Friday, March 30, 2012

நான் கண்டவள்


தோகை விரித்து
சிறகினில்.....
மறைத்துக்கொண்டே
என்னுள்.......
 புதைந்துவிட்டவள்...!!!

கண்ணால்
கதை பேசி
இதயத்தில்
எனை சுமந்து
பகுத்தறிவில்
கலந்து விட்டவள்

நான்
பேசும் பொழுது
கணக்கெடுத்து
தான் பேசும்மொழியை
சுவையாய் தந்தவள்

என்னுள்
தன்னை புதைத்துக்கொண்டவள்
புரியாத புதிராக
 நான் வாடிய பொழுது
புதிராய் வந்து
ஒட்டிக்கொண்டவள்

இவள்
நான் கண்ட
புதுமைப் பெண்ணா
இல்லை நான்
போற்றும் புகழ்ச்சி பெண்ணா???

நான்
கண்டு கொண்டேன்
என்னுள் மட்டும்
அவள் இருப்பதை

இன்றோ
அவள் முகம் மலர்ந்தது
இந்த வரவுக்காகவே
வாழ்ந்தேன்
வாழ்ந்து கொண்டு
இருக்கின்றேன்..........

நான் இருட்டில் வாழ்கின்றேன்


உலகம் பிரகாசித்தது
உண்மை தெரியாது
என்னை யாசித்தது
என் நிலைமை தெரியாது
காலை மாலை மாறிப்போனது
கனவுகளாக மட்டுமே.

எதையோ பறி கொடுத்தேன்
புரியாத புதிராக தினம் தினம்
நித்தம் ஒரு வாட்டத்தை கண்டேன்
என்னை உருக்க கண்டேன்.

இருட்டு பழகிப் போனதொன்று
என்னோடு ஒட்டிக்கொண்ட உறவு
வெளிச்சம் என்னைக் கண்டு
வெறுத்து ஓடும் உணர்வு

தேடுகின்றேன்
என்னை இழந்து தேடுகின்றேன்
என்னை மறந்ததால் வாடுகின்றேன்
என் பயணம்
இருட்டோடு சேர்ந்து கொண்டதால்??????

காதல்


கண்களால் பேசி
உடலால்
உருக வைத்துவிடும்


உண்மைகள்
செத்தாலும்
உயிர்கள்
உரித்தெடுக்கும்

காமங்கள்
வழியனுப்ப
துடிக்கும்
உணர்வுகளை
தொலைத்து விட்டு


தூக்கமும் சேர்ந்தே
நொந்து போகும்
நெஞ்சம்
வெந்தபடியே

இறுமாப்புக்
கொண்டது
இதயங்களை
கொன்று விடும்


உண்மைகள்
கசந்து எதையோ
உட்கொள்ள
துடித்து விடும்

ஆணும் பெண்ணும்
ஆரோக்கியமாக
பேசினர் அன்று
இன்றோ
அளவெடுத்துப்
பேசுகின்றனர்
கொச்சையாக.......

காதல்
முள்ளில் போட்டு
எடுக்க துடிக்கின்றோம்
நாடகங்களில்
வேஷங்கள்
போட்டு நடிகர்களாக??????

பார்வையின் தடங்கள்


இதயத்தில் விழுந்தாள் ,
இசையாய் விழுந்தாள்
இனிமையை தந்தாள்
என்னை வென்றாள்

அவன் கண்களால் பேசினாள்
கவிதை பிறந்தது
அருவியாய் விழுந்தாள்
இசையின் இனிமை பிறந்தது..

வித்தைக்காரி என்னை-
ஆட்கொள்ள தெரிந்த சூனியக்காரி
என்னில் தன்னை விதைக்க-
தெரிந்த விவசாயி.

பட்டாம் பூச்சிகள் விலகிச்-
செல்லும் அவளைக் கண்டால்
பொறாமை பிடிச்ச பூச்சிகள்
என்னவள் அழகைக் கண்டு
பொறுக்காத வண்ணத்துப் பூச்சிகள்,

ஆளப்பிறந்தவள்
என்னோடு வாழப் பிறந்தவள்
வாழ்வின் தத்துவமும் அவளே!!!

பாதைகள்


பகுத்தறிவில் கூட்டிச்
சென்றவள்.
பாதைகள் அளந்து
என்னை அள்ளிச் சென்றவள்!!!

முட்கம்பிகள்
நிறைந்த உலகத்திலே
பூக்கள் தூவி
புது வழி காட்டிய பூ அவள்!!!

காற்றின் திசை அறிந்து
வாழ்வின் தத்துவம்
சொல்லித் தந்த ஆசான் அவள்!!!

இன்று ஒரு வருடல்
என்னை அறியாமலே
ஒரு நெருடல்!!!
பாதைகள்....
தடம் மாறுகின்றனவா!!!

பாசத்தில் போடும் வேசங்கள்
விஷங்களாக சாய்ந்திடுமா?
தாகத்தில் தடங்கள் மாறிடுமா???
காலம் இட்ட கட்டளை
பாதைகள்....
விலகிச் செல்கின்றதே!!!
வாசல் கடந்து வாரித்தை கடந்து
கோலங்கள் சிதைந்து!!!

தெரியாது


திரும்பி பார்த்த பொழுது
திசை தெரியாத காற்றில்
மிதந்து சென்றாள்!!!

கைகளில்...
ஏதோ ஒரு குறுந்தகடு
கண்களில்...
மட்டும் ஏதோ கற்பனை
இவள் பாடம் படிக்கின்றாளா??
இல்லை என்னைப் படிக்கின்றாளா???

கன்னக் குழியில் என்னை வைத்து
கரம் ஆடுகின்றாளா.
மெதுமையான கை விரலால்.

நாணத்தால் வந்து.....
என் நாகரீகத்தை
கெடுத்து செல்கின்றாளே?
அவள் நாகரீகமானவளா???

கேள்விக்கணைகள் மட்டும்...
தெறிக்கின்றனவே
பதிலை தொலைத்துவிட்டு
தேடுகின்றேன் தெரியாமலே????

திருடி


தொலைத்து விட்டேன்
என்னில் எதையோ
தொலைத்துவிட்டேன்!!!

