Wednesday, March 27, 2013

காதலும் நட்பும்....!!!





கண்ணால்...
பேசிவிட்டு...
கனவில்...
தூங்கினேன்...
காதல் என்றார்கள்...!!!

மனதால் அவள்...
வாழவேண்டும்...
தினம் ஏங்கினேன்...
புனித நட்பு...
என்றார்கள்...!!!

நினைவுகள் மட்டுமே...
மாற்றிக்கொண்டேன் ...
உறவுகள் தானாகவே...
மாறிக்கொன்டதே...!!!

காதல் விளையாட்டில்...
எல்லாமே மறந்து...
சிறகு முளைத்து ...
நட்பாகியவுடன்...
எல்லாமே...
தேடி வந்து...
கை கொடுத்ததே...!!!

தடுமாறிய...
உள்ளங்கள்...
அமைதியாகின...
தடம்மாறிய...
வார்த்தைகளோ...
தடுமாறின...
நட்பு எல்லோர்...
மனதையும்...
நிம்மதி வழியில்...
இட்டுச் சென்றதே!!!

காதல்...
கண்ணீர் குடைக்குள்...
முடங்கிக் கொண்டதே ...
கண்ணீர்களும்...
வெள்ளமாக...
ஏன் தான்...
பெருக்கெடுத்ததோ...!!!

வசந்தம்...
எங்கே வீசுகின்றது...
தேடி அலைந்தேன்...
நட்பு வந்து...
அழைத்து சென்றதே...
நம்பிக்கையோடு...
செல்கின்றேன்...
நட்பாகவே...!!!

மெழுகுவர்த்தி...!!!





அமைதியாகி...
யாருக்கும்...
அடி பணியாது...
நிமிர்ந்து நின்று...
ஒளியாகி...
கை கொடுத்து...
மற்றோர்...
வழிகாட்டியாக...
வாழ்ந்திடும்...
புதுமை தானே....!!!

கண்ணீர்களை...
அடக்கிக்கொண்டு...
பன்னீர்களாக...
வாசனை வீசும்...
உள்ளங்கள்...
உண்மையில்...
யாருக்காகவோ...!!!

நித்தம் ஏதோ...
சில...
புயல் காற்றுக்களும்...
அடை மழைகளும்...
தாக்கிடுமே ...
இவர்கள் எண்ணம்...
புரியாமலே...
வேதனைகளை...
கொட்டிவிட்டு...
போய்விடுமே...!!!

தனிமை...
இவர்களுக்கு...
பிடித்துப்...
போய் விட்ட பாதையா...
நேரம் கூடி வரும்...
என்று கனவு காணும்...
தேவையா...!!!

தங்களை...
உருக்கிக் கொண்டு...
என்ன தான் சுகம்...
காண்கின்றார்களோ...
இன்பத்தில் மட்டும் ...
எப்படித்தான்...
வாழ்கின்றார்களோ...!!!

போதனை வாழ்வில்...
பழகிப்போனவர்கள்...
வசந்தங்கள்...
இவர்கள் பக்கம்...
திரும்பாது...
போவதில் தான்...
என்ன மாயமோ...!!!

புயல் காற்றுக்கள்...
இவர்கள் பக்கம்
வீசாது திரும்பி போய்...
இவர்களை...
வாழ விடுமா...!!!

கடல் அலைகள்...!!!



கரையத் தொட்டு...
என்ன தான்...
சொல்லிப் போகின்றாய்...
நீ செய்தி...
சொல்கின்றாயா...
இல்லை...
கண்ணீர் ஓவியம்...
வரைந்து செல்கின்றாயா...!!!

துள்ளி வரும்...
வெள்ளலையே...
தூது கொண்டு வரும் ...
உன் விழிகள்...
தூங்காது....
நனைகின்றதே...
எதற்காகத் தான்...
இந்த ஆர்ப்பரிப்போ...!!!

கல்லிதயங்களை...
கரைத்து விடப் ...
பார்க்கின்றாயா...
கரையாதது என்று...
தெரிந்தவுடன்...
திரும்பி...
போகப் பார்க்கின்றாயா...!!!

வெள்ளந்தி வேஷங்கள்...
கலைந்துவிடப்...
போகிதன்றோ...
உள்ளொன்று ஏதோ...
துடிக்கிதே ஏன் இன்று...!!!

நித்திய சோதனைகள்...
நிம்மதியற்றுப்...
போகின்றனவே ...
நினைத்ததெல்லாம் ...
நிர்மூலமாகி...
வதைக்கின்றனவே...!!!

கற்பனைகள் கூட...
கைதியாகி விட்டனவே...
கலங்கரை...
விளக்குகள் கூட ...
அணைந்து...
திசைகள்...
மாற்றி விட்டனவே...!!!

மோகத்தில் வந்த...
அலைகள்...
முகம் சுழித்து..
சென்று விட்டனவே ...
நிலை தெரியாது...
அவள் மனமும்...
நிம்மதியற்றுப்...
போகின்றதே...
கனவுகள்...
கலைந்தது போல்...!!!

ஆசிரமம்...!!!



ஆதங்கங்கள்...
அமைதியாகி...
அழுகைகள்...
வெளியே தெரியாது...
அடங்கிடும்...
கூடம் தானே...!!!

எத்தனை...
கற்பனைகள்...
எத்தனை...
சந்தோசங்கள்...
எத்தனை...
பாசத் துடிப்புகள்...
அத்தனையும்...
அடங்கிடும்...
உறைவிடம் தானே...!!!

கண்களில்...
எத்தனை கனவுகள்...
சுமந்தோர்...
காயப்பட்டு...
இதயம் மட்டும்...
நொந்து...
இல்லாத
வாழ்விற்காக ஏங்கி...
வருத்திக்கொள்ளும்...
உறவுகள் தான் எத்தனை...!!!

