Friday, January 24, 2014

அகராதி அவள்...!!!





எத்தனை புரிதல்
அவள்
முகங்ககளில் தான்
எத்தனை கவிகள் ...!!!

ஒவ்வொரு
வடுக்களும்
அவளுக்குள் மட்டும்
எப்படித்தான்
சுகமான சுமையாக
உரு மாறிக்
கொள்கின்றனவோ...!!!

ஊமையாகி
அவள்
உணர்ச்சிகள் மட்டும்
உறங்கிக்
கொள்கின்றனவே
உதிராத அவள்
வார்தைகள்
என்ன தான்
பேசிக்-
கொள்ளுமோ ...!!!

பதுமையான
அகராதி அவள்
வேதனைகளை
விழுங்கிக்கொண்டு
மாற்றுமொழியில்
மயங்க வைக்கின்ற
வித்தையை
எங்கேதான்
கற்றுக்கொண்டாளோ...!!!

அவள்
புன்னகை என்னும்
புது மொழியாள்
என் மனதில்
பூத்துவிட்ட
வாசனை மாறா
பூச்சரமும்
அவள் தானே ...!!!

இனியவள்...!!!




தண்ணீர் தாகம்
எடுத்த பொழுது
மறந்த சோகம்
துளைத்தெடுத்தது...!!!

கண்ணீர் சுரந்து
அவள்
சென்ற வேளை
நெஞ்சம்
அடைத்த
பார்வை அன்றோ...!!!

வாழ்வும்
மரத்துப் போய்
வார்த்தையும்
பொய்யானதே...!!!

காற்றும்
திசை மாறி
கானல் ஆனதால்
கண்ணும்
சிவந்து போய்
குளம் ஆனதொ...!!!

கல்
நெஞ்சம் என்று
நான் கடிந்த போது
பார்வையாலே
அவள்
வாதம் வென்றது...!!!

சொல்ல
முடியாமல்
விக்கித்து
நின்றவளை
அவள்
கண்கள் வழியே
கண்டேன் நானும்...!!!

அவள் உள்ளம்
என்னிடம் மட்டும்
உள்ளது
உடம்பு மட்டும்
சென்றது
திரும்பி பார்த்து ஏதோ
முணுமுணுத்தபடியே ...!!!

சிதைந்த தோட்டங்கள்...!!!




பாசத்தில்
பெற்றவர்கள்
விழி மூடா
காத்தவர்கள்...!!!

எதிர்கால
கனவு கண்டு
இன்பத்தில்
வாழ்ந்தவர்கள்...!!!

எத்தனை
துயரம் மறைத்தே
எங்கள் உயரம்
காணத் துடித்தவர்கள்...!!!

நாம் தான்
என்ன செய்தோம்
நம்மை
பெற்றவர் மனம்
குளிர்ந்திடவே...!!!

பருவ வயதில்
பகுத்தறிவை
இழந்தோம்
காலக் கோளாறினால்
கருவறை மறந்தோம்...!!!

மாயக்
காதலை மட்டும்
மனதில் நிறுத்தி
பெற்றவரின்
கனவைத் தானே
புதைத்துக்
கொண்டோம் ...!!!

தீய
நடத்தையின்
சொந்தக்காரர்
ஆனோம்...!!!

வாழ்வென்னும்
அழகிய தோட்டத்தை
உணர்வுக்கு மட்டும்
அடிமையாக்கி
சிதைத்துக்
கொண்டோமே...!!!

புது நாத்து....!!!





நனைந்து
மிதந்து வந்து
கண்ணில் ஓரு
வெளிச்சம் தந்தாயோ...!!!

பூட்டிய
கல் இதயத்தில்
உன்னிதளால் தான்
வஞ்சம் தீர்த்தாயோ...!!!

நேர்த்திக் கடன்கள்
தீர்க்கத்தான்
என் பக்கம்
மலரானாயோ...!!!

உதயம்
ஓய்ந்ததில்லை
உன் வரவு காணாமல்
தேய்ந்ததில்லை...!!!

தினம் ஒரு
மாறுதல்
அவளால்
வந்த ஆறுதல்...!!!

வயக்காட்டில்
புதுத் தளிர் போல்
என்ன
மினுமினுப்பு...!!!

