Friday, January 24, 2014

அகராதி அவள்...!!!





எத்தனை புரிதல்
அவள்
முகங்ககளில் தான்
எத்தனை கவிகள் ...!!!

ஒவ்வொரு
வடுக்களும்
அவளுக்குள் மட்டும்
எப்படித்தான்
சுகமான சுமையாக
உரு மாறிக்
கொள்கின்றனவோ...!!!

ஊமையாகி
அவள்
உணர்ச்சிகள் மட்டும்
உறங்கிக்
கொள்கின்றனவே
உதிராத அவள்
வார்தைகள்
என்ன தான்
பேசிக்-
கொள்ளுமோ ...!!!

பதுமையான
அகராதி அவள்
வேதனைகளை
விழுங்கிக்கொண்டு
மாற்றுமொழியில்
மயங்க வைக்கின்ற
வித்தையை
எங்கேதான்
கற்றுக்கொண்டாளோ...!!!

அவள்
புன்னகை என்னும்
புது மொழியாள்
என் மனதில்
பூத்துவிட்ட
வாசனை மாறா
பூச்சரமும்
அவள் தானே ...!!!

இனியவள்...!!!




தண்ணீர் தாகம்
எடுத்த பொழுது
மறந்த சோகம்
துளைத்தெடுத்தது...!!!

கண்ணீர் சுரந்து
அவள்
சென்ற வேளை
நெஞ்சம்
அடைத்த
பார்வை அன்றோ...!!!

வாழ்வும்
மரத்துப் போய்
வார்த்தையும்
பொய்யானதே...!!!

காற்றும்
திசை மாறி
கானல் ஆனதால்
கண்ணும்
சிவந்து போய்
குளம் ஆனதொ...!!!

கல்
நெஞ்சம் என்று
நான் கடிந்த போது
பார்வையாலே
அவள்
வாதம் வென்றது...!!!

சொல்ல
முடியாமல்
விக்கித்து
நின்றவளை
அவள்
கண்கள் வழியே
கண்டேன் நானும்...!!!

அவள் உள்ளம்
என்னிடம் மட்டும்
உள்ளது
உடம்பு மட்டும்
சென்றது
திரும்பி பார்த்து ஏதோ
முணுமுணுத்தபடியே ...!!!

சிதைந்த தோட்டங்கள்...!!!




பாசத்தில்
பெற்றவர்கள்
விழி மூடா
காத்தவர்கள்...!!!

எதிர்கால
கனவு கண்டு
இன்பத்தில்
வாழ்ந்தவர்கள்...!!!

எத்தனை
துயரம் மறைத்தே
எங்கள் உயரம்
காணத் துடித்தவர்கள்...!!!

நாம் தான்
என்ன செய்தோம்
நம்மை
பெற்றவர் மனம்
குளிர்ந்திடவே...!!!

பருவ வயதில்
பகுத்தறிவை
இழந்தோம்
காலக் கோளாறினால்
கருவறை மறந்தோம்...!!!

மாயக்
காதலை மட்டும்
மனதில் நிறுத்தி
பெற்றவரின்
கனவைத் தானே
புதைத்துக்
கொண்டோம் ...!!!

தீய
நடத்தையின்
சொந்தக்காரர்
ஆனோம்...!!!

வாழ்வென்னும்
அழகிய தோட்டத்தை
உணர்வுக்கு மட்டும்
அடிமையாக்கி
சிதைத்துக்
கொண்டோமே...!!!

புது நாத்து....!!!





நனைந்து
மிதந்து வந்து
கண்ணில் ஓரு
வெளிச்சம் தந்தாயோ...!!!

பூட்டிய
கல் இதயத்தில்
உன்னிதளால் தான்
வஞ்சம் தீர்த்தாயோ...!!!

நேர்த்திக் கடன்கள்
தீர்க்கத்தான்
என் பக்கம்
மலரானாயோ...!!!

உதயம்
ஓய்ந்ததில்லை
உன் வரவு காணாமல்
தேய்ந்ததில்லை...!!!

தினம் ஒரு
மாறுதல்
அவளால்
வந்த ஆறுதல்...!!!

வயக்காட்டில்
புதுத் தளிர் போல்
என்ன
மினுமினுப்பு...!!!

திமிர் நடையும்
திகட்டாத
வதனமும்
உனக்கு மட்டும்
சொந்தமானதோ...!!
ஊரே
கும்மி அடிக்கின்றதே
உன்
வரவைக்கண்டு
ஊர்கோலமாய்...!!!

என்
வீட்டுக்கதவுகள்
உன்
வரவுக்காக
ஏங்கி தவிக்கின்றதே...!!!

சமையல் அறை
மகிழ்ச்சி
வெள்ளத்தில்
உன் கைப்பக்குவம்
காணத்தான்
துடிக்கின்றதே...!!!

புது நாத்தே
புது மாலை
கொண்டு வரும்
நாள் தான் எப்போ...!!!

அவளுக்கு என்ன ஆச்சு...!!!





காலையிலே
மலர்கின்றாள்
மாலையிலே சுடுகின்றாள்...!!!

பாதையிலே
நடக்கின்றாள்
பதட்டத்தில் கதைக்கின்றாள் ...!!!

நித்தம்
என்னைக் கானாது
வெறி பிடித்து
பித்தாகின்றாள்...!!!

கண்டு விட்டால்
காயப்படுத்தி
விடுகின்றாள்
இதயத்தை தானே...!!!

ஏதோ போக்கில்
போனவனை
தனக்குள்
அடக்கிகொண்டவள்...!!!

தயங்கிய
போதெல்லாம்
அணைத்துக் கதை
பேசியவள்...!!!

இன்று அவளில்
ஒரு தடுமாற்றம்
இல்லை தனிமாற்றம்...!!!

என்னை
சோதித்துப்
பார்க்கின்றாளா இல்லை
துரத்தப் பார்க்கின்றாளா...!!!

மனதில்
ஒரு நெருடல்
என்னையறியாது
ஒரு ஏக்கம்...!!!

கற்பனை உலகில்
என்கதை
முடிந்துவிடுமோ
ஏன் இந்தக்
கலக்கம்
நினைத்துப் பார்க்க
முடியவில்லை
அவளின்றி என்பயணம்...!!!