பாவ மூட்டைகள்...
உலகமே...
சுமக்கின்றதே...
பாச மூட்டைகள்...
சுமக்க முடியாது...
அடங்கிகொள்ளும்...
ஆத்மாக்கள் தான்....
எத்தனையோ...!!!

கால ஓட்டத்தில்...
கனவுகள்...
ஆசிரமங்களில்...
புதைந்து...
விடுகின்றனவா...
இல்லை...
புதைக்கப் படுகின்றனவா...
இதயம்...
கொதிக்கின்றதே ...
உண்மை புரியாமலேயே...!!!

அமைதி தேடி...!!!



எதனை...
சாதித்தாய்...
உன் வாழ்வில்...
எதனை இழந்தாய்...
உன்னை மறந்து...!!!

உனக்குள் உன்னை...
நொந்து கொள்கின்றாய்....
உதிரம் வழியா...
திரை மறைவில்...
தினம் தினம்...
வெந்து கொள்கின்றாய்...!!!

வாழ வைத்தவர்கள்...
மனதை கிழித்து...
உன் மன...
சாந்தி வேண்டி...
தேடித் போவதில் தான்...
என்ன நாட்டமோ...!!!

பூ வைத்து...
பொட்டு வைத்து...
வாழ வேண்டியவளே...
பூஜை அறையில்...
மண்டியிட்டு...
எதனைத் தேடுகின்றாய்...!!!

காலத்தை...
நீ தொலைத்தையா...
கன்னித் தன்மையை...
இழந்தாயா
கண்ணீரை மட்டும்...
சொந்தமாக்கி...
செத்து மடிகின்றாயே...
யாருக்காகவோ...!!!

வாழவேண்டியவளே...
வாழ்வு...
ஒரு முறை தான்...
வாழ்ந்து பார்...!!!

வாழ்வில் ஒளி....
வீசவேண்டியவள் நீ...
நீயே அழிந்து போகலாமா...
உனக்காக....
பல பேர் கண்ணீர்கள்...
வழிந்து ஓடலாமா...!!!

நிஜங்கள்...!!!



கண்களால்...
பார்த்துவிட்டு...
கதைகள் பேசி...
பழகிவிட்டோம்...!!!

உண்மைகள்...
உறங்கிக்...
கொள்கின்றன...
உணர்வில்லாது...
பொய்மையில் மட்டும்...
பூரித்துப்...
போகின்றோமே...!!!

ஏதோ ஒரு சக்தி...
நம்மை முடக்கி...
ஆளத்...
துடிக்கின்றதே...
அருவெறுத்துப் ....
போகின்றதே...
இயலாமையின்...
இறுக்கத்தினால் தானோ...!!!

கல்லிதயங்கள்...
கருக்கட்ட தொடங்கி...
முற்களில்...
பாய் விரித்து...
முகம் புதைத்து...
எதையோ...
கணக்குப்...
போடுகின்றனவே...!!!

காலம் போடும்...
கணக்கை புரியாது...
நாங்கள் போடும்...
தப்புக்கணக்கால்...
உவகை...
கொள்கின்றோமே...
புரியாது வாழ்வில் ...
புரியாத மனிதர்கள்...!!!

புனிதத்தை இழந்து...
புதுமைகள் தேடி...
புழுவாகின்றோம்...
நிஜங்கள்...
இறந்துக்கொண்டே...
இதயத்தை....
வதைக்கின்றனவே...!!!

Monday, March 25, 2013

திரை மறைவில்....!!!





கல் மனங்கள்...
கண்ணீரில் கரைகின்றது...
காதல் கொண்ட...
உள்ளங்களோ...
உண்மையில்...
உதிர்கின்றது ...!!!

பாதை...
வகுத்துக் கொடுத்தவன்...
வார்த்தைகள்...
வழி தெரியா..
விழி உடைந்து...
இருண்டு போகின்றதே...!!!

பாசங்கள்..
போட்டி...
போட்டுக்கொண்டே..
வேஷங்கள் போட...
பழகிக் கொண்டதே...
புற முதுகில்...
எதனைத்தான்...
எழுதுவேனோ...!!!

கண்டதெல்லாம்...
கண்கட்டி வித்தையாகத்...
தெரிகின்றதே...
ஏமாற்றங்கள்...
எனக்குள் விதையாகி...
விருட்சம் கொண்டதே...!!!

திரை மறைவில்...
இருந்துகொண்டே...
பல கண்கள்...
என்னை...
குறிவைக்கின்றதே...!!!

பகல் கனவில்...
வாழ்ந்து...
பழகி விட்டேன்...
புதுக் கனவுகள்...
புதை குழிகளாக...
கண்களை...
பறிக்கின்றதே...!!!

தினம் வாழ்கின்றேன்...
தீண்டாது...
என்பக்கம்...
சிறை...
வைக்கத் துடிக்கும்...
அன்பு உள்ளங்களால்...
தினம் வாழ்கின்றேன்...!!!

தோல்வி...!!!






சக்தியையும் புத்தியையும்...
தீட்டிவிடும்...
கூர் தீட்டிய...
ஆயுதம் தானே!!!

சோர்ந்துவிடாது...
உன்னை...
உணர வைத்து
நுணுக்கங்களை...
கற்றுத் தரும்...
போர்வாள் தானே...!!!

காலம் உனக்கு...
சொந்தமானது...
பாதை மாறது...
பயணம் செய் மனிதா ...!!!

கண்டதை....
மனதில் கொண்டு ...
திண்டாடுவதில்....
எதனைக் கண்டாயோ...!!!

