Thursday, April 19, 2012

அழியாத கோலங்கள்.....!!!


நினைவுளில்...
அவள் ஒரு...
வசந்த...
காலம் ...!!!

காலங்களில் ...
அவளோ...
என்னுடன்...
வாழும்...
காலம் ...!!!

சோகங்கள்...
கண்டு...
துடித்துப் போவாள்...
கண்ணீர் கண்டு...
நொறுங்கிப் போவாள்...!!!

பார்வையில்...
பல அர்த்தம்...
சொல்பவளின்...
மௌனத்தில்...
பல மொழிகள்...
சொந்தமானதே...!!!

அவளோ...
தீண்டாத...
ஒரு விளக்கு...
தீண்டப் போனால்...
சுடும் நெருப்பு...!!!

என்...
இதயச் சுவடுகளில்...
அவள் தடங்கள்...
நிரந்தரம்...
ஆகிவிட்டதே...!!!

நினைவுகளை...
அவளுக்காக...
சொந்தமாக்கிக்...
கொண்டேன் ...!!!

உணர்வுகளை...
ஊமையாக்கி...
உள்ளுக்குள்...
பேசிக் கொண்டேன்...!!!!

உயிரோடு...
ஒட்டிவிட்ட...
பிரியாத...
என் உயிரே...!!!

உனக்காக...
வாழ்கின்றேன்...
உறவோடு நானே...!!!

பூப்படைதல்...!!!


கூனிக்குறுகி...
கூட்டத்தின் முன்...
அவள் இருக்க....!!!


தாய் தந்தையரோ...
வந்த கூட்டத்தை...
எண்ணிப்பார்க்க...!!

வெற்றிலை...
பாக்குகள்...
சுற்றி நின்று...
வேடிக்கை பார்க்க....!!!

பருவ மாற்றத்தில்...
பெண்ணவளும்...
நெளிந்து நிற்க....!!!

என்னடா சோதனை...
தமிழச்சியாய்...
பிறந்தால்...
வந்த வேதனையா...!!!

என்ன நடந்தது...
ஏன்...
இந்த திருவிழா...
பெற்ற...
மகளை வைத்து...
பொருட்காட்சியா....!!!

பரிசுப்பொருட்களும்....
குவிகின்றது...
அவள்...
மனமோ...
வெந்து சாகின்றது...!!!

யாருக்கு தெரியும்...
அவள்...
மன உளைச்சல்கள்...!!!

பெண்ணாக...
பிறந்ததால் தான்...
அவளுக்கு...
வந்த விதியா...!!!

பெற்றவளும்...
பெண் தானே...
அவளின் கூச்சம்...
தாயவளுக்கும் ...
புரியவில்லையா?...!!!

கேடு கேட்ட...
மனித இனமே...
சிந்தித்து பார்...
பருவ மாற்றமும்...
கொண்டாட்டமா?...!!!

ஊமையின் ராகம்


உனக்குள்ளே...
ஒரு ராகம்....
ஊருக்கில்லை
தாளம்...!!!

உன்....
கண்கள் மட்டும்...
பேசுதே....
உன் வலிகள்....
மட்டும்....
அருவியாய்...
சிதறுதே....!!!

உன்னைச் சுற்றியே....
பூ....
மேகங்கள்...
உனக்குள் மட்டும்....
ஏன் தானோ...
தனிமை ...
சோகங்கள்...!!!

கதிரவன் கூட...
உன்னைக்...
கண்டுதானே...
குளிர்வடைவான்...
கார்மகமே....
சுட்டெரிக்கின்றாயே...
உன்னை நீயே...
பற்றவைக்கின்றாயே...!!!

பதறிப் போகின்றேன் ...
சூடான உன்....
கண்களின்....
வெப்பத்தில்...
கருகிப்போகின்றேன் ...
என்னவளே....!!!

உனக்குள்....
ஒரு வாட்டமா...
ஏன் தான் ...
இந்த...
தடுமாற்றமோ...!!!

உன்னில் ...
நான்...
வாழ்கின்றேன்...!!!
நீ...
வாடியதால்...
இன்று...
நானும் வாடுகின்றேன்...
உன்னோடு சேர்ந்தே...!!!