தூங்கப் போனேன்
தொலைந்தது தூக்கம்!!!
சாப்பிட வந்தேன்
தொலைந்தது பசியும்!!!

நடந்து சென்றேன்
கடந்து சென்று விட்டேன்
போகவேண்டிய இடத்தை
மறந்து சென்று விட்டேன்!!!

அவளின் ஒரு பார்வையில்
இவ்வளவு விசயமா?
இல்லை விஷமா???

கண்ணால் மட்டும் தானே
பேசினாள்.
கண்டபடி புலம்புவது நானல்லவோ!!!

காயங்கள் பட்டது போல்
ஏதோ ஒரு வலி கொல்லுதே
தினம் என்னை மெல்லுதே!!!

அவள் என்னிடம் இருந்து
எதனை எடுத்து சென்றாள்?
இல்லை......
இல்லை திருடி சென்றாள்!!!

ஓரப் பார்வையால்
ஒதுங்க வைத்தவள்
என்னை....
மயங்க வைத்தவள்!!!

தேடுகின்றேன்....
தொலைத்துவிட்டு தேடுகின்றேன்
எடுத்து சென்றவள்....
தூங்குகின்றாள்
தொலைத்து விட்டு..
ஏங்குகின்றேன்????

வாடும் மலர்


உரசிச் சென்றது..
உள்ளத்தில் நின்றே
கார்திகை தீபம் போல்
மனதில் ஒரு சுடர் ஒளி!!!

அளந்து பேசும் அவளோ...
எனக்கொரு அற்புதம்!!!
தென்றலை...
விழுங்கியவளா அவள்!!!
ஏக்கத்தில்...
தவிக்க விட்டது ஏனோ!!!

என் இதயம்....
அவளுக்கு புரியவில்லையா
புரிந்தும் நடிக்கின்றாளா???
என்னை விட...
பெரிய நடிகையா அவள்???

இல்லை ஒரு தலையாக வாழ்ந்து
நான் மட்டும் நடிக்கின்றேனா?
என்னவள் எனக்காக பூர்த்தவள்
கவிதை மலரவள்!!!

வருவாள் என் அருகே
தருவாள் தன்னையே
எனக்காக...
காத்து இருப்பேன் காலம் காலமாக!!!!!

நஞ்சான நட்பு


தோளில் கை போட்டு
நெஞ்சால் துடி துடித்து
என் கண்ணில் தூசி கண்டு
அவன் கண்கள் கலங்கியது
அதனை நினைத்தே...
என்னிதயம் வென்றது!!!

இன்றோ வாள் கொண்டு...
கழுத்தறுக்க துடிக்கும்
குணம் கண்டு...
என்னிதயம் வெந்தது!!!

கற்கண்டு...
பேச்சில் மயங்கினேன்
இன்றோ பேச்சுக்கு பேச்சு
விஷம் கண்டு
என்னிதயம் வெறுத்தது!!!

நட்பு ஒரு நாடகம் போல்
உரைத்தது...
உண்மையானர்வர்களை கூட...
இப்பொழுது என்னிதயம்
ஏற்க மறுக்கின்றதே
போலிகளை கண்டு கண்டு.

திமிர்


இருக்காதா
என்னிதயத்தில் இருந்து கொண்டு
என்னையே...
ஆட்டிப்படைக்கின்றாளே!!!!

கனவில்...
மட்டுமே உறவாடுகின்றாள்
கற்பனையில்...
மனம் மாற்றுகின்றாள்
தேவதயை சுமந்து...
தினம் வாடுகின்றேன் சுகமாகவே!!!

எத்தனை...
வடுக்கள் இதயத்தில்
என்னை மறக்க
ஏன் இந்த நாடகங்கள்!!!

அவளை சுமக்கின்றேன்...
என் இதயம் அடங்கும் வரைக்கும்
சுமப்பேன்...
வீணாகப் போகாது அவள் சுமை
சுமந்து கொண்டே இருப்பேன்...
அந்த திமிர் பிடித்த தேவதயை???

கண்


இதயத்தில்
பூட்டி வைத்து நித்தம்..
அழகு பார்க்கின்றேன்...

இதயத்தில்...
பூத்தவள் என்னோடு
மட்டும் வாழ்கின்றாள்....

யாருக்கும்...
வஞ்சமில்லை
என்னுடைய நெஞ்சத்தில் மட்டும்
அவள் வாழ்வதால்!!!.

யாருக்கும்...
பஞ்சம் இல்லை....
அவளிடம் நான் சேர்வதால்

கண்கள்...
எனக்கு கலங்கியதில்லை
பார்வையாக அவள் இருப்பதால்

தேவதை...
என்னை ஆண்டுகொண்டு....
இருக்கும் புதுத் தோகையவள்???

துடிப்பு


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து கொண்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

பூவை...
கொய்யவும் முடியவில்லை...
பூவையவளை உணரவும்...
முடியவில்லை!!!

என்னவள்...
எனக்கானவள்...
என்னுள் புதைந்தவள்...
எனக்காக மட்டுமே பிறந்தவள்!!!

வாழ்வேன்...
என்னவளை இதயத்தில் மட்டும்....
சுமந்தே வாழ்வேன்...
என் இதயத் துடிப்பு அடங்கும் வரைக்கும்!!!

பார்வை


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து விட்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

ஏக்கம்


நானாக...
தேடிப்போய் இழுத்து வந்து
அடைத்தேன் என் இதயத்தில்
அவளை மறக்க முடியாத
ஒரு ஏக்கம்!!!

பாலை வனமாக...
நான் உணர்வதே
அவள் மௌனத்தில்
நான் சிதையும் தாக்கம் !!!

எத்தனை முறை....
என்னை எரித்துக்கொள்வேன்
என்னையே நான் மறந்தே!!!

காலம்...
இட்ட கட்டளையா
கனவில் மட்டும் நான்
படும் தண்டனையா ??!!!

தீயே...
நீ கூட துரோகம் செய்யாதே
என்னை எரித்துச் செல்
இல்லை அவளிடம் தூது செல்!!!