திமிர் நடையும்
திகட்டாத
வதனமும்
உனக்கு மட்டும்
சொந்தமானதோ...!!
ஊரே
கும்மி அடிக்கின்றதே
உன்
வரவைக்கண்டு
ஊர்கோலமாய்...!!!

என்
வீட்டுக்கதவுகள்
உன்
வரவுக்காக
ஏங்கி தவிக்கின்றதே...!!!

சமையல் அறை
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
உன் கைப்பக்குவம்
காணத்தான்
துடிக்கின்றதே...!!!

புது நாத்தே
புது மாலை
கொண்டு வரும்
நாள் தான் எப்போ...!!!

அவளுக்கு என்ன ஆச்சு...!!!





காலையிலே
மலர்கின்றாள்
மாலையிலே சுடுகின்றாள்...!!!

பாதையிலே
நடக்கின்றாள்
பதட்டத்தில் கதைக்கின்றாள் ...!!!

நித்தம்
என்னைக் கானாது
வெறி பிடித்து
பித்தாகின்றாள்...!!!

கண்டு விட்டால்
காயப்படுத்தி
விடுகின்றாள்
இதயத்தை தானே...!!!

ஏதோ போக்கில்
போனவனை
தனக்குள்
அடக்கிகொண்டவள்...!!!

தயங்கிய
போதெல்லாம்
அணைத்துக் கதை
பேசியவள்...!!!

இன்று அவளில்
ஒரு தடுமாற்றம்
இல்லை தனிமாற்றம்...!!!

என்னை
சோதித்துப்
பார்க்கின்றாளா இல்லை
துரத்தப் பார்க்கின்றாளா...!!!

மனதில்
ஒரு நெருடல்
என்னையறியாது
ஒரு ஏக்கம்...!!!

கற்பனை உலகில்
என்கதை
முடிந்துவிடுமோ
ஏன் இந்தக்
கலக்கம்
நினைத்துப் பார்க்க
முடியவில்லை
அவளின்றி என்பயணம்...!!!

Wednesday, June 19, 2013

நிரந்தரமற்ற...!!!



எது தான்...
நிரந்தரம்...
எல்லாமே ஒரு...
சூனியம் தானே...!!!

எதுவுமே...
நிலைக்கவில்லையே...
நிம்மதி கூட...
தடுமாறுதே...
என்னவென்று...
புரியவில்லை...
ஏக்கத்தில் காலங்கள்...
மட்டும் கழிகின்றதே...!!!

வசந்தக் காற்றுக்கள்...
வழிமாறிப்...
போய்விடுகின்றனவே...
பாச நினைவுகள்...
தடுமாறி சிரிக்கின்றனவே...
என்ன காலமோ...
மனிதன் வாழ்வில்...
சோதனை தரும்...
போதனை காலங்களா...!!!

வார்த்தை இன்றி...
தவிக்கின்றேனே....
வாதம் செய்ய...
மனமின்றி துடிக்கின்றேனே...!!!

மனிதர்களிடம்...
மோதுவதை...
வெறுக்கின்றேனே...
வாழும் வரை....
கை குலுக்க தான்...
நினைக்கின்றேனே...!!!

என்ன தான்...
வாழ்க்கையடா...
தினம் தினம்...
ஏதோ ஒரு புழுக்கம்...
என்னை கொல்லுதே...!!!

எதுவுமே...
நிரந்தரமில்லையே...
எனக்குள் மட்டும் ஏன்...
இந்த போராட்டமோ...
வாழும் வரை...
மனிதனாக வாழ்ந்துவிட்டு...
போவோமே..
வாழும் வரைக்கும்...!!!

அன்புக்கு நான் அடிமை...!!!



ஏதோ புரியவில்லை...
விரோதியாகிலும்...
அவர் கஷ்டத்தில்...
துடிக்கும் பொழுது...
என் மனமும்...
மயங்கி...
துடிக்கின்றதே ...!!!

கொடுமைகள்...
மறக்க முடியவில்லை...
கொண்ட லட்சியம்..
துறக்க முடியவில்லை...
இருந்தும் ஏதோ...
ஒரு வலி என்னை...
துன்பப்படுத்துகின்றதே...!!!