Tuesday, April 17, 2012

கேள்வியின் நாயகி


என்...
பதில்களின்...
நினைவுகள்...
பகுத்தறிவின்...
சின்னங்கள்...!!!

எத்தனை...
வருடல்கள்...
நிம்மதியின்...
தழுவல்கள்...!!!

காயங்கள்...
நான்...
கொண்டால்...
மருந்துகளும்...
நீ தானே...
என்...
மனதின் காயம்...
சொன்னேன்...!!!

வாழ்க்கை...
தத்துவங்கள்...
உன்னிடம்...
பாடம் கற்குமே...!!!

இன்றோ...
உன் குருதி...
துடிக்கின்றதே...
உனக்கே...
தெரியாது...
வசைபாடும்...
மனிதரைக்கண்டு...!!!

காலத்தின்...
கட்டளை...
உனக்கு மட்டும்...
ஏன்...
சோதனை மேல்...
சோதனை...!!!

உனக்குள்...
அழுகின்றாயே....
வேதனை...
வெளியில் சொல்லி...
பழக்கமற்றவள்...
என்பதால் தானோ...!!!

ஊமையின்...
ராகம்....
யாரறிவார்...
உனது கானம்...
நானறிவேன்...
என்...
நாயகியே...!!!

உன்...
ரணங்களை...
நான்...
சுமக்கின்றேன்...
கலங்காதே...
என்னவளே...!!!

ரோஜா மலர்


உதிராத...
புதிய மலரே...
உன்...
புன்னகை..
மட்டும்...
உதிரக் கண்டேன்...!!!

யாருக்கும்...
பணியாத...
உன்...
உள்ளம்...
அன்புக்கு ...
அடிமையாகும்...
அழகில்...
வீழ்ந்தேன் நானும்...!!!

நீயோ...
ஒரு...
தனிப்பிறவி
உன்னால்...
வாழ்பவர் முன்...
நீதான்...
புதுப் பிறவி ...!!!

உன்...
கண்கள் மட்டும்...
தேடும்...
கலங்கும்..
கண்களுக்கு ...
கனிவுரை...
சொல்லத்தானே...
தினம் துடிக்கும்...!!!

காதல்.....
வார்த்தை...
உன் பக்கம்....
வந்ததில்லை...
உன்....
வார்த்தைகளில்...
நடிப்பு ...
இல்லாததால் தானோ....!!!

இன்றோ...
உன் மனதில்....
ஒரு சஞ்சலம்...
உனக்கே....
தெரியா ஆதங்கம்....
உன்னைக் கொள்கின்றதே...
நடிகனின் கைகளில்....
சிக்கிகொண்டாயா....
உன்னை அறியாமலேயே...!!!

நதிக்கரையில்....


நீண்ட...
காலம்...
காத்து இருந்தேன்...
இளவம்....
காத்த கிளி போல...!!!

கண் முன்னே..
துள்ளித் திரிந்தது...
நான் ரசித்த...
மீன் குஞ்சு...!!!

காத்திருந்தேன்...
காலமெல்லாம்...
எனதாக்கி கொள்வேன்...
எனக்குள்...
ஒரு இறுமாப்பு...!!!

வாய்...
மொழிகள்...
மட்டும்...
பரிசாகப் பெற்றேன்...!!!

காலத்தின்...
மொழிகளை...
கனவாக ...
கண்டுகொண்டேன்...!!!

பாவமறியா....
மீன் குஞ்சும்...
துடியாய்...
துடிக்கின்றதே...!!!

கண்ணீர் கூட...
யாருக்குத் தான்...
தெரியப்...
போகின்றதோ...!!!

கொக்குகளும்...
வட்டமடிக்கின்றது...
என்...
கண் முன்னே!!!

காத்திருந்த...
என் விழிகள்...
கானலாகப்...
போய்விடுமோ...
காய்கின்றேன்...
நான் இங்கே...!!!

Friday, April 13, 2012

மோக முள்...


எள்ளி நகையாடியது....
என்னைப்....
பார்த்த....
தென்றல்கள்...!!!

எதுவுமே...
பேச விருப்பமின்றி....
விலகிச்....
சென்றனர்...
என்னவர்கள்...
கண் முன்னே...!!!