எரிந்து கொண்டு இருக்கும்...
என் இதயம்... தீயையும் எரிக்கும்
என்று உரத்துச் சொல்!!!

அவள்...
எனக்கு மட்டும் சொந்தம்
எனக்குள் சொந்தம்
இல்லையேல் இல்லை என் உள்ளம்!!!

தவிப்பு


என்னால்...முடியவில்லை
என்னுள் புதைந்தவளை...
மறக்க முடியவில்லை!!!

ஏதோ ஒரு...
கண்ணீர் குவளை...
என் கண்களில்....
ஏன் தான் கொட்டியதோ!!!

நித்தம்....
நீராவியாகி என் மேல்...
ஏன் தான் முட்டியதோ!!!

பாவியவள்...
தூக்கத்தை கெடுத்து...
துண்டாடுகின்றாள்...
என் இதயத்தையே!!!

நெருப்பில்....
தூங்குகின்றேன்....
நினைவெல்லாம்..
அவளை சுமந்தே!!!

நீ மட்டும்....
என்னை கொளுத்திவிட்டு...
நிம்மதியாக தூங்குகின்றாய்..
என்னவளே!!!

இதயம்...
கனக்கின்றது...
உன்னை நான்...
சுமப்பதால் இல்லை...
உன் உயிரை நீ வெறுப்பதால்!!!

என் உயிர்த் தோழி


என்னுள்....
புகுந்து விட்ட...
இன்னுமொரு உறவு!!!

என்....
வேதனை கண்டு...
துடித்த என்னுயிர் அவள்!!!

காலம்....
அவளை...
கை பிடித்து தந்தது!!!

என்...
உயிர்த் தோழியாக...
உறவாட வைத்தது!!!

என்...
சுமைகளை அவளும்....
சுமந்தாள் கண்ணீரோடு!!!

என்....
மூச்சு அடங்கும்....
ஒரு நாள்....
அன்றும் தொடர்வாள்...
என் மூச்சுக்காற்றோடு!!!

கனா கண்டேனடி தோழி.


கலங்கரை...
விளக்கு...
வா என்று அழைத்தது!!!

கால்கள்...
என்னை நோக்கி...
போ என்று சொன்னது!!!

வாடிய பயிர்கள்...
பச்சை பசேல் என்று...
கண்ணை உரசியது!!!

நாடெல்லாம்...
பொன்மாரி பொழிந்தது....
உவகையோடு!!!

நெஞ்சில்....
வஞ்சமில்லா மனிதர்கள்...
உலா வந்தனர் உண்மையோடு!!!

பாசங்கள்....
வேசங்கள் மறந்து ...
கை கோர்த்துக்கொண்டது!!!

என்ன அதிசயம்....
எல்லாமே சொர்க்கமாக....
தெரிந்தது...
நரகங்கள் தொலைந்து!!!

நடை...
பாதைகள்...
வெறிச்சோடி...
பதை பதைத்தது!!!

குடும்பங்கள்....
கூட்டுக் குடும்பங்களாகி
கண்ணைப் பறித்தது!!!!

எல்லாமே....
என்னை சுற்றி...
நன்றாக நடந்தது...
தூக்கத்தில் மட்டும்!!!

புதுமைப் பெண்


பாரதி கண்ட...
தமிழ்...
புதுமைப் பெண்கள்...
தடம் பதிக்க....
தொடங்கி விட்டார்கள்...
உலகெல்லாம்....

அடிமை....
விலங்குடைத்து....
விலங்கு போட்டு....
இழுத்துச் செல்லும்....
துணிவும்
பிறந்து விட்டது...
எங்கள் மாதர்களுக்கு!!!

குத்து விளக்காக.....
வாசல் படி தாண்டா....
எரிந்து கொண்டு இருந்த...
தேவதைகள்...
இன்று வேதனைகள் கண்டு....
துடித்து....
வேங்கைகளாகவும் ....
மாறியும் விட்டார்கள்!!!

எங்கும்....
பெண்கள் சாதனைகள்....
எல்லாம் ஆண்களிடம்....
கண்ட வேதனைகள்!!!

பூட்டிக்கிடந்தவர்கள்....
பூகம்பம் ஆனார்கள்....
இன்று....
புரிந்து கொண்டார்கள்...
திமிர் பிடித்த...
ஆடவர் இனம்...
பாரதி கண்ட புதுமை....
பெண்களை...
புரிந்து கொண்டார்கள்...!!!

என் அழகு தாரகை அவள்


நிலவைப் பார்த்து....
சொக்கிப்போய்...
நின்றேன் பல முறை!!!

நதிக்கரை....
ஓரத்தில்...
நான் நடந்தேன்...
என்னை மறந்தே!!!

உலக....
வரை படத்தை
உட்காந்தே...
ரசித்தேன்...
உண்மையாகவே!!!

காதல்....
வார்த்தைகள் கேட்டு...
எனக்குள்...
சிரித்துக்கொண்டேன்!!!

அழகிகளை....
கண்டதுண்டு...
அவர்களிடம் அறிவை.....
கண்டதில்லை!!!

ஆளுமை...
கண்டதுண்டு...
பெண்மையை...
கண்டதில்லை!!!

என்....
இதய தேவதையிடம்...
எல்லாம் கண்டேன்...
அவள் அழகும்...
அறிவின் முன்னே ...
தோற்றுப் போனேன்.
என்னை இழந்து!!!

அவள்...
என்னிதயத்தை...
அலங்கரித்தாள்...
அந்த அழகுத் தாரகை...
என்னையே.....
அலங்கரித்தாள்...
புன்னைகை...
என்னும் பொன்னகையால்...!!!

இராட்சசி


என் எலும்பை...
உருக்கி...
சுவை பார்க்கின்றாயா?!!!

உன்...
விரதம் முடியவில்லையா...
இரத்த பசி அடங்கவில்லையா?!!!

காதல் கொண்டேன்...
கனவில் தினம் மிதந்தேன்...
உன்னால் இன்று தவித்தேன்!!!

உண்மையை சொல்லடி....
என்னவளே...
உண்மையை...
மட்டும் சொல்லடி...
உனக்குள் நான் தான்...
துணிந்து சொல்லடி
என்னவளே!!!!

