்...
ஏன் அங்கே...!!!

காத்திருப்பு ...
கானலாகப்...
போய் விடுமா...
என்...
கனவுகளை...
சிதைத்து விடுமா...!!!

உன்னுள்...
என் உணர்வுகளை...
புதைத்துக்கொண்டேன்...
உன்னைத் தானே...
தினமும்...
நினைத்துக்கொண்டேன்...!!!

இது காதல்...
வார்த்தைகளா...
இல்லை...
கலக்கத்தில் வரும்...
உணர்வுகளின்....
மூச்சுக்களா...!!!

பாவத்தில் தான்...
எனது பாதைகளை...
மாற்றிக்கொண்டேனா...
இல்லை...
கிறக்கத்தில் என்னை...
மாற்றிக்கொண்டேனா...!!!

அவள்...
நினைவுகளில்....
தினமும்...
தாலாட்டுப்...
பாடுகின்றேன்...
என் ...
இதயத்தில் அவள்....
தூங்குவதால்...!!!

மீனவன்





தண்ணீரிலும்...
கண்ணீரிலும்...
வெந்திடும்...
இவர்கள் காலம்...!!!

கடல் அன்னை...
அணைப்பினிலே...
ஓடிடும்...
இவர்கள் வாழ்வோ...!!!

நிலையில்லா வாழ்வு....
நிம்மதியில்லா....
ஓடம் தானே...
இவர்கள் காலம்...!!!

நித்திரை இல்லா...
பத்திரமாக....
திரும்பும் வரை...
ஏங்கும் உள்ளங்கள் தான்...
எத்தனை எத்தனை...!!!

கடல் மாதா...
கருணை...
தொலைத்தால்...
கலங்கிடும் ஊரே...!!!

வயிற்றுப்பசி...
ஆற்றிடவே...
அனுபவிக்கும்...
வேதனைகள் தான்...
எத்தனை...!!!

உப்பு நீரில்...
வாழ்வதால்...
தன்னம்பிக்கை...
இவர்கள்...
கூடப்பிறந்த சொத்தோ...!!!

தன் மானம்...
விட்டுக்கொடுக்கா...
போராடும் குணம்...
இவர்கள் வசமோ...!!!

எத்தனை...
உள்ளங்களுக்கு...
தெரியும்...
இவர்கள் படும்...
வேதனை சோதனை...!!!

விவசாயி...
சேற்றில்...
கால்...
வைத்தால் தான்...
மனிதனுக்கு சோறு...!!!

மீனவன்...
கடலில்...
கால்...
வைத்தால் தான்...
சோற்றுக்கே குழம்பு....

தெளிவடைந்தாள்...




இதயத்தில்...
இருந்த...
முற்கள் தகர்ந்து....
உண்மை....
புரிந்த பொழுது...
தெளிவடைந்தாள்...!!!

இதயமும் இதயமும்...
உரசிக் கொண்டன..
இன்பக் காற்றை...
சுவாசித்துக்கொண்டன...!!!

கண்களும் கண்களும்...
கௌவிக் கொண்டன...
கனவில் மிதந்தே...
கவி பாடி...
முடித்தன...!!!

நாணம்...
தேடி வந்தே...
அவளை....
அனைத்தபொழுது...
கோவம்...
கொண்டேன்...
என்னை மறந்தே....!!!

காதல் பூக்கள்...
என்னவளை....
தாலாட்டத் தான்...
உருவம்...
எடுத்துக்கொண்டனவா ...!!!

நாடுகள்...
சுருங்கிக்கொண்டன...
என்னவள்...
என் பக்கம்...
வந்தபொழுது...
உலகமே...
எனக்காக ...
திரும்பிக் கொண்டன...
என்னை...
விரும்பிக் கொண்டன ...!!!

அவள்...
இதயச் சுவடுகளில்....
நிரந்தரமாகிவிட்ட...
பின் தானே....
நானும்...
நிரந்தரமானேன்...
மனிதனாக...!!!