பழக்கப் பட்ட....
வழிகளால்...
பரிதவிக்கின்றேனா...
இல்லை...
என் இதயமே...
மற்றவருக்காக....
துடிப்பதால்....
மயங்குகின்றேனா...
மாற்ற முடியவில்லை...
என் வழியை...
மாற்ற முடியவில்லை...!!!

இந்த உலகில்...
எதனைக் கண்டோம்...
எங்கே...
விரோதம் கொண்டோம்...
காற்றடைத்தை...
பைகளில்...
கர்வங்கள் தான் எதற்கோ...!!!

வாழும் வரைக்கும்...
நான் அடிமை தான்...
என்றும் அன்புக்கு...
அடிமையானவன்...
எனக்கு பிடித்ததும்...
அந்த வழியே...
அப்படியே...
வாழ்கின்றேன்...!!!

மாயக் கண்ணாடி...!!!




அகலக் கால்கள்...
அவதாரம்...
எடுக்கின்றனவே...
நினைவுகள்....
இறக்கைகட்டிப்...
பறப்பதால் தானோ...!!!

சோலைகள்...
நிறங்களை...
மாற்றிக் கொள்கின்றனவே...
என்னதான் வெறுப்போ...
யார் மேல தான்...
இந்த கசப்போ...!!!

புதிய மேகங்கள்...
புதிதாய்....
பிறக்கின்றனவே...
ஓசைகள் வந்து
என்ன தான் ...
தரப் போகின்றனவோ...!!!

முதுமைகள் கூட...
முகம்...
சுழிக்கின்றனவே...
இளமையில்...
என்ன தான் குறைகள்...
கண்டு கொண்டனவோ...!!!

வாழ்வில்...
ஏதோ ஒரு வருத்தம்...
வாதம் செய்து தான்...
நாட்களும் நகர்கின்றதே...!!!

மதிகள் மயங்கி...
விதிகள் மீது...
விடும் அம்புகள்...
எதனை சாதித்து...
உலகை திருத்த...
முயல்கின்றதோ...
யார் அறிவர்...
இந்த மாய...
உலகைத் தான்...!!!

ஏதோ ஒன்று ...
நடந்து கொண்டு தான்...
இருக்கின்றனவே
விம்பங்கள்...
பட்டுத் தெறித்து.-
புதுமையாக மனங்களை...
மழுங்கடித்து...
போதையை...
ஏற்றிக்கொள்கின்றனவே...
எல்லாமே...
ஒரு மாயம் தானே...!!!

அனுதாபம்...!!!





பாவம் என்ற...
சொல்லின்...
மொத்த...
வடிவம் தானே...!!!

பரிதாபம்...
என்ற அகங்காரம்...
எத்தனை வேதனை...
யாருக்கு புரியும்...
இந்த சோதனை...!!!

மனதால்...
துடிப்பதை...
வேடிக்கை...
பார்ப்பது போல் ...
வேஷம் போட்டு...
குத்திக்காட்டும்...
பாங்குதான்...
இந்தப் பதமா...!!!

வாய்கள் மெல்ல...
அவல்கள்...
சிதறிக்கிடக்கின்றனவே...
எடுத்து மென்று...
உவகை கொள்ளுங்கள்...!!!

ஆசையான ...
வார்த்தைகள்...
உதிர்க்க தெரியாத...
கோழைகள்...
ஆதங்கம் போல் நடித்து...
வார்த்தை ஜாலத்தால்...
மனதை தின்னும்...
உள்ளங்கள் தான்....
எத்தனையோ...!!!

பாவம் பரிதாபம்....
யார் மேல...
யாருக்காக வருமோ...
யாரை எண்ணி...
துடிக்குமோ யார் ...
அறிவார்...!!!

அனுதாபம்...
மகிழ்ச்சியை கொல்லும்...
மகத்தான கருவியே...
என்று புரியாத...
உள்ளங்களுக்கு...
புதுமைகள்..
எப்படி புரியுமோ...
புரியாத புதிராகவே...
தொலைந்து போகட்டும்...!!!

விடை தெரியாத பயணம்...!!!


ஊர்ப் பருந்து ...
வட்டமடிக்க...
உவமைகள் வந்து...
முட்டி மோத...
காரணமில்லா...
கவிதைகளும்...
பட்டுத் தெறிக்க...
பயணங்கள்....
எங்கே தான் ...
தொடர்கின்றதோ ...!!!