பாடையில் ஏற்ற....
துணிந்து விட்டாய் இராட்சசி...
போக முடியவில்லை..
உன்னை தவிக்க விட்டு!!!

காலத்தில் என்னை
ஆளும் வேதனை தான்....
அடங்கட்டும்....
எனக்குள் அடங்கட்டும்!!!

என்னுயிர்...
அழிந்து போகட்டும்...
உன் நினைவு அழியா...
என் உடல் மட்டும் அழியட்டும்!!!

எனக்குள் ஓர் கடிதம்


முகவரி...
தொலைத்து விட்டு...
முகவுரை தேடுகின்றேன்!!!

காதலை....
மூடி வைத்து....
கவியுரை வடிக்கின்றேன்!!!

இதயத்தில்...
கோயில் கட்டி...
சாமியை தேடுகின்றேன்!!!

காலத்தை...
தொலைத்துவிட்டு...
கருணையாய் பாடுகின்றேன்!!!

என்னவள்...
விலாசம் எனக்குள்...
மறைத்து வைத்து...
எங்கேயோ வாடுகின்றேன்...

அவள்....
ஒரு நிலவு...
ரசிக்கின்றேன்...
தினம் தினம்....
வசிக்கின்றேன்...
அவள் மோகத்தில்...
என்னையே மறந்து!!!

பாவம் அவள்...
பார்வையில்...
கள்ளம் இல்லை....
கருணை உள்ளம்...
மனதில்....
வஞ்சம் இல்லை!!!

எனக்குள்...
ஏன் இந்த வஞ்சம்...
அவள் வார்த்தையில்...
நான் கொண்ட தஞ்சமா?...

எனக்குள்...
ஏதோ ஒரு மாற்றம்...
என்னை அறியாது...
ஒரு வாட்டம்...
அவள் மேல் ஒரு நாட்டம்!!!

தூது...
செல்லாயோ தென்றலே....
என்னவள் விலாசத்தை....
தேடிச் செல்லாயோ....????

அற்புதம்


எத்தனை....
ஜென்மம்....
வேணும் எனக்கு....
என்னிதயத்தில்...
உன்னை சுமக்கவே!!!

அத்தனை...
ஜென்மமும் போதுமா...???
உன்னைத் தான்...
நான் மறப்பதற்கு!!!

பாவை....
உன்னை...
அடைத்து வைத்து....
அழகு பார்க்கின்றேன்....
என்னை...
மறைத்துக்கொண்டே!!!

உன்...
உதடுகளில் இருந்து....
உதிரும் வார்த்தைகள்...
என்னை...
தாலாட்டுகின்றதே!!!!

கண் திறப்பதற்கு.....
மனமின்றி....
தவிக்கின்றேன்....
உன்னைத் தவிர....
வேறு எதுவுமே பார்க்க.....
விருப்பம் இன்றி....
துடிக்கின்றேன்!!!

காலம்...
ஓடும் பொழுது...
என்னிதய துடிப்பும்....
சேர்ந்தே துடிக்கின்றதே!!!!

ஏன் இந்த...
மயான வேதனை....
எனக்குள் மட்டும்...
எதற்கு சோதனை!!!

என்னவளே....
நீ என்னுடைய....
அற்புதம்....
நீ இன்றி...
எனக்கேன்...
சுயம் வரம்!!!

வேண்டாம்...
சுயநலம்....
என்னவளே...
தொந்தரவு...
பண்ணேன் உன்னை....
என்னில் நீ வாழ்வதால்...!!!

மகாராணி


என்னை....
ஆளும் தேவதையே....
எனக்குள்...
ஏன் வந்து புகுந்து...
கொண்டாய்!!!

பாதையில்....
போனவனை ஏனடி...
உன் வலையில்...
இழுத்துக் கொண்டாய்!!!

நெற்றி....
வேர்வை சிந்தி...
உழைத்தவன் நான்....
இன்றோ...
உன் நினைவில்...
நிரந்தரமாக...
அழிகின்றேன்!!!

ஆழப் பிறந்தவள் நீ....
என்னை...
அழவைக்க...
பிறந்தவளும் நீயே!!!!

அழுவதிலும்...
ஒரு சுகம்...
உன்னால்..
அழுவதிலும்...
ஒரு சுகம் தான்!!!

காதல்....
கோட்டையில் நீயோ....
ஒரு ராணி.....
எனக்குள்....
பூத்துக் குலுங்கும்....
மகரந்தமும் நீயே!!!

முடி...
சூடத்தான் தான்...
துடிக்கின்றேன்.....
உனக்கு மாலை சூடி....
மகுடம் சூடவே...!!!!

ஓவியம்

என்னில்...
பூத்த ஓவியம்...
கண்ணீரில்...
கரைந்ததோ காவியம்!!!!

நான் தீட்டினேன்-
அவள்...
நினைவினால்...

நிம்மதி இழந்தேன்....
அவள் பாசத்தாள்!!!

அவளால்..
பல...
கவியுரை வடித்தேன்...
கல்லறைக்கு....
சொந்தமாகுமோ...???

புவியுரையில்...
முகம் புதைத்தேன்....
புன்னகையில்....
என்னை....
அணைத்துக்கொண்டது!!!

புரியாத...
புதிரா அவள்...
புன்னகையின் மலரா....
இல்லை....
என் சமாதியில்....
சிரிக்கப்போகும் உறவா...???

பாவத்தின்..
சுடர் அவள்....
என்னில் படர்வாள் அவள்....!!!!

உறைந்தது இதயம்


காற்று...
வேகத்தில்...
வந்த ஒரு செய்தி...
கண்ணை...
பறித்தது...
நிம்மதி...
தொலைந்தது...!!!!

நினைவே....
ஆடியது...
நின்று போகத்...
துடித்தது...!!!

அவள்...
காலில்...
வந்த துன்பம்....
என் கண்ணை...
அறுத்துச் சென்றது...!!!

அங்கே...
இரத்த நாளங்கள்....
தெரிந்தது...
இங்கே...
இதய...
நாளங்கள்...
அறுந்தது...!!!

