Sunday, February 24, 2013

விழுதுகள்...!!!



தமிழன் கைகளில்...
கிடைத்து...
நழுவவிட்ட...
தழும்புகள்...!!!

போட்டிகள்...
பொறாமைகளை...
விழுங்கிக்கொண்டு...
துப்பவும் முடியாது ...
எதையோ...
தேடுகின்றோம்...!!!

பொய்கள் முன்...
சதுரங்கம் ஆடி...
சாதனைகள் படைக்க...
எங்களையே...
பலி கொடுக்கின்றோம்...!!!

மூட நம்பிக்கைகள்...
சுமந்துவந்து...
முதுகெலும்பை...
நொறுக்கிக்கொண்டு...
முண்டியடித்துப்...
போகத் துடிக்கின்றோமே...!!!

சிறுவயதில்..
தெளிக்கப்படுகின்ற...
விஷங்களா...
இல்லை எங்களுக்காக...
எழுதப்பட்ட...
தலைமுறை...
தத்துவங்களா...!!!

காலம் காலங்களாக...
கண்ணீர் கதைகள்...
தமிழன் தலையின்...
அரைக்கப் படும்...
அடிமை என்னும்...
கொடிய விழுதுகள்...!!!

தலை முறைகள்...
எப்பொழுது மாறுமோ...
தமிழன் தலை விதிகள்...
எப்போ தான் உணருமோ...!!!

மலரவள்....!!!





புதுமை...
பூத்து விட்டது ...
வானம்...
பொழிந்து விட்டது...
இருந்தும் எதையோ...
என் மனம்...
தேடிநின்றது...!!!

காத்திருந்த...
கன்னிமனம்...
கவி பாடக்...
காணலையே...
காதுகொடுத்து...
கேட்பதற்கு....
அவள் இராகத்தில் தான் ...
ஸ்ருதி சேரலையே...!!!

பார்த்து இருந்தேன்...
பாவி மனம்...
வாடலையே...
பாதைகள்...
தேடி நின்றேன்...
அவள்...
வருகையைத் தான்...
காணலையே...!!!

மலர் தொடுக்க...
கொய்து பார்த்தேன்...
வலி கூட எடுக்கலையே...
மலரானவள்...
தேடிவந்து ...
சுகம் தான்....
கொடுக்கலையே..!!!

எனக்குள் பூத்தவள்...
என்னோடு வாழ்பவள்...
இதயத்தில்தான்...
நிறைந்தவள்...
என்றும் மலராகவே...!!!

என் உயிரானவள்...!!!






எனக்குள் விதையாகி....
என் வளர்ச்சியில்...
உரமாகி...
உண்மையாகப்....
பூரித்துப் போகின்ற...
என்னவள்....!!!

என் நடைபாதைகளின்...
தடைகளை...
சுத்தம் செய்து...
என்னை...
தாலாட்டும் தாயவள்..
என்றும் எனக்காக...
வாழ்ந்திடும் தூயவள்...!!!

எதையோ நினைக்கின்றேன்...
ஏனோ துடிக்கின்றேன்...
வாட்டத்தில் மூழ்கினேன்...
இருந்தும்...
வார்த்தைகளினால்...
என்னை வாழ வைக்கும்...
வசந்தகால...
தென்றலும் அவள் தானே...!!!

ஊற்றெடுத்துப் பாயும்...
உண்மையின் தத்துவங்கள்...
தினம் தோறும்...
அவள் நினைவோ...
உணர்வுள்ள புத்தகங்கள்...!!!

என் வாழ்வில்...
நான் கண்ட...
கவிதை அவள்...
என்னோடு...
கை கோர்த்து நடக்கும்...
என்றும் மறையா...
புதுமைப் பெண்ணும்...
அவள் தானே...!!!

எனக்குள் கிடைத்த...
பொக்கிஷம் தானே...
என் சுவாசம்...
நின்று போகாத்....
துடிக்க வைக்கும் ...
என் உயிரானவள்...
அவள் இன்றி ....
வேறு யார் தானோ...!!!

யாரடா நீ..???



கண்களால்...
நம்ப முடியவில்லை...
உடலோ ...
உதறல் எடுத்தது...!!!