வெற்றி போதை...
உனக்கு...
கிடைத்திவிட்டால்...
வந்த பாதை...
நினைத்துப் பார்ப்பாயோ...!!!

தோல்வி கண்டு...
துவண்டு விட்டால்...
சொந்த காலில் தான்...
வாழ நினைப்பாயோ...!!!

தினமும் ஒரு...
போதி மரம்....
தோல்வியாக வந்து...
உனக்கு உரம் ஏற்றி...
செல்கின்றதே...!!!

வெற்றிக் கனிகள்...
கையில் ஏந்தி...
இறுமாப்பு கண்கள்
உன்னை மறைக்காது ...
தோல்வியின் வலிகள்...
உன்னை தினம் தினம்...
காத்திடுமே...!!!

பொறுமை...!!!





பெருமைகள்...
உன்னை தேடிவரும்...
திறமைகள்...
உன்னைச் சுற்றியே...
வேலி போடுமே...!!!

உன்னை யாரும்...
அளவெடுத்து...
விட முடியா ...
மௌனமே...
உன்னைக் காத்திடுமே...!!!

மரியாதை...
உனக்கு கிடைக்கும்...
பொக்கிஷம் தானே...
பொறுமையால் வந்த...
வைர கிரீடம் தானே...!!!

வார்த்தைகளால்...
வாதம் செய்வதில்...
என்ன பெருமையோ...
வேதனைகள் சுமப்பதில்...
என்ன தான் தர்மமோ...!!!

காலங்கள்...
எவ்வளவோ...
மாற்றங்கள் கண்டு...
மறைந்து விட்டன...
மனிதனின்...
பதட்டங்கள் மட்டும்....
மறையவில்லையே...!!!

ஏற்றத் தாழ்வுகள்...
தினம் தினம்...
பிறந்துகொண்டே...
ஆட்கொள்கின்றதே...
அதை முறியடிக்க...
முடியா தடுமாற்றங்கள்...
மனதில் உறவு கொள்ளுதே...!!!

பொறுமை....
உன் உடலுக்கும்...
உன் உள்ளத்துக்கும்...
ஊக்கம் கொடுத்து...
உண்மை...
மனிதனாக மாற்றிடுமே...!!!

மன அழுத்தம்...!!!




மனதை நீ ...
இழந்து மற்றவரை...
துடிக்க வைப்பதில்...
சுகம் கண்டீரோ...!!!

செய்யும்...
பிழைகளில் இருந்து...
தப்பித்துக்கொள்ள...
போடும்....
வேஷங்களில்...
ஒரு வேஷம்..
இந்த வேஷமோ ...!!!

திட்டம் போடாது....
தினம் வாடி...
திடம் கொள்வதில்...
உன்...
சீற்றம் தான் என்னவோ...!!!

உன்னை....
கட்டுப் படுத்தாத...
சாடலை...
மற்றவரை...
மட்டுப் படுத்த...
நினைப்பது...
முறைதானோ...!!!

அமைதியையும் ...
பொறுமையையும் ...
உன்னை விட்டு...
தொலைத்துவிட்டு...
அடங்காது...
அடுத்தவர் மடியில்...
கை வைப்பது...
சரி தானோ...!!!

மனமோ மகுடி...
ஊதுகின்றதே...
அதன் பக்கம்...
வளைந்து ஆடுவதை...
நிறுத்திவிடு...
நிம்மதி...
உன் காலடியில்...
நிரந்தரமாக....
மண்டியிடுமே...!!!

அன்புக்கு அடிமை...!!!



ஆளத் துடிக்கும்...
மனசுகள்...
அங்கலாய்க்க...
அலட்டிக்கொள்ளாது...
அமைதியாக..
அன்பை சுமக்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

காலை வாரி விட்டு...
சுகம் காணும்...
மானிடர் முன்னே...
தரும் வேதனைகளை...
மறந்து கை கோர்க்கும்...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

எங்கும் வஞ்சம்...
எதிலும் ஒரு ஏக்கம்...
இருந்தும் உண்மை....
மனிதனாக வாழும் ....
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

கண் மூடி...
கண் திறந்தால்...
காண்பதெல்லாம்...
வேடிக்கை தானே...
காலத்தின் நிலையறிந்து...
வாழும் மனித...
உள்ளங்கள் தான்...
எத்தனையோ...!!!

அன்பையும் பண்பையும்...
தேடித் திரிகின்றான்...
இவனிடம்...
இல்லாததால் தானோ...
இவன்...
கண்களில் இருந்து...
ஒழிந்து மறைகின்றதோ...!!!

வாழ்வென்ற...
வட்டத்துக்குள் மட்டும்...
புதைந்து கொண்டோம்...
அதனால் தானோ...
மனித மனங்களை...
அறுத்து சுவைக்க...
பழகிக் கொண்டோமோ...!!!

எதற்கும் அடிமை...
இல்லா மானிடன்...
எங்கே காட்டுங்கள்...
அங்கே நான்...
அன்புக்கு...
அடிமையாகி விடுகின்றேன்...!!!

வஞ்சிக்கப் பட்டவள்...!!!



காக்க வைத்து...
கழுத்தில்...
சுருக்கிட வைத்தது...
ஏன் தானோ...!!!

மஞ்சள் தாலி...
எதிர்பார்த்தவள்...
மணவறை நோக்கி...
மனதால்...
நடை போட்டவள்...!!!

இன்றோ விதி...
விளையாடியதால் ...
நிர்க்கதியானாளே....
நிம்மதியற்று....!!!

யார் போட்ட கோலமோ...
யாருக்காக...
இவள் வாழ்வில்...
சாபமோ...!!!