கடவுளின்...
சோதனை...
கணக்கற்றுப்...
போனதா?...
இல்லை...
கவலையற்றுப்...
போனதா...!!!

கடவுளை....
நம்புகின்றேன்....
அவனோ...
கதை...
முடிக்கப்....
பார்க்கின்றான்...!!!

அவள்...
வரவுக்காக...
காத்து நிற்க்கின்றேன்...
வந்தததும்....
மீண்டும்...
வருகின்றேன்...!!!

என்னவளின் மனது...


பூக்களே...
தோற்றுவிடும்...
பூவையின்...
இதயத்தில்...!!!

கபடம்....
அற்ற...
கலக்கமற்ற...
கவிதை...
அவள்...!!!

நித்தம்...
அவள் நினைவுகள்...
துடிக்கும்...
உலகைப்...
பார்த்தே...!!!

தூங்காது...
அவள் விழிகள்...
துயரம்...
கண்டால்...
அடங்காது...
அவள்...
இமைகள்...!!!

பார்வைக்கோ...
ஒரு...
தேவதை...
பகுத்தறிவில்...
அவள் ஒரு....
தாரகை...!!!

நொந்தவர்களுக்கோ...
அவள்...
ஒரு...
ஒளி விளக்கு...
தீபம்...
ஏற்றிடும்...
திருவிளக்கு...!!!

அடுத்தவர்...
இதயம்...
நொந்தால்...
துடித்திடும்...
தூயவள்...!!!

எனக்குள்....
புகுந்து விட்ட...
புதியவள்...
புயலவள்...
புரியாதவர்களுக்கு...!!!

உன்னோடு தான்...!!!


உறவாடும்....
உணர்வும்...
உன்னோடு...
தான்...!!!

உள்ளம்...
பேசும்...
வாய்ப்பும்...
உன்னோடு...
தான்...!!!

கடவுள்...
தந்த வரமும்...
உன்னோடு...
தான்...!!!

கடந்து...
போகத் துடிக்கும்...
கணமும் ....
உன்னோடு...
தான்...!!!

காடும் மேடும்...
உன்னோடு...
தான்...!!!

களைந்து...
போகத் துடிக்கும்...
நினைவும்...
உன்னோடு...
தான்...!!!

காதல்....
பாட்டும்...
உன்னோடு...
தான்...!!!

விழிகள் கொண்டு....
வலிகள்...
போக்கியவளே...
பணிவேன்...
இன்று...
உன்னோடு...
தான்....!!!

கவிதை...
சொல்லும்....
தேவதையே ...
என் கவிதை....
சொல்லும்...
தேவதையே...
காலமெல்லாம்...
உன்னோடு...
தான்...!!!

Tuesday, March 27, 2012

மஞ்சள் நிலா



பொன்னவள்...
பொன்னிறத்தில்..
புண்ணியம்...
செய்ததோ ...
அவள் மேல்...
புதுமையா...
படர்ந்திடவே!!!

காரிகை....
கை பட்டு...
அழகில் தான் ...
புதைந்து...
கொண்டதோ...
தோரணையில்..!!!

முதுமை....
கொண்ட...
என்...
இதயம் மட்டும்...
வாடுகின்றதே...
அவள் வரவு இழந்து!!!

நிலா...
மஞ்சள் நிலா...
புன்னகை...
சொட்டும்...
புதிய நிலா..!!!

அவள்...
கை விரல் பட்டு...
என்...
இளமை ...
ஊஞ்சல் ...
ஆடுகின்றதே..!!!

உன்னிதயத்தில்...
என்னிதயம் மோதி...
பரிசுத்தமானதே..!!!

பைங்கிளியே...
உன்...
வரவுக்காக...
ஏங்குகின்றேன்....
வருவாயா...
உன்னைத் தருவாயா....!!!

இறைவனுக்கு ஒரு கடிதம்.

கலங்கிய....
கண்கைளின்...
கசிவை எடுத்து....
மையில் தோய்த்து...
நான்....
வரையும்..
ஒரு மடல்...
என்னவளுக்காக...!!!

பாவத்தில்....
தினம்...
பள்ளி கொள்கின்றேன்...
அவள்...
மோகத்தில்...
தினம்...
என்னைக் கொல்கின்றேன்...!!!

கண்களைக்...
கட்டிக்கொண்டு...
என்னையே...
நொந்துகொள்கின்றேன்....
கவிகளை வடித்து...
கண்ணீரோடு....
சேர்த்துக் கொள்கின்றேன்...!!!

காலங்களில்...
என்னுள்....
கலந்துவிட்டவள்...
தேவதையாக....
உருவம்...
எடுத்துக்கொண்டவள்...!!!

இன்றோ...
புரிந்து கொண்டவள்...
புரிந்தும் புரியாத....
புதிராக வாழ்கின்றாளே...!!!

புதுமை கொண்ட...
என்னுள்ளம்...
அவளுக்காக....
மட்டும்...
பூக்கட்டும்...
புனிதமாகவே...!!!

அழியாத காதல்



காதலர் தினம்...
எனக்கும் உனக்குமா..???
இல்லை....
வருடம் வருடம் ...
காதல்...
செய்யும் தோழர்களுக்கா...!!!

நெஞ்சிலே...
தினம் தினம் ....
கொண்டாடுகின்றேன்....
உனக்காக...
காதல் தினம்....
அதிலே...
எங்களுக்கேன்...
தனியான தினம்...!!!

வாழ்வே....
ஒரு தேரோட்டம்....
நீ தானே...
என் பூந்தோட்டம்...
உன்னை....
காப்பது தானே...
என் கால ஓட்டம்..!!!

காதலர் தினம்....
கனவுகளில்...
மிதப்பவருக்கு...
காணிக்கையாகட்டும்...!!!

உன்னை...
தினம்...
சுமக்கும் எனக்கோ...
தினம் தினம்...
காதலர் தினம் தானே...!!!!!!!!!!!!

தனிமையும் இனிமை

எனக்குள்...
நான் ...
போட்டுக்கொண்ட வேலி...