தேடித் தேடி...
கட்டியணைத்து...
காதல் செய்தவள்...
என் கரங்கள் பற்றி...
விட்டுவிடாதே...
செத்துவிடுவேன்....
கண்ணீர் சுரந்து...
கதைகள் சொன்னவள்...!!!

ஏழாண்டுகள்...
இதயத்தில்...
ஒட்டி உறவாடி...
பிரிவென்னும் வார்த்தையை...
வெறுத்துக் கொண்டவள்...
சொர்க்கம் என்னும்...
சுதந்திரத்தை....
எனக்குள் விதைத்து...
நின்றவள்...!!!

ஐந்து நாட்கள் முன்...
யாரோ ஒருவனுக்கு...
கழுத்தை....
கொடுக்கப் போகின்றேன்...
வந்து அள்ளிப்போ...
கண்ணுடைந்து...
கலங்கி தூதுவிட்டவள்...!!!

தேடிச் சென்றபொழுது....
செருப்பைக்...
காட்டாத குறையாக ....
யாரடா நீ என்று உமிழ்ந்து
கேட்டாளே ஒரு கேள்வி...!!!

அவள் புதியவனிடம்...
புது புது கதைகள்...
புனைந்து புகழுகின்றாள் ...
அவனும் நம்பியே....
என்னை சபிக்கின்றான்...!!!

அவள்...
நினைவுகளோடு....
நானும் மௌனமாகின்றேன்...
ஒரு ஏமாளியாக...!!!

என் வாழ்வில்...!!!



இருட்டில்...
வெளிச்சத்தை...
தேடிக்கொண்டு...
கற்பனையில் கடிதம்...
வரைகின்றேன்...!!!

கடந்து வந்த பாதைகள்....
கரடு முரடாகியதால்...
கவனங்கள்...
சிதருகின்றதோ...!!!

கால்கள் தேய்ந்து...
வந்த காயங்கள்...
பல கதைகள்...
புனைகின்றதே...
என்னை மயக்கி...
எதையோ சொல்ல...
துடிக்கின்றதே...!!!

வேதனைகள் எனது...
விளையாட்டு மைதானம்...
வெற்றிகள் தான்....
என் எட்டாக் கனிகள்...!!!

காலங்கள் தான்...
என் கருணைப் படிகள்...
கண்ணீரோ...
என் ஊற்றுக்கள்...
யாருக்கு தான் உதவிடும்...
இந்த உப்பு நீரோ ...!!!

என் பார்வையில்...
எல்லாமே...
வசந்த காலங்கள்...
பக்கத்தில்...
போனால் தான்...
தெரிகின்றதே...
என் பைத்திய பார்வைகள்...!!!

கண்கள் மூடி...
காதுகளை அடைத்து...
என்னை மறந்து....
வாழ்ந்து பார்க்க...
துடிக்கின்றேன்...
மற்றவர் நாக்குகள் வந்து...
என்னை தூண்டி இழுக்கின்றதே...
மூடி இருந்த...
என் காதுகள் கூட ...
வெடித்து சிதருகின்றதே...
அவர்கள்...
நாக்குகளின் உக்கிரத்தால்...!!!

என் கைகள்...
எதையோ கிறுக்க...
துடிக்கின்றன....
அர்த்தங்கள்....
மாறிப் போவதால்...
என் மனமும் தடுக்கின்றது...!!!

வாழ்வை நோக்கி...
நகர்கின்றேன்...
என்னை....
நம்பியோரை நம்பி ...
அவர்கள்....
கைகள் பற்றிக்கொண்டு...!!!

புன்னகை துளிகள்...!!!





பூத்துக் குலுங்கியது....
பார்வையின் ...
பரிசத்தில்...!!!

இழந்ததை...
மீண்டும்...
பெற்றெடுத்தவள் போல்..
ஏதோ ஒரு...
புதிய சிந்தனை...
புன்னகையோடு...
தாக்குகின்றதே...
புதிதாக...!!!

காதல் துளிகளா...
இல்லை....
கனவு விழிகளா...
பார்த்து இருக்கும்...
எனக்கோ...
பன்னீர்த் துளிகளா...!!!

மோகப் பார்வையில்...
முகம்...
புதைத்து நிற்கின்றேன்...
அவள்...
புன்னகை தேசத்தில்...
என்னையே இழக்கின்றேன்...!!!