தினம் தினம்...
வேதனை...
சுமக்கின்றதே...
இவள் இதயம்...
கனவில் மிதந்தவள்...
கண்ணீரில்....
நீந்துவது எதற்காகவோ ...!!!

பாக்கியசாலியாக...
பிறந்தவள்...
பைத்திய காரியாகி ...
நடை பிணம்...
இவள் வாழ்வில்...
ஏன் தானோ...!!!

காதல் கொண்ட...
இதயம்...
இன்று கனத்த...
இதயமாகி...
வஞ்சிக்கப் படுகின்றதே...!!!

வாய் மூடி...
மௌனிக்கின்றாளே...
வார்த்தை இல்லை...
வடிப்பதற்கு....
அவள் வாழ்வு
என் சிந்தனைத்...
துளியாகட்டும்...
என் கவிதைகளுக்காக...!!!

நான் அழகில்லாதவளா...!!!


ஆண்டவன்...
அருளினால் பிறந்தேன்...
என்றும் பெற்றோரின்...
ஆனந்த உவகையில்...
நனைந்தேன் நான்...!!!

கருப்பு தேவதை...
நான் தான் என்று....
தினம் பெற்றோர்களும்...
மற்றோர்களும்...
எனக்கு சூட்டி மகிழ்ந்த...
பட்டங்கள் தானே...!!!

என் தாயின் உதட்டில்...
நனைந்தவள் ...
இன்றோ கண்ணீரில்...
நனைகின்றேன்...
என்னை அறியாது...
தினமும் கரைகின்றேன்...!!!

கட்டிக்க போறவன்...
கனவில் மிதந்தேன்...
அவன் நினைவில்...
தினம் என்னை மறந்தேன்...!!!

திருமண மேடை...
என் பக்கத்தில்...
நெருங்கிய வேளை..
மணவாளன் வார்த்தை கேட்டு...
நொறுங்கிப் போனேனே ...!!!

என் கனவில்...
என்னைத் தாலாட்டியவன்...
என் அழகை வர்ணித்து...
தூக்கி எறிந்தானே...
நொறுங்கிய இதயம்...
மீண்டும்...
உயிர் பெறவில்லையே...
ஊசலாடுகின்றேன் ....
உணர்வற்றவளாக...!!!

கடவுள்...
அமைத்து தந்த மேடை...
தரை மட்டமாகியது...
மறு மேடை தேடிப்போக...
மனமும் தடுக்கின்றதே...
மீண்டும் ஒருவன் ...
உதடுகளோ என் அழகை...
முனு முனுக்காது ஒழியட்டும்...!!!

மனதை வருடுகின்றது...!!!





வாழும் மனிதரை...
கண்டுவிட்டாலே...
உள்ளம் ஏதோ...
உவகை கொள்கின்றதே ...!!!

உண்மையை...
புரிந்தவர்....
உள்ளங்கள் தானே...
வாழ்ந்து வழிகாட்டி...
வாழ்வை விளக்கி...
சென்றனரே...!!!

யார் தொடர்கின்றனர்...
யாருக்காக மட்டும்...
வாழ்கின்றனர்...
காலங்கள் வாழ்வை ...
விதைக்கின்றனவே...
வினையா தினையா...
அறுப்பது தான்...
நம் கையில் புரியாத...
புதிராக இருப்பது...
புரியவில்லையே...!!!

தேடுகின்றோம்...
தேவையற்று...
வாடுகின்றோம்...
தேடி தேடி காலங்களை...
தொலைக்கின்றோம்...
கடைசியில் கையளவு ...
சாம்பலாக மிஞ்சி...
காற்றினில் கலந்தும்...
விடுகின்றோமே...!!!

இதற்காகத் தான்...
இத்தனை ஆட்டங்களா...
இலை உதிர்ந்தும்
மாறாத மாற்றங்களா...
பாடாய் படுத்தும்...
வாழ்வுக்காக...
இத்தனை ஓட்டங்களா...!!!

காலத்தை...
கனிவோடு பார்க்கத்தானே...
தவறி விட்டோம்...
காத்து இருந்த கண்கள்...
பூத்துக்கொண்டதால்...
மாறிவிட்டோமா...
இல்லை போட்டி போட்டு...
நடிப்பதில் மட்டும்...
கவனத்தை சிதற விட்டோமா...!!!

இருந்தும் மனதை...
வருடுகின்றதே ...
காலத்தை வென்று...
மனிதன்...
வாழப் பழகிவிட்டான்...
நினைக்கும் பொழுது...
உள்ளம் அமைதியாகின்றதே...!!!

மாயம்...!!!





மனித மனங்கள்...
தினம் தினம்...
கரைந்து போகின்றதே...
கண்ணீர்களும்...
வற்றிப் போகின்றதே...!!!

பாசங்களில்...
கீறல்கள் விழுந்து...
வேசங்களாக பிறப்பெடுத்து...
பூமியை ஆட்கொண்டு...
மனித மனங்கள்...
அங்கலாய்க்கின்றனவே!!!

ஆறுதல் சொல்வதாக...
மாறுதல்...
காணத் துடித்து ...
எதனை ஏற்றுக்கொண்டோம்...
எதனை இழந்ததினால்...!!!

கோயில்களில் கும்பாபிசேகம்...
மடங்களில் அன்னதானம்...
எங்கள்...
இதயங்கள் மட்டும்
ஏன் தான் ...
தீட்டுப் பட்டது போல்...
தடுமாருகின்றதோ...
தரம் இழந்து எதனை...
காணத் தான் துடிக்கின்றதோ...!!!