காலம்...
கை...
விலங்கிட்டது...
கனவுகள்...
துரத்தி வந்து ....
என்னை ...
பூட்டி...
வைத்தது ...
ஊமையாக...!!!

தினம்...
அவள்...
வேதனை...
எனக்கு...
மட்டுமே...
சொந்தமானதே...!!!

புரிந்து...
கொண்டவள்....
புரியாத மாதிரி...
நடிக்கின்றாளே...
புழுவாகத் துடிப்பது...
நான் தானே...!!!!

தனிமை...
நான் விரும்பும்...
கோயில்...!!!

எனக்குள்...
முடியட்டும்...
ஆராதனை....
தனிமையா....
போகாது ...
என் வாழ்வு...
எனக்குள்..
நீ இருப்பதால்...!!!

உயிரின் துடிப்பு



நிலவுக்கு...
பக்கத்தில்...
நின்று கொண்டு...
குளிர்மை...
தேடுகின்றேன்...!!!

உறவுக்கு...
பக்கத்தில்....
நின்று கொண்டே...
உண்மை...
தேடுகின்றேன்...!!!

விபரம்...
தெரிந்துகொண்டும்...
விண்ணைத்....
தொட...
நினைக்கின்றேன்...!!!

வீணான நாட்கள்...
என்றும்....
என்னை நானே...
சுட்டுக்கொள்கின்றேன்...!!!

தண்ணீரில்...
தவம்...
இருக்கின்றேன்...!!!

கண்ணீராய்...
ஓடுவதனால்...
தானோ...
நானும்...
இருக்கின்றேன்...!!!

நாட்கள்...
முழுவதுமே...
ஏதோ..
ஒரு துடிப்பு...!!!

அவளை...
நினைத்து
வாடுவதால் தானோ ...
எனக்குள் ஒரு...
படைப்பு...!!!

இறைவன்...
அவளைப் படைத்தான்....
எனக்குள்...
ஓட விட்டான்...!!!

என் உயிர்...
அவளுக்காக...
துடிப்பதற்காகத் தானோ...!!!

துர்ப்பாக்கிய சாலி



இரு தலைக்...
கொள்ளி எறும்பாய்....
துடிக்கின்றாள்...
உணர்வாய்...
வெடிக்கின்றாள்...!!!

நல்லவள்....
உள்ளம்....
நடுங்குகின்றது....
தவறே செய்யாது....
துடிக்கின்றது...!!!

பாவியாகி....
போனவளாக....
பருதவிக்கின்றாள்...
பயந்தவள்...
என்பதனால் தானோ....!!!

விதி மட்டும்...
விளையாடியது...
சதிகாரி...
இவள் இல்லையே...!!!

ஏன்...
துடிக்கின்றாள்...
யாருக்காக...
துடிக்கின்றாள்....
யாரை நினைத்து...
துடிக்கின்றாள்...!!!

காதல்...
பார்வை கொண்டவள்...
கண்கள்...
கலக்கப் பார்வையில்...
மாறியது ஏன் தானோ...!!!

அவளை...
எண்ணி...
தினம் துடிக்கின்றேன்...
இவளோ....
யாரை எண்ணி?..!!!

Sunday, March 25, 2012

அன்பே உன்னிடத்தில்..


ஆழமான....
நட்பு...
இன்று காதலாக ...
எனக்குள்...
ஊற்றெடுத்ததே...
உண்மையின்...
சுகமாகவே...!!!

தேவதை...
பக்கம் தேடினேன்...
அவள்...
தென்றலுடன்...
செய்தி சொல்லி...
தூது விடுவாளா....
என்று எனக்குள்....
கற்பனை...
வடித்துக்கொண்டேன்...!!!

அவள்....
கண்கள் மட்டும்...
பேசியது....
அதிலே இருந்து...
எடுத்துக்கொண்ட...
மடலில் இருந்து....
ஓராயிரம் கவிதைகள்....
வடித்துக்கொண்டேன்...!!!

பெண்கள்...
அவளைப் பார்த்த...
பின் தான்...
உண்மையெனப்...
புரிந்து கொண்டேன்...!!!

காதல்...
தோட்டத்தின்...
மலரவள்....
எனக்குள்....
பூத்துக்குலுங்கும்...
பூவை அவள்...!!!

இனிக்கின்றன


முகம்...
நினைவில்...
நித்தம் கனவில்....
மறுபடியும்....
மறுபடியும்....
தூங்கத் தான்...
துடிக்கின்றது மனசு...!!!

கனவில்....
கரைகின்றது....
கண் விழிக்க...
மனமின்றியே..!!!

தூவானத்தில்....
மிதக்கின்றேன்...
மின்னலில்...
ஒளிர்கின்றேன்....
அவளை....
வர்ணங்களாக....
உணர்கின்றேன்...!!!

பதுங்கிய...
அவள் விழிகளில்....
என்னைக் கண்டேன்...
அவள் இரக்கத்தில்...
அணைக்க கண்டேன்...!!!

குழந்தை....
உள்ளம் கொண்டவள்...
குழந்தையாகவே...
பேசுகின்றாள்....
எனக்குள்....
குழந்தையாகவே....
மிதக்கின்றாள்...!!!

என்னடி கோவம்.


என்னடி ...
திடீர் மாற்றம்...
எதனால்...
உனக்கு இந்த...
தடு மாற்றம்...!!!

உன்...
வார்த்தைகளில்...
அள்ளிப் பருகியவன்...
இன்று...
வேதனையில்...
நீந்துகின்றேன்...!!!

மௌனம்....
என்னை...
கொல்லுதுதே...
தினம்...
உள்ளம் நொறுங்குதே...!!!

வேதனை...
தந்து...
சுகம் காண்கின்றாயா..???
வெள்ளந்தி...
என்று...
தெரிந்தபின்பு...
பழி வாங்குகின்றாயா?...!!!

என்னவளே...
எனக்குள்...
புதைந்தவளே...
என்...
உயிரில்...
கலந்தவள் நீ...!!!

உன்...
உயிரோடு...
விளையாடுகின்றாய்...
என்னவளே...!!!

உன்னோடு...
உறவாடும்...
உன்னவன்....
உயிர்...
உன்...
கையில்...
தடுமாறுதே...!!!