காதல்கள்...
கை...
கொட்டிச் சிரித்தது....
இதயங்கள்....
சிதறித்...
துடித்தது...!!!

எல்லாமே...
வேடிக்கையாக...
தெரிந்தது....
புரியாத புதிராக...
மறைந்தது...!!!

வாழ்க்கை...
என்னிடம்....
தோற்றுப் போனது...
வாழத்...
தெரியாத...
என்னைப் பார்த்தே...
பயம் கொண்டது...!!!

எல்லாமே...
என்னை விட்டு...
போய் விட்டது....
நம்பிக்கை...
கை பிடித்து...
நடக்கின்றேன்...

மோகம்...
எனக்கு ...
முள்ளாகவே....
தெரிகின்றது...
முன் நோக்கி...
செல்கின்றேன்...
திரும்பி....
பார்க்காமலேயே...!!!

வயதில்லா காதல்....


கருவறையில்...
தொடங்கி...
காற்றோடு ...
கலக்கும் வரை...
யாரைத்தான்...
விட்டது...!!!

திகட்டாத...
சின்னமல்லோ..
காதல்...
சின்னங்கள்...!!!

சிந்தனை....
தூண்டிடும்...
நித்தமும்...
புதிதாய்...
பிறந்திடும்...!!!

கற்றவர்...
கண்கள் கூட...
மங்கிடும்...
காதல்...
வார்த்தையில்...
நெகிழ்ந்திடும்...!!!

ஏற்ற...
தாழ்வுகள்...
தொலைந்திடும்...
ஏக்கம்...
மட்டும்..
பிறந்திடும்...!!!

மாற்றங்கள்...
நிகழ்ந்திடும்....
மனதைத் தானே...
தினமும்...
தின்றிடும்..!!!

காதல்...
வந்து விட்டால்...
வயதுகளும்...
தொலைந்து விடும்...
வாலிபங்கள் தானே......
தவழ்ந்து வரும்...!!!

முதல் பார்வை


கண்ணோடு....
கண்....
மோதிக்கொண்டது....
அவள்.....
கடந்து....
சென்ற பொழுது...!!!

இதயம் மட்டும்....
துடித்துக்...
கொண்டது...
அவள்...
பார்வைக்காக
ஏங்கிக் கொண்டது ...!!!

என்ன...
கண்டேன்...
அவளிடம் மட்டும்...

எதற்காக...
இந்த ஏக்கம் ...
எனக்குள் மட்டும்....
வந்த...
தாக்கம்...!!!

காதல்....
வலியா...
இல்லை...
அவள்...
இதயத்துக்கு...
போகும்...
வழியா...!!!

அவள் முதல்...
பார்வையிலேயே...
இழந்து விட்டேன்...
என்னை....
தொலைத்து விட்டேன்....!!!

தேடுகின்றேன்...
என்னை...
நானே தேடுகின்றேன்...!!!

அவளுக்குள்...
நான்...
தொலைந்ததை...
மறந்து....
தேடுகின்றேன்....!!!

Monday, April 9, 2012

நான் யார்?...!!!


உனக்கு...
தெரியவில்லையா...
உண்மை தான்...
புரியவில்லையா...!!!

என்னையே....
மறந்து...
விடுகின்றேன்...
உள்ளத்தில்...
கீறலோடு தானே...!!!

பாடைகள்...
நானே செய்து...
வைக்கின்றேன்...!!!

பாதையும்...
நானே....
தேடிச் செல்கின்றேன்...!!!

கனவுகளில்...
வாழ்வும்....
மூழ்கின்றதே....!!!

காணலாக...
போய் விடுமோ...
யார் அறிவார்...
நானறியேன்...!!!

என்னையே...
நொந்து...
கொள்கின்றேன்...!!!

இயலாமை...
அறிந்து...
வெந்து ...
கொள்கின்றேன்...!!!

நான் யார்...
பல தடவை...
கேட்டும் விட்டேன்...!!!

பதில்...
தெரியாமல்...
மீண்டும் மீண்டும்....
கேட்டுக்கொள்கின்றேன்....!!!

புன்னகை..