பாதைகள்...
வகுத்துக்கொண்டு...
பள்ளங்களில்...
தடுமாறுகின்றோம்...
பாவிகளாக...
தடம் மாறத் தான்...
இத்தனை போட்டிகளா ..
எத்தனை அவசரங்களா...!!!

மாயம்...
மோகம் கொண்டதே...
மௌனத்தில் மட்டும்...
உன்னை...
ஆட்கொள்ளப்...
பிறந்ததே...!!!

மாயம்...
உன்னை விட்டு...
தொலைந்து விட்டால்...
மீண்டும்...
மனிதனாகி விடுவாய்...
மனித மனங்களில்...!!!

சந்தர்ப்ப வாதிகள்...!!!





உலகில்...
வாழப் பிறந்த...
உண்மையானவர்கள்..
உலகம் புரிந்து...
தங்களை மட்டும்...
காத்துக்கொள்வதில்...
வல்லமையானவர்கள்...!!!

வேதாந்தம் பேசி...
தானும் மூடனாகி...
மற்றவர்களையும்...
மட்டம் தட்டத் துடிக்கும்...
மானிடர் முன்னே....
இவர்கள்....
புனிதமானவர்கள் தானே ...!!!

எத்தனை....
மனித மனங்கள்...
சுத்தம் செய்ய முடியா...
மாசற்றுப் போய்...
தடுமாறுகின்றனவே ...!!!

சுத்தம் செய்யப் போனவன்...
முதுகுகள் தான்...
கிழிக்கபட்டு...
சிதைந்த....
கதைகள் தானே எத்தனையோ...!!!

இவர்களால்...
யாருக்குத் தான்...
என்ன பாதகமோ...
யார் அழிந்த...
கதைகள் தான் ஏராளமோ...
அதனால்...
இவர்களுக்குத் தான்...
என்ன படு பாவமோ...!!!

காற்றுள்ள பொழுதே....
தூற்றிக் கொள்கின்றார்கள்....
காற்றடிக்கின்றது...
இவர்கள் பக்கம்...
காத்திருக்க வேண்டிய...
அவசியம் தான் என்னவோ....!!!

கடைசியில் பாடைகள்...
எல்லோருக்கும் தானே...
உயரிய சிந்தனை...
கொண்டவனுக்கு...
தனியான சமாதியா....
கிடைத்து....
விடப் போகின்றது...!!!

வாழும் வரை...
வாழ்ந்து விட்டு...
போகின்றார்கள் ...
அதிலே சாமானியர்கள்...
உண்மையில்...
இவர்கள் தானே....!!!!

சிறை பிடித்த கைகள்...!!!



அன்புக்கு...
கட்டுப் பட்டுத்தான்...
அடங்கிக் கொண்டேனா...
இல்லை அதிகார...
முத்திரை இட்டதால்...
மயங்கி விட்டேனா...

மொத்தத்தில்...
என் மனமோ...
மோதி பார்க்கின்றனவே...
முடியாததினால்...
மௌனமாகின்றதே ...!!!

நித்தம் ஒரு கணக்கு...
தேடி வந்து...
விடை தெரியா...
திரும்பி செல்கின்றதே...!!!

விடை தெரிந்த நானும்...
விளக்கம்...
இல்லாதவன் போல்....
வீம்புக்கு...
சாதிக்கின்றேனா ...
எனக்குள்...
முட்டி மோதியே ...!!!

தலைவிரி கோலங்கள்...
தள்ளாடுகின்றன...
தங்கள் மொழிகளிலேயே ...
பரிதவிக்கின்றன...
பார்த்திருந்த...
என் கண்களுக்கு...
கண்ணீர்கள் தான்...
விருந்தாகின...!!!

சிந்தனை சிறைகளில்...
தள்ளப் பட்டேன்...
கை விரல்களில்...
விலங்கிட்டு...
எதையோ வடிக்கின்றேன்...
என் இதயத்தில்...
விழுந்த கீறல்களை...
மறைத்துக்கொண்டே...!!!

மயங்கியது இல்லை...
மயக்கமும் என்னை...
அணைத்ததும் இல்லையே...
இன்று மட்டும் ஏன்...
சிறையானேன்...
சிந்தனைகளை...
சிதற விட்டதால் தானோ...
சிறையானேன்...!!!

அழகிய தேன்கூடு...!!!






கண்கள் வியந்திடும்...
கனிவுகள் பிறந்திடும்...
பார்த்துக்கொண்டே...
மனமும் மயங்கிடும்...!!!

யாரும் நெருங்கா...
இதயங்கள் வென்றிடும்..
இன்பங்கள்...
தடைகள் போட்டு...
துன்பங்களை...
விரட்டிடும்...!!!

காத்துக் கறுப்புகள்...
நெருங்கத் தான் துடிக்கும்...
இவர்கள்...
வாசல் மட்டும் வந்ததும்,...
மனம் மாறித்தான் ...
இவர்கள் பக்கம்...
சாயத் துடிக்குமே...!!!

இணை பிரியாத...
சந்தோசங்கள்...
இவர்களுக்காக மட்டும்...
பிறந்ததேன்...
கடவுள்...
இவர்கள் பக்கம்....
மட்டும் சாய்வதேன்...!!!

கூண்டுக்கிளிகள்...
இல்லை இவர்கள்...
சுதந்திர ராகம் பாடும்...
சுமைகள் அற்ற....
சுதந்திர கிளிகள்...!!!

தேன்கூடு கலையாது...
களையும் கூடும் இல்லை...
சந்தோஷ கதவுகள்...
மட்டுமே அதிகம்...
அதில் எங்கே அராஜகம்...
பிறக்கும், பிழைக்கும்
எறியும் கற்களும்...
ஏதோ ஒரு...
திசைக்கு போகட்டும்...
இயலாமைகள்...
ஆமை வேகத்தில்....
நகரட்டும்....!!!