நேற்று முளைத்த...
காளான்கள்...
கண்ணைப் பறிக்க...
கதைகள்...
பல வந்து...
காதோரம்...
சீண்டி செல்ல...
விடை தெரியாது...
ஏனோ...
நானும் துடிக்க...
காலங்கள் ஓடுதே...
கண்ணைக்...
கட்டிக்கொண்டே...!!!

முல்லைக்கு ..
தேர் கொடுத்த...
மன்னவன் அன்றோ...
முதுகில் சவாரி...
செய்யத் துடிக்கும்...
உள்ளங்கள் இன்றோ...!!!

கல்லுக்குள் ஈரம்..
தேடுகின்றேன்...
இல்லை என்று
தெரிந்தும்...
என்னை மறந்து...
ஏன் தானோ...
வாடுகின்றேன்...!!!

விடைகள் தெரியாத...
பயணங்கள்...
என் வாழ்வில்...
பழகிப் போனதே...
இருந்தும்...
பயணிக்கின்றேன்...
தினமும்...
ஏதோ ஒரு...
நம்பிக்கையில்...!!!

மனம் போன போக்கில்...!!!



உலகில்...
கட்டி வைக்க...
முடியாத மனதால்...
தினம் தினம்...
வாடுகின்றோம்...!!!

ஏதோ...
ஒரு போக்கில்...
அறியாமையில்...
அகலக் கால்கள்....
பதித்து...
அடங்கிவிடுகின்றோமே...!!!

யார் போட்ட சாபமோ....
யாருக்காக....
நாங்கள் போடும்...
வேஷமோ...!!!

தெரிந்துகொண்டும்...
தெரியாதது போல்...
வாழ்வது....
யார் குற்றமோ...!!!

குணங்கள் அறியாது...
மனதில் போடும்...
பந்தங்கள் ...
சொந்தாமாகிவிடுமா...!!!

சோதனைகள்...
தினம் தானே...
வேதனைகளாக...
பிறந்து விடுகின்றனவே...!!!

சாதனைகள்...
என்ன தான் செய்தோம்...
நிம்மதி மூச்சை...
விட முடியாது...
தவிக்கின்றோமே...
சிந்தித்தோமா...
யாரால் எதற்காக ...
ஏங்குகின்றோம்...
எதனை தொலைத்து விட்டு...!!!

மனம் போன...
போக்கில் போய்த்தான்...
பழகி விட்டோம்...
வரும் சோதனைகளை...
சுமப்பதில்...
என்ன தான் தவறை...
கண்டு விட்டோம்...!!!

வாழ்வோம்...
வாழ்ந்து பார்ப்போம்...
வாழும் வரை...
போராட்டத்திலேயே...!!!

வெறுத்துப் போன மனசு....!!!




வாழ்வில்...
வசந்தம் மட்டும்...
வீசிக்கொண்டு...
இருந்ததே...
திடீர் என்று வந்த...
புயல் காற்றினால்...
எல்லாமே திசை மாறி...
சிதைந்து விட்டதே...!!!

தேடிச் சென்று...
புயலை...
அணைத்துக் கொண்டேனா...
இல்லை...
விதி வந்து...
விளையாடியதால்...
என்னை....
அழித்துக் கொண்டேனா...!!!

வாழ்வில் எதையோ...
பறிகொடுத்தது போல்...
உணர்கின்றேனே...
தனிமையை தேடித் தேடி...
அணைத்துக்...
கொள்கின்றேனே...!!!

மாசு பட்ட மனசு போல்...
பிதற்றுகின்றேன்...
மனதால் கெட்டது...
நான் தான்...
என்று...
கொஞ்சம் தேற்றுகின்றேன்...!!!

யாரிடமும்....
எதற்கும் பணியாத....
என் குணமோ...
இன்று...
குற்ற உணர்வில்...
துடிக்கின்றதே...
என் மனதை...
யார் தான் அறிவாரோ...!!!

வெறுத்துப் போகின்றேன்...
மனதால் தினம் தினம்...
தனிமையில்...
என்னை தள்ளிவிட்டு...
வேடிக்கை பார்க்கும்...
மனிதர்களிடம்...
தோற்றுப் போகின்றேன்...
என் வாழ்வின்...
என்னை பக்குவப் படுத்தும்...
பாடமாகவே...
ஏற்றுக்கொள்கின்றேன்...!!!