என் ...
இதயமே
ரணம் இழந்தது...
நீ தந்த...
சின்னத்தினால்...!!!

பொன்னகை ...
அணியா...
புன்னகையே...
பூக்களின்...
மேனியை...
கொண்டவளே...!!!

கண்களில்...
ஈரம் சுரக்கும்...
மற்றவர்...
வேதனை...
கண்டு மட்டுமே...
உன் கண்கள்...
தெறிக்கும்...!!!

உன்னைப் பற்றி...
நீ தான்....
நினைத்ததுண்டோ...
உனக்காகத்...
தான் நீ...
என்றும்...
வாழ்ந்ததுண்டோ...!!!

யாருக்காவோ....
அழுகின்றாய்...
யாருக்காவோ....
வாழ்கின்றாய்...
உனக்காக...
வாழ்கின்ற ...
என்னை மறந்து...!!!

உறவென்று...
உன்னை...
நினைக்கின்றேன்...
உன்...
உள்ளத்தில்...
நான் இன்றி...
யார் தான்...
வாழ்வாரோ...!!!

Sunday, April 8, 2012

இரு தலைக்கொல்லி எறும்பு...!!!


ஏன்...
இந்த தண்டனை...
எதற்காக தானோ...
இந்த வேதனை...!!!

யாருக்காக...
மோதுகின்றேன்...
யாரை...
நினைத்து...
வாடுகின்றேன்...!!!

என்னவளின்...
வலிகளில்...
துடிப்பதா....
இல்லை...
நடிப்பதா...!!!

என்ன...
பாவம் செய்தேனோ...
நானும்...
ஏன் தான்....
பிறந்தேனோ...!!!

சோகங்களை...
பருகி...
சுகத்தை...
நாடுகின்றேன்...!!!

சுகத்தை...
தொலைத்து...
கல்லறை....
தேடுகின்றேன்...!!!

யாரை....
நினைத்து...
தினம்...
வாடுகின்றேன்...!!!

அவள்...
வருகைக்காக...
தானே நானும்...
உயிர்...
வாழ்கின்றேன்...!!!

உன்னை தவிக்க விடுகின்றேன் .....!!!


மனதில்...
உன்னை....
நினைக்கின்றேன்....!!!

மௌனமாக...
உன்னை...
அணைக்கின்றேன்...!!!

கவியில்.
உன்னை...
குழப்புகின்றேன்...!!!

விதியில்...
நானே...
அகப்பட்டுக்...
கொண்டேன்...!!!

கனிவாய்...
உன் முகம்...
கண்டதுமே...
மறந்து...
விடுகின்றேன்...!!!

என்னை...
நானே...
இழந்து...
விடுகின்றேன்...!!!

கண் மூடி...
உன்னை..
விழுங்கிக்...
கொள்கின்றேன்...
சுவாசிப்பதட்காகவே..!!!

உன்னை...
தவிக்க விடுகின்றேன்...
என்னை...
தினம்...
நினைப்பாய்...
என்பதால் தானோ....!!!

உன்னை எதிர்பார்த்து...!!!


ஏக்கத்தில்...
கண்கள் ...
கலைந்திட..
வழிமேல்...
விழி வைத்தேன்...!!!

நீ...
வரும் திசை...
நோக்கி நின்றேன்...
என்னை மறந்தே...!!!

கற்பனைகள்...
சிறகடித்தது....
கவிகள் கூட...
மழுங்கிக் கொண்டது...!!!

என்னவள்...
வருகையில்...
நடுக்கம் கண்டாதா...
இல்லை...
உறக்கம் கொண்டதா...!!!

எத்தனை...
வாட்டங்கள்...
எனக்குள் தான் ...
போராட்டங்கள்....!!!

உன்னை...
எதிர் பார்த்தே...
உணர்வைத்...
தொலைக்கின்றேன்...
ஊமையாகின்றேன்...!!!

சோகங்கள் ...
கூடப் பிறந்ததினால்...
உறவானதோ...
என்னவளே...!!!

உன்னுடன்...
உறவாடும் பொழுது....
மறந்து...
விடுகின்றேன்...!!!

கலக்கத்தை...
தொலைத்து...
விடுகின்றேன்...!!!