தேன்கூடு சுவையானது...
பிரிக்க முடியாதது...
பிரித்துப் பார்க்க...
நினைப்பவர்கள் உள்ளம்...
ஊமையாகட்டும்...!!!

வாழ்க்கை புத்தகம்..!!!







படித்து முடியாத...
படிக்க தோன்றாத...
பல காவியங்கள்...
மறைந்து,மறந்து ...
கிடக்கின்றதே...!!!

யாருக்கு...
என்ன மோகமோ....
எதனை இழந்து...
எதனை அடையத்...
துடிக்கின்றோம்...!!!

எல்லாமே...
ஏதோ ஒரு வேகத்தில்...
முட்டி மோதுகின்றனவே...
முடிவு தான் தெரியாது...
வாழத் துடிக்கின்றனவே...!!!

எல்லாமே...
ஒரு நம்பிக்கை...
காலங்கள் நமக்குள்...
கட்டுப்பட்டு விட்டதாக...
இது...
கனவுகளின் நிஜங்களா...
இல்லை...
நிஜங்களின் நினைவுகளா...!!!

பூட்டை...
தொலைத்துவிட்டு....
சாவியை மட்டும்...
நம்பி வாழ்கின்றோம்...
புதுமைகள்...
ஆழ்கின்றன...
பாசத்தோடு பழமைகள்...
விடை பெற்றுவிட்டன ...!!!

மூக்கணாம்...
கயிறு போல்...
இழுத்த...
இழுப்புக்கெல்லாம்...
தலைகளை ஆட்டியே...
பழகிக்கொண்டோம்...!!!

வாழ்க்கை...
ஒரு சுவையான கூடாரம்...
வாழத் தெரியாது...
கூரைகளை பிய்த்தெறிந்து...
கை விரல்களாலேயே...
வானத்தை...
மறைக்க பார்க்கின்றோமே...

படிக்க முடியாத...
புத்தகத்தை...
கிழிக்காமலாவது ...
விட்டு வைப்போமா...
இல்லை...
மனிதனால் முடியாத...
ஒன்றை சிந்திக்கின்றேனா...!!!
[கவிஞர் இராஜேந்திரா]

தமிழன் முதுகு...!!!



பழக்கப் பட்டு ...
விருப்பப் பட்டு...
என்றென்றும்...
தொடரும்...
இடம் தானே...!!!

கட்டியணைத்து...
முத்தமிட்டு...
கதைகள் பல பேசி...
பின்பு கை...
வைக்கத் துடிக்கும்...
இடமும் அது தானே...!!!

தன்னினத்தை...
அழித்து
பிற இனத்தின்...
வாழ்வுக்கு...
வழி காட்டிடும்...
உன்னதத் தமிழர்கள்...
உலகில்...
எத்தனை எத்தனையோ...!!!

தமிழன் வளர்ச்சி...
தமிழனுக்கே...
பய கிளர்ச்சி...
தூங்காது...
வாட்டி வதக்கிடும்...
பழக்கப்பட்ட..
அவன் குணமும்...
வேறு யாருக்குத் தானோ...!!!

கல்தோன்றா ...
மண் தோன்றா ...
காலத்து இனத்துக்கு...
ஒரு கல் பூமி கூட...
சொந்தமில்லையே...
முதுகுகள் மட்டும்...
சொந்தமானதால் தானோ...!!!

முகவுரைகளை...
மாற்றித் தானே...
பழகிவிட்டோம்...
தமிழன் வார்த்தைகளை...
தரம் கெட்டதாக...
எண்ணிக்கொண்டே...
தவறான விதைகளை..
விதைத்து...
வினைகளை மட்டும் தானே
அறுவடை...
செய்துகொண்டோம்...!!!

காலங்கள்...
பல கதைகள்...
கூவுகின்றன ...
தமிழன் வாழ்வு...
விடியும் நம்பிக்கை...
பிறக்கும் பொழுது...
கூறிய வால்கள்...
குரல்வலையை...
தமிழில் பேசியே ...
அறுத்துச் செல்கின்றதே....
விடியுமா தமிழன் வாழ்வு...!!!

சந்தோசம்...!!!





தாய்ப் பால்...
குடித்த பொழுது...
கவலை மறந்தோம்..
மழலையாக...
மண்ணில் தவழ்ந்தோம்...

பாடசாலை...
தொடக்கத்தில்...
பாடம் சுமந்தோம்...
நண்பர்கள் பக்கம்...
நட்பாய் நிமிர்ந்தோம்...!!!

காலங்கள்....
உருண்டதில்..
கவலையும் கண்ணீரும்...
சுமந்தோம்...
காரணம் இன்றி...
தினமும் வெந்தோம்...!!!

பாதைகள் தெரிந்ததும் ...
பயணங்கள்...
தொடர்ந்தோம்...
சந்தோசக் காற்றை...
தேடி அலைந்தோம்...!!!

இன்றும்....
தேடிக்கொண்டு தான்...
இருக்கின்றோம்...
எங்களுக்குள்...
ஒழிந்து இருக்கும்....
சந்தோசங்களை...
தேடாது வெளியில்...
தேடுகின்றோம்...
பித்து பிடித்த மனிதர்களாக...!!!

சந்தோசங்களை...
காசு கொடுத்து...
வாங்கத் துடிக்கின்றோம்...
எங்களை சுற்றி..
இருந்த இன்பங்களை...
தொலைத்துவிட்டு...

புரிந்த உலகத்தில்...
புரியாது நடிக்கின்றோம்
புதுமைகளுக்கு...
மயங்கியே...
எல்லாவற்றையும்...
தொலைக்கின்றோம்...!!!