காயங்கள் படும்...
மானங்கள் கெடும்...
வார்த்தைகள்...
தடம் மாறி ...
வாழத்தான் முடியா...
மனம் போதனை செய்யும்...!!!

அவள் புன்னகையை ...
ஒருகணம்....
நினைத்துவிட்டால்...
புதிதாக...
பிறப்பது போல்...
ஒரு நினைப்பு வந்து...
ஒட்டிக் கொள்கின்றதே...!!!

நிரந்தரமான...
அவள் புன்னகை...
காணத்தான்...
என் மனமும் ஏங்குகின்றதே...!!!

தினம் ஒரு முறை....
அவள் புன்னகை...
துளிகள்....
என் மீது பட்டு...
தெறிக்கட்டும்...!!!

காலங்களில் அவள் வசந்தம்...!!!





பார்வைகள்....
பலவிதம்...
இவள்...
பார்வையோ...
தனி ரகம்...
கண்களே பல...
கதைகள் சொல்லுமே...!!!

காலத்தால் அழியாத...
சிரிப்பின்...
சலங்கை ஒலிதான்...
புது மொழியையே...
கற்பிக்குமே ...!!!

நாவடைக்க வைக்கும்...
அவள் பேச்சும்...
அன்பின் அடக்கமும்...
குழந்தை போல்...
நம்மை நினைக்க...
தோன்றுதே...!!!

நிம்மதி அவள்...
பக்கம் தோன்றி...
நம்பக்கம் ...
மறைகின்றதே...
மனம்...
சஞ்சலப்படுவதனால் தானோ...!!!

இன்றோ வஞ்சமில்லா...
உள்ளம் கொண்டவள்...
வாடுகின்றாள்...
யாருக்காக....
தவறே செய்யாது...
சவுக்கடியும் வாங்குகின்றாள்...!!!

அவள் பக்கம்...
நியாயம் இருப்பதால்...
காலங்கள் கடந்தாலும் ...
தர்மங்கள் கூட கை விடாது ...
அவள் பக்கம் சாய்ந்திடுமே...!!!

காலங்களில்....
வசந்தமானவள்...
நதியாக ஓடுகின்றாள்...
அவள் கண்ணீரை...
அருந்திவிட்டு...
அவளையாவது...
விட்டு விடுங்கள்...!!!

அவள் நினைவாலே...!!!



முத்தம்
ஒன்று தந்துவிட்டு
என்னைத் தான்
நானும் மறந்தேனா
இல்லை
முந்தானையில்
முகம் துடைத்து
முகவுரை
தொலைத்தேனா...!!!

கள்ளத்தனமாக
கன்னம் வைத்து
கவிதை ஒன்று
வடிக்க வந்தேன்
உன்னை
கண்கள் முன்னே
கண்டவுடன்
எதையோ எண்ணி
நானும் மறந்தேன்
உன் நினைவின்
தாலாட்டில்
நானும் கொஞ்சம்
உறக்கம் கொண்டேன்...!!!

காற்று அடித்த
திசை தேடி
நானும் பயணம்
கொண்டேன்
உன் காலடி பட்ட
இடம் எல்லாம்
பூத்துக் குலுங்க
நானும் கண்டேன்
எனக்கும் வந்தது
நாணம் இன்று
அதனால் நானும்
கொஞ்சம்
மயக்கம் கொண்டேன்...!!!

ஊர் கூடி கும்மியடிக்க
உன் நினைவில்
நான் துடிக்க
நீ இன்றி
காலங்கள் ஓடுவதில்
என் உறக்கமும்
தொலைந்து போக
வாடுகின்றேன்
உன் வருகைக்காக
தினம் தினம் ஏதோ
சிந்தனை தொடர்வதால்
பாடுகின்றேன்
பைத்தியமாகவே...!!!

ஏக்கம்...!!!



ஆத்தங்கரையில் ஆடிப்போகும்
இடையவள் உன் தலையில் ஆடும்
சும்மாடு கொண்ட குடமதில்
துள்ளிக் குதிக்கின்ற நீரில்
உன் மேனி பட்டு
என் உள்ளம் நனைகின்றதே...!!!