நானும் மனிதன்...!!!



காலங்கள் ...
துரத்திய வேளைகளில்...
கண்ணீர்களும்...
கதைகளும்...
என்னை தேடியே...
தொடர்ந்ததே...!!!

எத்தனை வேசங்கள்...
எனக்குள் பிறந்து...
மறைந்ததே...
தினம் தினம் மீண்டும்...
பிறந்து கொண்டு தான்...
இருந்ததே...!!!

காலையில்...
எழுந்தவுடன்...
கனவுகள் மறந்து...
போடும்...
வேசங்கள் தான்...
எத்தனை எத்தனையோ...!!!

சுமைகள் வந்து...
சுதந்திரத்தை...
விழுங்கி செல்கின்றதே...
மனசுமைகள் கூட...
என்னை...
மாற்றத்...
துடிக்கின்றதே...!!!

பளுக்களில்...
வாழ்ந்து...
பழக்கப் பட்டவன்...
பாசத்தால் வந்த...
வடுக்களில் கூட...
என்னை...
பல தடவை...
தொலைத்து...
கண்ணீரில்...
குளிக்கின்றேனே...!!!

மனித வாழ்வோ...
மகத்தானது தான்....
எங்களை...
மறந்து வாழ்ந்து...
தொலைக்கின்றோம்...
வாழத் தெரியாத...
கனவுகளால்...!!!

நானும்...
மனிதன் தானே...
பயணம் செய்கின்றேன்...!!!

பாதைகள்...
கரடு முரடாக...
என்னை...
கவிழ்க்க பார்க்கின்றதே...
இருந்தும்...
தொடர்கின்றேன்...
முடிந்தவரை...
மனிதனாகவே...!!!

Friday, June 14, 2013

அவளுக்கு என்ன ஆச்சு...!!!



காலையிலே
மலர்கின்றாள்
மாலையிலே சுடுகின்றாள்...!!!

பாதையிலே
நடக்கின்றாள்
பதட்டத்தில் கதைக்கின்றாள் ...!!!

நித்தம்
என்னைக் கானாது
வெறி பிடித்து
பித்தாகின்றாள்...!!!

கண்டு விட்டால்
காயப்படுத்தி
விடுகின்றாள்
இதயத்தை தானே...!!!

ஏதோ போக்கில்
போனவனை
தனக்குள்
அடக்கிகொண்டவள்...!!!

தயங்கிய
போதெல்லாம்
அணைத்துக் கதை
பேசியவள்...!!!

இன்று அவளில்
ஒரு தடுமாற்றம்
இல்லை தனிமாற்றம்...!!!

என்னை
சோதித்துப்
பார்க்கின்றாளா இல்லை
துரத்தப் பார்க்கின்றாளா...!!!

மனதில்
ஒரு நெருடல்
என்னையறியாது
ஒரு ஏக்கம்...!!!

கற்பனை உலகில்
என்கதை
முடிந்துவிடுமோ
ஏன் இந்தக்
கலக்கம்
நினைத்துப் பார்க்க
முடியவில்லை
அவளின்றி என்பயணம்...!!!

உறவுகள்...!!!



சந்தர்ப்ப
சாக்கடைகள்
உள்ளொன்று வைத்து
உறவாடும்
வேடம் தாங்கிகள்...!!!

கண்கலங்கி
மனதோடு நாமும்
ஓட்டிகொன்டாலும்
விஷத்தை கக்கி
சுவை பார்க்கத் துடிக்கும்
சொந்தக் காரர்கள்...!!!

எத்தனை வன்மங்கள்
முன்னுக்கு [புன்]புண் சிரிப்பு
பின்னுக்கு
காறித் துப்பும்
எண்ணங்கள்
எங்கிருந்து தான்
ஊற்றெடுத்துக் -
கொள்கின்றனவோ...!!!

உறவுகளை
உதறிவிட்டு ஊமையாக
வாழத்தான் மனமும்
ஏங்குகின்றனவே
இன்று முதல்
புதியமனிதனாகவே
பிறப்பெடுத்துக்-
கொண்டேன்
உண்மையாகவே...!!!