காலம் காலமாக...
சபிக்கின்றோம்...
பேராசைகளை...
விழுங்கிக்கொண்டே...
எதுவும்...
கிடைக்காதது போல்...
போட்டி போட்டு...
நடிக்கின்றோம்...
நாம் எல்லோருமே...!!!

ஊமை விழிகள்...!!!



வாய்கள்...
பூட்டப்பட்டு...
மூளைகள்...
முடக்கப்பட்டு...
நாடி நரம்புகள்...
நசுக்கப்பட்டு...
எதையோ...
தேடுகின்றனர்....!!!

வார்த்தைகள்...
மட்டும் வருகின்றது...
வாழ்வை நோக்கி...
நகர்கின்றது...
இருந்தும்...
என்ன பயன்...
யாருக்கு தான்...
என்ன பயம்...!!!

கோபுரங்களை ...
அண்ணார்ந்து...
பார்த்து மட்டும்...
பழகிவிட்டோம் ...
அதன் விழுதுகளை...
ஏன் தானோ...
மறந்துவிட்டோம்...!!!

புரியாத புதிராக...
முடங்கிக்...
கிடக்கின்றோம்...
ஏனோ தானோ...
வாழ்வை....
சுமக்கின்றோம்...!!!

வசந்தங்கள் தான்...
வெறுத்துப்...
போகின்றதே...
மனிதர்களிடம்...
இருந்து தான் ...
விலகத் துடிக்கின்றதே...!!!

உறவுகள் பற்றிய...
உண்மைகளை ...
சொல்லவேண்டுமா...
இல்லை சொல்லாது...
விழுங்கிட வேண்டுமா...!!!

கண்கள் கட்டித்தானே...
கடிவாளம் பூட்டப் பட்டது...
மீண்டும் ஏன்...
உலகத்தைப் பார்க்கின்றாய்...
ஊமை விழிகளால்...!!!

Sunday, March 24, 2013

தாலி மட்டும் மின்னுகின்றது...!!!






கை நீட்டி அணைக்க...
வேண்டிய கைகள்...
காமப் பூக்களாக ...
தேடி அலைகின்றதே...!!!

ஒரு நிமிடம்...
சிந்தை இழந்து...
மந்தைகளாக மானிடர்...
தடம் புரண்டு...
ஐயகோ என்ன...
வாழ்க்கையோ...
வாடுகின்றேன் ...
வழிகள் பற்றி எரிவதால்...
வதங்கியே சாகின்றேன்...!!!

கதைகளில் கூட...
நாவை சுட்டுக்கொள்ளாது...
வரும் வார்த்தைகள்...
என் மேனியை...
சுட்டெரிக்கின்றதே...!!!

படு பாவம்...
செய்து விட்டேனா...
பாவியிடம்...
சிக்கி விட்டேனா...
தினம் ஒரு சவால்...
முறியடிக்க...
முடியாது முறிகின்றேன்...!!!

கண்ணீர் துளிகளில்...
பன்னீர் தெளிக்கப்...-
பார்க்கின்றேன்...
வெந்நீராகி...
என்னையே....
பதம் பார்க்கின்றதே...!!!

முயலுக்கு...
மூன்று கால்கள்....
முரண்டு பிடிக்கும்...
மானிடனிடம்...
வாதம் செய்கின்றேன்...
எதனை பதிலாக...
தந்து இருப்பான்...
நினைத்தே ஜாகம்...
செய்கின்றேன்...!!!

என் விழிகளில்...
ஏதோ ஒரு வெளிச்சம்...
என்னை முன்னோக்கி...
அழைத்துச் செல்கின்றது...
அறியாத என்னினைவும்...
அலங்கோலங்களை...
அறியாது செல்கின்றதே...!!!

கரங்கள் கை நீட்டுகின்றது...
என் கண்ணீர் துளிகளில்...
தாலி மட்டும்...
நனைந்து மின்னுகின்றதே...!!!

என் உள்ளம் மட்டும் வாடி...
உருக்குலைந்து போவதில்...
என்ன நியாயமோ...
பெண்னாக பிறந்ததால்...
வந்த மாயமோ...!!!

கனா கண்டேனடி தோழி...!!!






கதிரவன்
கலங்கி நின்று
ஏதோ சொல்லவந்த
செய்தி கேட்டு...!!!

என்னவள்
வருகைக்காக
ஏக்கத்துடன்
நான் வாட...!!!

புன்முறுவல் ...
பூத்த வண்ணம்...
நங்கையவள்...
நாணம் கொள்ள...!!!

அவளோசை ...
போன திசை..
பொங்கித் தானே...
நானும் போக...!!!

வா என்று அழைக்கா...
வாடித்தான்...
அவள்...
போவதெங்கே...!!!

காலடி ஓசை...
அவள் காலடி ஓசை....
காரணம் சொல்லா...
கண்களின்....
சோகத்தை மட்டும்....
தெளிப்பதேன்....!!!

பாரத்தை....
சுமந்து வந்து...
பாதியில் விட்டுத்தான்...
போவதேன்....!!!

நிம்மதி....
பெருமூச்சுக்கள்...
நிதானமற்று...
நிர்க்கதியாகப்....
போவது தான் எங்கேயோ...!!!

பாவம் அவள்...
பருதவிக்கின்றாள்...
பாவி என்னை...
நட்பாக...
ஏற்றுக்கொண்டதால்...
தினம் துடிக்கின்றாள்...!!!

நான்....
தொலைத்த நட்பை....
தேடி அலைகின்றேன்...
நாகரீகமாக அவளிடம்...
சொல்லத் துடிக்கின்றேன்..
சாகும் வரை தொடரும்...
அவள் மேல்...
நான் வைத்த...
புனித நட்பு...!!!