கிறங்கிப் போகின்ற
உன் இடையில் என்
இதயம் பட்டு
நொறுங்கிப் போகின்றதே
நோகாத உன் பாதம் பட்டு
கசங்கிப் போகின்றதே
கணநொடியில்
உன் மடியில் என் மனமும்
தடு மாறுகின்றதே...!!!

பூக்கள் எல்லாம்
உன்னைக் கண்டு புன்னகை
செய்கின்றனவே
உன்னிடம் இருந்து
நறுமணங்கள்
பரவி அவர்களை
வாழ வைப்பதால் தானோ
மலர்களும் நாணம்
கொள்கின்றனவோ...!!!

வற்றாத அழகிய நதியே
உன் வருகைக்காக
என் விழிகள் வழிகின்றதே
உன்னைப் பருகத்தானே
உறக்கம் கொள்ளாது
உயிர் வாழ்கின்றேன்
என்னவளே
உனக்காகத் தானே நானும்
வாழ்கின்றேன் வருவாயா
உன்னைத் தருவாயா...!!!

Saturday, February 16, 2013

புல் மேல் பனித்துளி...!!!



ஒட்டி உறவாட
ஓடிவந்து
அணைத்துவிட்டு
கதிரவனைக் கண்டதும்
அவன் மேல்
மையல் கொண்டு
என்னை உதறிவிட்டு
ஓடி விடுவதில்
நியாயம் தானோ...!!!

காத்திருந்து கண்விழித்து
நான் இருக்க
காதல் என்று நீ வந்து
கட்டியணைக்க
எல்லாம் நீ தான்
என்று நானிருக்க
இருளைத் தந்தவன்
ஒளியக்காட்டியவுடன்
நீயும் மறைந்து
என்னையும்
மறந்து செல்வது
மர்மம் தானே...!!!

தூங்காத இரவுகள்
வந்து தாலாட்டுப்-
பாடுகின்றனவே
தாங்காத
நெஞ்சம் மட்டும்
தரம்கெட்டுப்-
போகின்றனவே
வாடாத மலர் நான்
வாடிப்போகின்றேனே
வந்தவழி நீயும்
சென்றதால்
மனம் சிதறி
ஆடிப் போகின்றேன்
யாருமற்ற நீரோடையில்
நானும் போகின்றேன்
என்னை இழந்தே...!!!

நிலவில் சூரியன்...!!!





எதிர் நீச்சல்கள்
ஒவ்வொன்றும் புதிய
ஏக்கங்களில் தோன்றிய
புதிய மேகங்களாக
புதிதாய் பிறக்கின்றனவே
புரியாத மனிதர்களிடம்
சிக்கித் தவிக்காத
வரைக்கும்...!!!

வேற்றுமைகளின்
நிறங்கள்
மாறும் பொழுது
நிதானங்கள் தொலைந்து
நிம்மதியும்
சேர்ந்து விடுகின்றனவே
தோன்றாத உலகத்தில்
மனது மட்டும்
தோன்றி மறைகின்றனவே...!!!

போட்டிபோட்டு
எண்ணங்களை சிதறடித்து
ஏமாற்றங்களை
பொறுக்கியெடுத்து
எத்தனை வியாக்கியானங்களை
விழுங்கிக்கொண்டு
வாந்தியெடுத்துப்
பழகிவிட்டோம்
சூரியனில் வீடு கட்டவே
வளவுகள் தேடுகின்றோம்
நிலவுதனை மறந்துவிட்டே...!!!

Tuesday, February 12, 2013

எதிர் பார்க்கின்றேன்...!!!



கனவோடு தான் எதிர்
பார்க்கின்றேன்
இன்னாருக்கு
இன்னார் என்று
எழுதிய என்னவள் தான்
எங்கே போனாள்
இமைகள் கூட
கேள்விக்கணைகளை
தொடுத்துவிட்டு
காத்துக்கிடக்கின்றனவே
காணாத அவள்
வருகைக்காக ஏங்கிக்
கிடக்கின்றனவே...!!!

பாதி வரை
பயணித்தவள்
பாராமல் போனதன்
மாயம் தான் என்னவோ
கட்டிய கூட்டை
கிழித்துச் சென்றதன்
தாகம் தான் என்னமோ
தடுமாறுவது உன்னை
தாங்கிச் செல்லும் பேழையா
இல்லை நீ ஒரு பேதையா...!!!