இருட்டு


எனக்குள்....
நிரந்தரமாகிப்...
போய் விட்ட...
நிம்மதி...
உலகம்...!!!

உள்ளத்தில் ....
அமர்ந்தவள்...
இதயத்தில்...
அழகிய..
ரணங்கள்....
கேட்டதும்....
உடைந்தது...
கணங்கள்...!!!

சிதைந்தது...
என்...
நினைவுகளில்...
நீந்திய....
பட்டாம்....
பூச்சிகள்...!!!

கோயில்...
கருவறையை...
உடைத்துவிட்டு...
அங்கே...
சாமி தேடுகின்றேன்...!!!

கை...
விரல்களை...
வெட்டிக்கொண்டு....
கவிதை...
எழுதுகின்றேன்...!!!

நான்...
தேடிய இருட்டு...
எனக்குள்...
மட்டும் ...
தூங்கட்டும்...!!!

ஒளி இழந்த உள்ளம்


உள்ளத்தில்...
பூட்டி...
வைத்து...
உவகை...
கொண்டேன்...

தேவதை...
அவள்...
தான்...
தினம் கண்டேன்...!!!

காலம்...
அவளை...
யோசிக்க வைத்தது...
தினம்...
நேசிக்க வைத்தது...!!!

நேசம் பாசம்...
காதலானதே...
நாளும்...
மோசம் கொண்டதே...!!!

இன்றோ...
முடிவானது...
என் உள்ளம்...
ஒளி இழந்து...
இருட்டை நோக்கி...
இளவல் காப்பது....!!!

அவள் தவிப்பு...
என்னால்...
தானோ...
என்ற நினைப்பு...
கொல்லுதே...
தினம் என்னை...!!!

குழந்தை...
உள்ளம்...
கொண்டவள்...
பொய் என்ற...
புத்தகம்...
வாழ்வில் படிக்காத...
புன்னகை அவள்....!!!

அதுதான்....
பூவையின்...
எண்ணங்கள்...
எனக்குள்...
புதைதுகொண்டதோ...!!!!

என் தேவதை....
எனக்காக...
பிறந்தவள்...
என்னுள்....
வாழ்வாள்...
ஒளியாக...
காலங்களில்...
என் உணர்வாக...!!!

உன்னை சுவாசிக்கின்றேன்...


இதயமே....
என் விழிகள்....
நனைகின்றது...
உன்....
நினைவில்...
கரைகின்றது...!!!

உன்னை ...
ஒரு முறை...
பாராது விட்டாலே....
உள்ளம்...
உடைந்து...
போகின்றதே...!!!

ஒரு முறை...
பேசிவிட்டாலே...
உலகே...
சொர்க்கமாய்...
மாறி விடுகின்றதே...!!!

எங்கே...
சென்றாய்....
இத்தனை காலம்....
என்...
கண்ணில் படாது...
வாழ்ந்தாய்...
எத்தனை காலம்....!!!

ஊமையாகி...
உன்முன்னே ...
நடிக்கின்றேன்...
உறவே...
புரிந்து கொள்வாயா...!!!

கள்ளம் கபடம்...
இல்லா....
கருணை கொண்ட.....
உன் உள்ளம்...
எனக்கு...
மட்டும்...
உறவாகட்டும்....!!!

தோற்றுப் போன என் கவிதைகள்


சிம்மாசனம்....
இட்டது....
என்னை...
அடையாளம்...
காட்டிக்கொண்டது....!!!

இன்றோ....
விரல்கள்...
நடுங்குகின்றது....
கவிதை....
வடிக்கவே....
மனமும்....
சிதறுகின்றது...!!!

என்னவள்....
இதயத்தில்....
கீறல்கள்....
விழுந்ததினால்....
என்...
இதயமும்....
நொறுங்கிப் போனதே...!!!

பாவியாகி...
பருதவிக்கின்றேன்...
அவளை....
இதயத்தில்....
சுமந்ததினால்....!!!

இன்றோ....
கை...
விரல்களுக்கு...
ஓய்வு கொடுத்து....
என்..
கவிதைகளுக்கு...
கண்ணீர் அஞ்சலி....
செய்கின்றேன்...!!!

எனக்குள் பூத்தவள்....
உறங்கட்டும்....
அவளுக்காக...
என்...
கவிதைகளைக்....
கொல்கின்றேன்...!!!

நினைவுகளில்...
என்னவள்...
வாழட்டும்....
என் இதயத்தில்....
மட்டும்...
என்றென்றும் ...!!!

நினைவினால் நீ என் உறவு..



என்....
வாழ்வில்...
உதிர்த்தவள்...
என்...
நினைவில்...
வாழ்கின்றாய் ...!!!

காதல்...
கவிதை...
படித்துவிட்டேன்...
உனக்குள் நானும்....
வந்து விட்டேன்...!!!

இறந்த பொழுது...
மீண்டும்...
பிறக்க வைத்தாய்...
உன்னால்...
மீண்டும்...
பிறந்து விட்டேன்...!!!

நீ..
தான் தேவதை...
தெரிந்தும்...
நடிக்கின்றாய்...
நடிகனின்...
உள்ளத்தில்...
குடி...
கொண்டதால் தானோ???

உன்னவன்...
ஏங்குகின்றேன் ...
உன்னால்...
தினமும் ...
வாடுகின்றேன் ...!!!

வாடுவதில்...
ஒரு சுகம்...
கண்டேன் ...
நீ..
பேசும் வார்த்தையில்...
மழலை கண்டேன்

நீ...
என்னிடம், ...
வாழ்வதால் தானோ ....
உன் மேல்...
உலகம் கண்டேன்
என்னவளே!!!


செய்தி கேட்டேன் வலித்தது.


காலை...
எழுந்ததும்...
வலித்தது...
வந்த செய்தி....!!!

என்னவள்...
வலி கண்டு...
என்...
இதயமே...
நின்றது...
ஒரு நொடி...!!!

அவள்...
வரவுக்காக....
காத்து நின்றேன்...
வந்ததோ...
அவள்...
வாடிய செய்தி...!!!