தமிழும் சாதியமும்





தெருவுக்கு தெரு---
தமிழன் சோதரன் ...
இரத்தமும் தான்...
சிவப்பு...!!!

சந்திக்கு சந்தி...
சாதியக்கொடிகள்...
தொட்டால் மட்டும்...
தீட்டாம்...

கோயில் வாசலிலே...
செருப்பும்...
கீழ் சாதியுமாம்...
சாதிக்கொடுமைகளின்...
ஆரம்ப சுவடுகள்...!!!

குருக்கள்...
கையில் மட்டும்...
கீழ் சாதிக்காரன்...
தொட்டும்...
ஜொலிக்கும் பணம்...
புதுப்பொலிவோடு...!!!

எதனைக்கண்டு...
சாதிபிரித்தோம்....
நிறத்தைக்கண்டா?...
நிலத்தைக்கண்டா?...!!!

கோமான்களும்....
கோயில்களும் ...
கோவணம்...
கட்டி விட்டன...!!!

குன்றுகளும்...
குளங்களும்....
வேலி போட்டன...
விசயம் தெரியாமலே...!!!

பச்சைக்...
குழந்தைகளுக்கும்...
பருக்கப்பட்டன...
தமிழனின்...
கோடரி விஷம்...!!!

ஒற்றுமைகளை...
தொலைத்தோம்...
ஒதுங்கி வாழ...
பழகிக்கொண்டோம்...!!!

நித்தம் ஒரு...
சாதிக்கொடிகள்...
பட்டொளி வீசுகின்றன...
கசங்கிப்போவது...
தெரியாது...!!!

தமிழன் தலையில்...
தோன்றிய...
புற்றுநோய்க்கு...
மாற்று மருந்தை...
தேடுகின்றோம்...
ஏமாளிகளாக....!!!

Tuesday, January 8, 2013

முடியாது



பகல் கனவுகள்...
கண்டு வாழத் துடிக்கும்...
உலகத்தில்...
நானும் சேர்ந்துகொண்டு...
நித்திரை மாதிரி...
நடிக்கின்றேன்...
நினைவுகள் இருந்தும்...
நீந்திக்கரை...
சேர்வதற்காகவே...!!!

போர்த்திக்கொண்டு...
புதையல் தேடுகின்றேன்...
வேர்த்து நான்...
அறியாமலேயே...
வாழத் துடிக்கின்றேன்...
நேற்றைய கனவில்...
நாளைய தினத்தை..
மறந்து தான்
போகின்றேன்...
நாற்றம் அடிக்கும் முன்னர்...
விழித்துக் கொள்ளத்தான்...
நினைக்கின்றேன்...!!!

உதாரணங்கள்...
எனக்குள்ளேயே...
நிறைந்து மறைந்து...
கிடக்கின்றன...
மனதாலேயே...
தினம் தினம்...
அளந்து பார்க்கின்றேன்...
மறைந்து...
திசைமாறிப்-
போவதால் தானோ...
என் கால்களும்...
தடுமாறிப்போகின்றனவோ...!!!

Sunday, January 6, 2013

உணர்வுகள்


உள்ளத்தில் பிறந்து...
ஊமை நரம்புகளில்...
மறைந்து...
கனவுகளில் கரைந்து...
கண்ணீரில் வெளியேறி...
காவியம் படைக்கின்ற...
கனவுகளே...!!!


ஊமைகளின் பாசைகள்...
கற்றுத்தான்...
வாழ நினைத்தீரோ...
வேதனை தினம் தினம்...
சுமந்து தான்...
கானல் ஆனீரோ...!!!


கண்ட சொற்கள்...
புது வடிவம் பெற்று...
புதிராக தினம் தினம் வந்து...
மறைந்து தான்...
போகின்றதே...
மறந்து போவதால் தானோ...!!!


காலங்கள்...
போதை...
கொண்டுவிட்டதால்...
பாதைகள் கூட...
தடுமாறுகின்றதோ...
உணர்வுகளைத்-
தொலைத்துவிட்டு...
பேதைகளாகவே...!!!
[கவிஞர் இராஜேந்திரா]