கோயில் வரை
சென்றுவிட்டு கை கூப்ப
மனமின்றி
கண்ணயர்ந்து
தூக்கம் கொண்டு
வாழ்கையை தேடுகின்றாய்
வானத்தில் பூக்கும்
வண்ண நிலவே...!!!

வசந்தங்கள் பூத்தது
வண்ணங்களாக வீழ்ந்தது
உன் தூக்கத்தில் மட்டும்
மலர்களாக மலர்ந்தது
எதிர் பார்க்கின்றேன்
என்றும் என்னவளாக
பூத்துக் குலுங்குவாய்
புது மலராகவே...!!!

Monday, February 11, 2013

இதயம்...!!!




எத்தனை கொடூரம்
உள்ளுக்குள் புதைத்து வைத்து
மெல்லவும் முடியாது
விழுங்கவும் முடியாது
ஏங்கித் தவிக்கும்
தவிப்பில் தெரியும்
வலிகளின் ரணங்கள்...!!!

வாய்க்கு வந்தபடி
திட்டித் தீர்க்கும்
மௌனங்கள் முன்
கதறத் தெரியாது
கண்ணீரும் கண்டறியாது
துடித்துக் கொள்கின்றதே
சுகமான
சுமைகளுக்காகவா இல்லை
தூங்காத இரவுகளுக்காகவா...!!!

தினம் தினம்
பகட்டுக்காக
பதம் பார்க்கின்றார்கள்
எத்தனை தரம்
இடிதான் நேரடியாகத் தாக்குமோ
இல்லை அடிமேல் அடிவைத்து
வாழ்கையாக மாற்றிக்கொள்ளுமோ
வாயில்லாப் பூச்சியாக மட்டும்
மரணிக்க துடிக்கின்றதே
யாருக்காக இத்தனை மோகமோ...!!!

அழகான இதயம்
அரவணைப்பின்றி
அலங்கோலமாக
துடிக்கின்றதே என் கைகளுக்காக
பார்த்துக் காத்து நிற்கின்றதே
நிம்மதிக்காவது
அவள் இதயத்தை
வருடிப் பார்க்கின்றேன்
அவள் புன்னகைக்காக...!!!

அழகி....!!!!



செவ் வாலைத் தண்டிலே
உன்னை செதுக்கி
வைத்தவர் யார் தானோ.
கண்ணால் கண்டவுடன்
தடுமாறித்தான் போகின்றேன்
உன் பக்கம் வந்து நான்
மயங்கித் தான் சாய்கின்றேன் ...!!!

கூடுகட்டி அழகிய பூக்கள்
தொங்கும்
உன் கொண்டையிலே
என் கண்ணும் பட்டு
மெதுவாக உன் கழுத்து
சங்கைத் தான்
நோட்டம் இருகின்றதே
உன் உதட்டில் வழிந்து ஓடும்
சாயம் பட்டு
என் மனமும் தான்
மாறிவிடுகின்றதே...!!!

நங்கூரம் இட்ட
உன் இடையில் நான் தான்
கிறங்கிப் போகின்றேன்
நாடகம் ஆடும்
உன் கண் இமையிலும்
சிக்கித்தான் தடுமாறி
என்னை
மறந்து தான் சாகின்றேன்...!!!

அழகி என்று உன்னை
ஒற்றை வரியில்
சொல்லி விட ஏங்குதே
என் இதயம்
உன்னை ஒவ்வொன்றாக
வர்ணிக்கத் தான்
தடுக்கின்றதே என் மௌனம்...!!!

எனக்குள் புதைந்துவிட்ட
அழியாத அழகி நீ
பிரித்தெடுக்க முடியாத
புதுமை நீ
மனதுக்குள் மட்டும்
வர்ணித்துக் கொள்கின்றேன்
வெளியில் மற்றவர்களுக்கு
கேட்காமலேயே...!!!

Friday, February 1, 2013

அம்முவாகிய அவள்...!!!





சிறகடித்து பறந்தவள்....
இன்று மனதால்...
சிதைந்து போய்...
போகின்றாள்...!!!

கவலைகள்...
அவளை தொட்டதில்லை...
காரணம் இன்றி...
யார் கண்ணும்....
அவள் மேல்...
பட்டதில்லை...!!!