இருவர் உள்ளம்...!!!





இன்பக் காற்றுக்களை
சுமந்து சுமந்து
தென்றலுக்குள்
அகப்பட்டுக்கொண்ட
இதயங்களின்
பாஷைகள் தான்
என்னவோ...!!!

புத்தாடை கட்டி
புதிப் பொழிவோடு
தென்றலும்
இதயங்களுக்குள்
புகுந்துகொண்டனவா
இல்லை
தட்டுத் தடுமாறி
காயங்களை
பதித்து விட்டனவா...!!!

ஒரு மனதோடு
மறு மனது
முட்டி மோதி
மகிழ்கின்றனவே
எப்படித்தான்
காந்த சக்தியொன்று
இவர்களுக்குள் பிறந்து
சங்கமம்
ஆகிக்கொண்டதோ...!!!

இருவர் உள்ளங்களும்
தடுமாறிக் கொள்கின்றனவே
ஏதோ ஒரு
சுகமான சுமைகளை
சுமந்துகொண்டே
நந்தவனத்தில்
பாதங்களை
பதிப்பதால் தானோ ....!!!

ஒற்றுமை...!!!



வேற்றுமை இன்றி
தமிழாய் வாழ்வோம்
நிரந்தர உலகில்
ஒற்றுமை காண்போம்
காலத்தின் கட்டளை
சினங்கள் கொண்டோம்
இன்றோ
சிந்தித்து சிந்தித்தே
நிம்மதி இழந்தோம்...!!!

வேற்றுமை கூடி
தமிழனை

வாட்டி வதைத்தது
எல்லாம்
உணர்ந்த்ததால்
கூட்டம்
நம்மை மிதித்தது
நாடுகள்
கைகள் நீட்டியே
வெறுத்தது
நாகரீகம் கையை
சுட்டு தின்றது ...!!!

எங்கே போவது
தெரியாதே
கால்கள் பிரண்டது
மனித நேயம்
யார்
கண்ணிலும் படாது
ஓடியே மறைந்தது
இன்று வாழ்கின்றோம்
கைகளில் கிடைத்ததை
தொலைத்தே விட்டு...!!!

நிலவவள்...!!!





ஏதோ ஒரு
புதிய பரவசம்
என்னை தொட்டு
நலம் விசாரித்தது
உடம்பெல்லாம்
புத்துயிர் பெற்று
புன்னகைத்தது...!!!

மனதை
உருவி விட்டு
ஒரு இன்பக்காற்று
வந்து
முத்தமிட்டது...!!!

எனக்கே புரியாத
ஒரு ஏக்கம்
ஏன் இந்தத் தாக்கம்
வானத்தில் இருந்து
புதிய ஓசையா
இல்லை
புதிய பரி பாஷையா...!!!

கண்கள்
பேச மறுக்கின்றது
காதில் வந்து
சொல்லிப்
போனதோடு சரியா
நிச்சயம் என்னில்
ஒரு மாறுதல்
தெரிகின்றது
எதனைக் கண்டேன்
நான் இன்று...!!!

இழவு காத்த
கிளிபோல
துடித்த மனசு
புது உவகை
கொண்டதேன்...!!!

மனதோ வலிக்கின்றது
ஆனாலும்
இன்பத்தின்
வழியாகவே
தெரிகின்றதே...!!!

கண்களும்
குளமாகின்றது
கருத்தோ
மாறுபடுகின்றதே
நிலவவள் நெஞ்சை
தொட்டதால் தானோ
எல்லாமே
மாறி விட்டதோ...!!!

யாரை நம்பி...!!!



தாயை நம்பி
பூமியில் குதித்தேன்
தந்தை
காட்டிய வழியில்
நானும்
சென்றேன்
உடன் பிறந்தோர்
நம்பிக்கையில்
நானும் நடந்தேன்
இன்றோ
ஏதோ விரக்தியில்
எல்லாமே
தப்பாகத்தான் போனதே
தரம் கெட்ட
உலகத்திலும்
நம்பிக்கை தான்
தொலைந்ததே...!!!