தேடினேன்...
தென்றலை....
சீண்டிய...
கொடியவனை...
தீண்டாது...
விட்டது...
ஏன் தானோ...!!!

கள்ளமில்லா...
என்னவள்...
கருணையால்...
பாவங்கள்...
பொடி படும்...
அவள் முன்னே...!!!

என்னவள்...
வருகைக்காய்...
காத்து...
இருப்பேன்...
காலமெல்லாம்...
நான் தானே...!!!

வாழ்க்கை




நிரந்தரமற்ற ...
நிம்மதியற்ற...
பூங்காக்கள்...!!!

குப்பைகளில் ...
முளை விடும்
காளான்கள்...
வாழவில்லையா...!!!

வாழ்வை...
கையிலே எடுத்து...
கனவு காண்கின்றோம்...
பல...
கோணங்களில்...
ஏன் தானோ...!!!

பகுத்தறிவு...
தொலைத்தே...
புழு ஆகின்றோம்...
புரியாத புதிராக!!!

எதனை...
சாதித்தோம்...
வாழ்வில்...
எதனை போதித்தோம்...!!!

முண்டியடித்து...
முன்னே போகத்...
துடிக்கின்றோம்...
முகவுகவுரை தேடியே....!!!

காலன் கைகள்....
குறி ...
வைப்பது தெரியாமலே...
ஆட்டம்...
போடுகின்றோம்...
காலத்தையும்...
தேடுகின்றோம்...!!!

நிம்மதி...
நிரந்தரமற்ற...
நீர்த் தடாகம்...
நீச்சல் அடிப்பவர்....
யார் தான்....
நிரந்தரமானவர்களோ...!!!

காலம்...
இட்ட கட்டளை...
கனவுகள் மட்டும்...
தொடர்கின்றது....
வாழ்க்கையாகவே...!!!

Tuesday, March 13, 2012

புரியாத புதிரே...!!!

புயலாகத்...
திரிந்த என்னை...
பூவாக...
மாற்றிய புதுமையே...!!!

நானாக...
மாறிய பொழுது...
நீயாகப்...
போகத் துடிப்பது...
சரிதானா...?
என்னவளே சொல்..
முறை தானா...!!!

காற்றின்....
திசையில்....
நான் சென்ற...
வேளையிலே...!!!

கடிவாளம் போட்டு...
கட்டிப் போட்டவளே...
நான்....
நின்ற பொழுது...
நீ போகின்றாய்...!!!

வேதனைகளை....
தந்து...
செல்கின்றாயா...
இல்லை...
எடுத்து செல்கின்றாயா?..!!!

உன்....
இதயத்தை....
கொன்று செல்கின்றாயா...
இல்லை...
கொண்டு செல்கின்றாயா...!!!

பதில்கள் இல்லா...
கேள்விகளுடன்....
பயணம் செய்கின்றேன்...
பதிலாக...
நீ...
என்னுள்ளத்தில்....
வாழ்வதால்...!!!

Monday, March 12, 2012

ஏன் வெறுக்கின்றாய் என்னவளே!!!



உன்...
நினைவில்...
வாழ்வது...
குற்றமா?...
யார்...
ஓதினார் ...
உன் காதில்....!!!

நீயோ...
நான் தெருவில்...
கண்டவன் இல்லை...
என்னவளே...
என்...
உயிரில் கண்டவன்...!!!

உனக்காக...
உறங்காத நாட்களை...
எண்ணி...
உவகை கொண்டவன்...
இன்றோ...
தினம் சாகின்றேன்....
உன்னால்....
தினம் சாகின்றேன்....!!!

வலிகள் தந்தாய்...
அதிலே...
சுகம் கண்டேன்...
வலி தந்தது...
நீ என்பதால்...!!!

இன்றோ...
ஊமையாகி...
உயிரை...
உரிக்கின்றாய்...
உன்...
உயிர் தான்...
எடுத்துக்கொள்...!!!

உன்னை...
சுமக்கும் முன்...
உயிரை...
தந்துவிட்டேன்...
உனக்காகவே...
என்றும்...
உயிர்...
விடுவேன் என் தேவதையே...!!!



 

Sunday, March 11, 2012

எனக்குள் பூத்தவள்

எனக்குள்..
வேரூண்டி விட்ட...
புதுமைப் பெண்...!!!

பூத்துக் குலுங்கி...
என்னை அவளோடு...
அணைத்துக்கொண்ட...
அழகோவியம் ...!!!

இதயங்கள்...
மோதிய பொழுது....
இது தான்...
வாழ்க்கை என்று...
போதித்த...
அறிவுடையாள்...!!!

நித்தம் அவள்....
போதனை...
எனக்கோ...
தினம் தினம்...
சாதனை...!!!

அவள்...
விழிகள் பேசும்...
என்...
உதடுகள்...
கவி பாடும்...!!!

தினம் அவள்....
போடும் வேஷம்...
எனக்குள் ...
புதிதாகப் பிறக்கும்...
புதிய ராகம் ....!!!

காலையில்..
அவள்...
எழுதும் கடிதம்...
அது தான்....
என்னை....
வாழ வைக்கும்...
மந்திரம்...!!!

மீண்டும்...
பிறந்தேன்...
கவியோடு...
அவளுக்காகவே...!!!

Saturday, March 10, 2012

என்னைப் புரிந்த என்னை பிரிந்த தோழி

என்...
காயங்கள் கண்டு ...
கொதித்தவள்...
தினமும்...
மருந்தாய்...
நின்றவள்...!!!

இன்றோ...
கலங்கிய கண்ணோடு....
விடை பெற்றாள்...
கலங்க வைத்து...
என்னையும்...!!!

தினம்...
கவிதை கேட்டு...
ரசித்தவள்...!!!

இன்றோ...
என்....
கண்ணீர் துளிகள்
விழ வைத்து....
சென்று விட்டாள்...!!!

இதயம்...
வலிக்கவில்லை...
என்...
இதயம்...
செத்துப் போனதால்...!!!

மீண்டும்...
வருவாள்...
எனக்காக வருவாள்....
அன்று வரைக்கும்....
இருட்டே எனக்கு....
சொந்தமாகும்...!!!