இன்றோ...
நடைபிணம்...
ஆகிவிட்டாள் ...
பலர் கண்கள்...
அவள் மேல் பட்டு...
பாடாய்ப் படுத்தியதால் தானோ...!!!

அமைதி தேடி...
அலைகின்றாள் ...
ஆறுதலுக்கு ...
யாரும் இல்லாததால்...
இன்று தான்...
உலகையும்...
புரிந்து கொண்டாளோ...!!!

காவலாய் வந்தவன்...
கண்ணீர் தந்து...
சென்றுவிட ...
கண்ணீர் துடைக்க...
நின்றவன்...
கைகள் இழந்து...
நிற்கின்றானே ...
அவள் கண்ணீரை...
நிறுத்த...
பலர் கண்கள் தான் ...
சிதைகின்றதே...!!!

பாடாய் படுத்தும்...
வாழ்வை மறந்து...
எங்கோ போகின்றாள் ...
கால்களுக்கு தான் தெரியும்...
நிறுத்தும் இடமும்...
நிம்மதி உறைவிடமும்...!!!

அம்முவாகிய அவள் ...
இதயப் பாரத்தை...
அணைத்துக்கொண்டு...
புறப்பட்டு விட்டாள் ...
புது வாழ்வைத் தேடி...!!!

புயல் காற்றுக்களும்...
ஓயட்டும்...
புது வாழ்வும்..
அவளை ...
அமைதியாக்கட்டும்...
அமைதி தான் கிடைக்குமா?... !!!

வேதம் சொல்லும் கதை...!!!





பழைய...
பஞ்சாக்கம்...
பார்ப்பதற்காக...
சாஸ்திரியை...
தேடிச் சென்றேன்...
என்...
கன்னிப்பருவதில் தான்...
கண்டம் என்றார்...
காண்டம் படிச்சு ...
என் கையில்...
இருந்ததையும்...
பிடிங்கிக்கொண்டார்..!!!

முஸ்லிம்...
நண்பர் கூட...
என்னைப் பார்த்ததும்
அல்லாவின்...
நாமம் சொல்லு...
எல்லாமே...
வெற்றி தான் என்றார்...
அதையும் செய்து...
பார்த்தேன்...!!!

கிறிஸ்தவ தந்தையோ...
சமயம் மாறு...
வாழ்வே...
மாறும் என்றார்...!!!

நானோ எல்லா...
சமயமும்...
மாறிப்பார்த்தேன்....
எல்லா வழியிலும்...
தேடிப்பார்த்தேன்...
நிம்மதி மட்டும்...
கிடைக்கவே இல்லை...!!!

இன்று...
மனிதனாக மட்டும்...
மாறிப்பார்த்தேன்...
என்னைத் தேடி...
நிம்மதி தானாக வந்தது...
நிரந்தரமாகவே...!!!

அன்பு...!!!





கண்களில்....
ஒளியாகி என்றும்
கூடவே பிறந்திடும்...
உறவு ...!!!

இறுக்கத்தின் பிடியில்...
இன்பமாக...
விட்டுக்கொடுக்கா...
புனிதமான...
கோயில்தானே...!!!

விலை மதிக்கா...
உன் மடியில்...
தவழ்ந்திடும்...
குழந்தை உருவம்...
வஞ்சம் இல்லா..
நெஞ்சம்...
கொண்டது தானே...!!!

வார்த்தைகளில்...
ஜாலம் கொண்டு...
மயங்கிடும்...
பண்பைக்கண்டு...
பொய்களை...
தூக்கி எறிந்து...
உண்மையாக வாழ்ந்திடும்...
உணர்வு தானே...!!!

ஏக்கம்...
கிடைக்காவிட்டால்...
இனம் புரியாத...
தாக்கம்...
ஏங்கியோர் தான்
எத்தனை எத்தனை...
அன்புக்காக...
ஏங்கியோர் தான்...
எத்தனை எத்தனை...!!!

கிடைத்த அன்பை...
பேராசை வாட்ட...
நழுவ விட்டவர் தான்..
எத்தனை எத்தனை...!!!

நம்பிக்கை என்னும்...
நம் கையை...
பிடித்துக்கொண்டு...
நடப்போம்....
அன்பென்னும்...
சொந்தத்தோடு...!!!