ஆண்டவன்
அனுப்பி வைத்த
அழகான மனையாள்
அறிவான
பிள்ளைச்
செல்வங்கள்
இரண்டும் இருந்தும்
ஏதோ ஒரு தனிமை
எனக்குள் வந்து
கோலம்
போடுகின்றனவே
வறுமைகள்
பக்கத்தில்
வரத்தான்
பயந்தோடி விட்டன
இருந்து மனதில் ஒரு
வெறுமை தெரிகின்றதே...!!!

நம்பிக்கை
வைத்தவர்கள்
தடம்
புரள்வதால் தானோ
நானும் வெறுமை
கொண்டேனோ
இல்லை
நானாகவே
தெளிவிழந்து
உலகில்
வாழ்கின்றேனோ
என்றும்
சொந்தக் காலில்
நின்றே பழக்கப்பட்டவன்
யாரை நம்பி வாழ்வேன்
குடும்பம் என்ற
சொந்தக் காலில்
தொடர்ந்து
நடை பயில்கின்றேன்
நம்பிக்கையோடு...!!!

முடிவுகள்....!!!



யாரோ
எழுதிவிட்டான்
யாருக்கோ
பாடு பட்டான்
கல்லாகிப்போனது
எங்கள் கனவுப்பாதை...!!!

நிதர்சனங்கள்
நிர்மூலமாகி
நிர்க்கதியாகி நின்றோம்
நீந்திக்கரை
சேரவும்
துடுப்பும் இல்லை
ஒரு
துரும்பும் இல்லை...!!!

வந்தவன்
கதையெல்லாம்
வெட்டியாகிப்போச்சு
மிஞ்சியவன் வாழ்வோ
வேதனையாகிப் போச்சு...!!!

காற்றும் விஷமாகி
சில இதயங்களை
நிறைத்துப்
போனது தான் மிச்சம்
விஷம் கலந்தவர்களின்
கோரத்தாண்டவம்
கொளுத்துப்போனதே...!!!

இனியும் என்ன சோதனை
பொய் பேச்சுக்களில்
மேடைகளும்
முட்டிப்போகின்றதே
முகவுரை
தொலைத்த இனம்
மூச்சு விடக்கூட
இடமின்றி அலையுதே...!!!

இது முடிவா?
முடிவின் ஆரம்பமா?
இல்லை
திராணியற்ற வார்த்தைகளா...!!!

அணையாத நெருப்பு...!!!



அகலக்கால் பதித்து
அகப்பட்டுக்
கொண்ட உத்தமர்கள்
அண்ணார்ந்து பார்த்து
உலகை அளந்த
அற்புதர்கள்...!!!

நேற்று முடிந்ததை
இன்று
கணக்குப்பார்க்கும்
மேதைகள்...!!!

இயலாதவர்கள் மேல்
சவாரி செய்வதில்
சளைக்காத மானிடர்
எதற்கும் அஞ்சாது
கெஞ்சி நிற்கும்
கொஞ்சல்காரர்கள்...!!!

கோயிலும் சாமியும்
இவர்கள் வசம்
தோற்றுப்போகும்
சோம்பேறிகள்...!!!

முதுமை கொண்ட
மனிதர்கள்
முயல் பிடிக்கின்றனர்
மூன்று கால்களுடன்...!!!

முக்காடு போட்ட
தமிழர் மனம்
அலைபாயுதே
அடுத்தவன்
கை பிடிக்க...!!!

ஆண்டாண்டு காலம்
அடம்பிடித்து
அடிச்சுப்பிடித்தது
அவன் இவன்
கைகோர்க்கவா...!!!

தலைக்கு மேல் தண்ணீர்,
சான் போனாலென்ன
முழம் போனால் என்ன
தப்பித்தவர்களின்
மனங்களில்
அணையாது
அணையை முடியாதது...!!!

ஏன் பிறந்தேன்...!!!


கண்ணுக்குள்
கண்ணை வைத்து
ஏதோ ஒரு பாடம்
கவியின்
நெற்றியில் வந்து
என்ன தான் மோகம்...!!!

சித்திரம் வரைந்து
நினைவில்
ஒரு ஏக்கம்
நீங்காத கதைகள்
வந்து பேசிடும் தாக்கம்...!!!

வாயில்லா
பூச்சிகளின்
வார்த்தைகளின்
ஜாலம்
முடிவில்லா
வேதனைகள்
தந்து விடும் வேதம்...!!!