உறவே...
வருவாயா...
என்னை...
அணைப்பாயா?...!!!

இறந்தாலும் சுகம் தான்...!!!


இன்றுவரை...

நினைத்ததில்லை...
ஏக்கத்தில்...
வீழ்ந்ததில்லை...!!!

கண்ட பொழுது ...
கலங்கினேன்...
கனவில்...
தினம்....
நினைவிழந்தேன்...!!!

அவள்...
செயலாள் ...
தினம்...
மறந்தேன்...
என்னை...
தினம்...
மறந்தேன்...!!!

கண்களால்...
பேசினாள்...
கவிதை...
வரைந்தேன்...!!!

கனவில்...
பேசினாள்...
என்னை...
மறந்தேன்...!!!

இன்றோ...
அவள்....
பேசினாள்...
எனக்குள்...
அவள் தான்....
பூத்துவிட்டாள்...
அதனை...
உணர்ந்தேன்...!!!

அந்த...
மலர்...
என்னை...
அணைத்த பொழுது...
இன்று...
இறந்தாலும்...
சுகம் தான்....
நானும்...
உணர்ந்தேன்...!!!

உனக்குள் நான்...!!!


உறைவிடம்...
தேடினேன்...
உன்னிடம்...
தேடி வந்தேன்...!!!

அனைத்துக்...
கொண்டாய்...
அளவாகப்..
பேசினாய்...!!!

ஆறுதல்...
ஆனேன்...
உன்னிடம்...
நானானேன்...!!!

என்...
உள்ளத்தில்...
மருந்தானாய்...
எனக்குள்...
நீ ஆனாய்...!!!

வாழ்க்கை...
பாடம் தான்....
கற்றுக்கொண்டேன்..
தினம்...
நான் தானே....!!!

அவள்...
சிரித்தாள்...
சிரிக்கின்றேன்...
அவள்...
அழுதால்...
அழுகின்றேன்...!!!

ஏன் தான்...
இந்த மாற்றமோ...
எனக்குள் வந்த...
புது...
நாட்டமோ...!!!

வாழ்கின்றேன்...
அவளுக்குள்..
வாழ்கின்றேன்...
மனதால்...!!!

அவளை எண்ணி துடித்தேன்..!!!



காலையில்...
ஒரு கனவு....
என்னை...
இழந்த ஒரு...
நினைவு...!!!

வந்ததொரு...
செய்தி...
என் உயிர்தோழி....
சொன்னாள்
ஒரு செய்தி...!!!

என்...
உயிரை உரித்தது...
உணர்வும்...
கொதித்தது...!!!!

என்னவள்...
வீழ்ந்த செய்தி...
என்னை...
பிளந்து...
சென்றது...!!!

அவள்....
ஒரு மலர்....
வாடாத மலர்...
வாடிய...
பொழுது...
நானும் வாடினேன்...
என்னை...
மறந்து...
நானும் தொலைந்தேன்...!!!

இன்று....
அவள் மீண்டும்....
பிறந்த பொழுது...
மகிழ்வாக...
நானும் பிறந்தேன்...!!!

என்...
பயணமும்...
தொடர்ந்தேன்...
விட்டதில்...
இருந்தே...!!!

உன் பார்வையில்...



கனவுப்...
பார்வையில்....
கண்டேன்...
தினம் உன்னை!!!

நினைவுப்...
பார்வையில்...
நின்றேன்...
உன் முன்னே...!!!

காதல்...
பார்வையில்...
கவி வடித்தேன்...
கண் முன்னே...!!!

உந்தன்...
பார்வையில்...
ஊமையானேன்...
தினம் நானே...!!!

உறவின்...
பார்வையில்...
உனதானேன்...
நான் தானே...!!!

வாழ்க்கை...
பார்வையில்...
தொடர்வாய்...
என் பின்னே...!!!

உலகப்...
பார்வையில்...
உனக்குள்...
நானானேன்...!!!

உண்மை...
பார்வையில்...
இருவரும்...
ஒன்றானோம்...!!!

இறைவன்...
பார்வையில்...
இணைந்தோம்...
புரிந்தோம்...
உறவானோம்...!!!