நானென்ன நீயென்ன
யாருக்குத் தான் தாகம்
யாரால் வந்த பாவம்...!!!

காலங்கள்
போதித்ததில்
நாம் எதனை
சாதித்தோம்
நயவஞ்சகர் உலகில்
நாயகர் யார் தானோ...!!!
.
நாளும் எதையோ
சாதிக்க துடிக்கின்றேன்
நாட்களும்
வெறுக்கின்றதே
பாவம் செய்து
பிறந்தேனா இல்லை
பாதை இல்லா பிறந்தேனா?...!!!

தொழிலாளர் தினம்...!!!


சூடான வியர்வை
தினம் தோறும்
வழிந்தோடி
மனது கனத்து
உடலும் நலிந்து
சாதிக்கத் துடித்து
வாழத்தான் முடியாது
முதலாளிகளின்
முகவுரைக்கு மட்டும்
தீனி போடத் துடிக்கும்
மானிடர் தினம்
ஒரு நாள்
நினைத்துப்பார்க்க
துடிக்கும் நாள் தானே..!!!

எத்தனை கூக்குரல்களில்
குரல்வளை
நெரித்து வார்த்தைகளில்
சுதந்திரங்கள்
பறிக்கப்பட்டு
அடிமை என்ற முத்திரை
குத்தப்பட்டு
போலிமுகங்களை
கிழித்தெறிய
அடையாள படுத்தப்பட்ட
தினம் என்று
ஏமாற்றம் கொள்கின்றோமா
இந்த மே தினத்தில் மட்டும்
சாந்தம் கொள்கின்றோமா...!!!

வாழ்க்கை என்னும்
வட்டத்தில் எத்தனை
போராட்டங்கள்
தொழிலாளர்களை
மட்டும் சூழ்ந்துகொன்டதே
விடியல் மட்டும்
தொலைந்துபோய்
வெளிச்சம் வருகின்ற
திசைகளில்
தேடுகின்றோம்
காலம் காலமாக
தேடுகின்றோம்
ஏமாற்றப் பட்டவர்களாகவே
தொழிலாளர்கள்
முத்திரை ஏமாற்றம் தானே...!!!

இருமனம்...!!!



நாளும் எதையோ
தேடுகின்றது
தினமும் மனதும்
வாடுகின்றது
ஒன்றை விட
மற்றொன்று
சுவையாகவே
உறவாடுகின்றதே...!!!

உள்ளம் மட்டும்
ஏக்கத்தில் கழிகின்றது
உண்மைகள்
புரியாமலேயே
மயக்கத்தில்
தடுமாறி
தவழ்கின்றதே...!!!

இக்கரைக்கு ஏனோ
அக்கரை
இனிக்கின்றததே
மனம் மட்டும்
பல வர்ணங்களாக
மாறிக்கொண்டதால்
தானோ...!!!

எத்தனை ஏக்கங்கள்
புகுந்து கொண்டதோ
இருமனம் எத்தனை
கொடுமைகளில்
புகுர்த்தி விடுகின்றதோ
யார் மனதை
யார் அறிவாரோ
நான் அறியேன்...!!!

காதல் பிரிவென்றால்...!!!





கண்ணும் கண்ணும்
பேசிய பாஷையில்
கண்ணீரை தெளித்துவிட்டு
எங்கோ ஒரு பயணம்
எதனைத் தாலாட்டப்
புறப்பட்டதோ
புண்ணியம் புனிதம்
என்று முணுமுணுத்த
வார்த்தைகள்
எங்கே தான்
தொலைந்து போனதோ ...!!!

துணைக்கு பிறையையும்
அழகுக்கு நிலவையும்
அழைத்து வந்தவர்கள்
இதயங்கள்
கானல் தோட்டத்து
கரும்பாகிப் போனதோ
கசப்புக்கு
விலையாகிப் போனதோ...!!!

மணித்துளிகளில்
மகுடங்களும்
மரத்துப் போனதா
நம் வாயில் வந்த
வார்த்தைகளும்
வெறுத்துப் போனதா
பிரிவு வந்து
சுகங்களை அள்ளித் தந்ததா
சுக்குநூறாக்கி விட்டு
மீண்டும் பயணிக்கின்றோம்
இதயங்களை நொருக்கத்தானே ...!!!