இது கனவு....
இல்லையடி தோழி...
என் உள்ளத்தில்...
வந்த உண்மையின்
குமுறல்கள் தானடி தோழி...!!!

உயிரே நீ எங்கே...!!!






உன் வரவுக்காக
மலர்கள் தூவி வாசலில்
காத்து இருந்தேன்
காலை முதல் நான் இங்கே...!!!

நீ வராதது கண்டு
நானும் பூத்து
வாடி நின்றேன்
மாலை நேரத்திலே
மயங்கினேன்
மயங்க வைத்த
நீயும் எங்கே...!!!

கூண்டுக்குள் நீயும்
தூங்கிக்கொண்டு
கூவ நினைக்கின்றாய்
உன் கீதம் கேட்டு நானும்
உன் முகம் காண
தேடி
தவம் கிடக்கின்றேன்...!!!

ஒலி வந்ததிசையில்
என் கண்கள்உடைத்து
ஒளி தருகின்றேன்
என்னை மறந்து
நானும் வாடுகின்றேன்...
எங்கே போனாயோ
இல்லை யாரிடம்
மாட்டிக்கொண்டாயோ...!!!

என் உயிர்
போகட்டும் என்று
என் மனது மட்டும்
ஏங்குகின்றதே
உன் முகம்
கண்டபின்பு தான்
நானும் வாழ வேண்டும்
என்று தான்
என் உயிரும்
துடிக்கின்றதே
என் உயிரே
எங்கே சென்றாய்
என்னை வாழவைக்க
ஒரு முறை
பிறந்து வா என்னவளே...!!!

எதிர் பார்த்தேன்...!!!





ஏக்கங்கள் சூழ்ந்த
உலகத்தில்
உண்மைகள்
எப்படி உயிர் பெறும்
ஊமைகளாகி
மந்தைகள் போல்
வாழ்வும் இருள்கின்றதே
தினம் ஒரு பாடத்தை
புகட்டிவிட்டே செல்கின்றதே...!!!

மரத்துப் போய்
மனித அவலங்கள்
புதையல்களாக கொட்டிக்
கிடக்கின்றனவே
சுவை பார்க்கத்தான்
ஏங்கும் உள்ளங்கள்
நிறைந்து துடிக்கின்றனவே...!!!

தேன் கூடுகளில் சுவைகள்
மறைந்து
நீர் மட்டும் நிறைந்து
கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு
தவம் கிடக்கின்றன
எல்லாமே ஒரு
மாயையாகவே
உணர்வும் வந்து
உண்மை
சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன்
என்னவென்று புரியாமலேயே
எதிர் பார்க்கின்றேன்...!!!

தொலைந்த கவிதை...!!!




பாடித் திரிந்த
கிளி ஒன்று
இன்று வாடிப்போய் வாயிழந்து
வாழ்வு இழந்ததோ
வருத்தப் பட்டு
நாவிழந்ததோ
கண்ணீர் சிந்தத்தான்
நதிகள் தேடுகின்றதோ
நான் அறியேன்...!!!

முத்தத்தில் ஈரம் உண்டு
உன் சத்தத்தில்
சலங்கை கீதம் உண்டு
உன் பார்வையில்
பல வண்ணமுண்டு
அதனை பார்க்கத்தான்
தினமும் எனக்கும்
எண்ணமுண்டு...
மொத்தத்தில் உன் வார்த்தையில்
மௌனம் கண்டு
வாடிப்போகின்றேன்
நானும் இன்று...!!!

தென்றல் காற்றே
உன் கவிதை கீதம்
மறைந்தது ஏனோ
கனாக்காலங்களில் நீயும்
தொலைந்தது தானோ
கால் தடம் பதித்து உன்
கவிதைகளை புதைத்து
செல்கின்றாய் புரியாத புதிராய்
உன்னை நீயும்...
புதைத்துக்கொண்டே...!!!

Sunday, March 10, 2013

பெண்ணவள் தினம்...!!!



கண் விழித்த பொழுது
கருவில் அழகாய் சுமந்து
தன்னை உருக்கி
உலகுக்கு என்னைத் தந்தவளும்
அழகிய பெண் தானே.
அம்மா எத்தனை அற்புதங்கள்
உன்னை அழைக்கும் பொழுது
எத்தனை கண்ணியங்கள்.

பெண்ணுக்கொரு
சக்தி உண்டு
அழகாய் இந்த உலகை
மாற்றிடும் உன்னத
தகமை உண்டு
கணக்கிட்டு வாழ்ந்திடும்
மனதுண்டு
காலங் காலமாய்
ஆணிடம் அடங்கிப் போய்
சாதிக்கும் திறமை உண்டு.

மகளிர் தினம் என்று
பெண்களுக்கு ஏன் தான்
தனி ஒரு நாளோ
ஒவ்வொரு நாளும்
பெண்கள் தினம் தானே
தினமும் வாழ்த்துவோம்
பெண்களை தினமும் வாழ்த்துவோம்.

தோழி...!!!



எனக்குள் நீ
உறங்குகின்றாய்
எனக்குள் நீ ஆசானாக
பிறப்பெடுத்து
தினம் வந்து புதிய செய்தி
சொல்கின்றாய்
முன்னோக்கி என்னை
தள்ளி விடுகின்றாய்
பின்னோக்கி நான்
விழுந்து விடாது.
என் சுமையையும்
தாங்கிக் கொள்கின்றாய்
என்ன தவம் செய்தேனோ
உன்னாமம்
நான் உச்சரிக்கவே...!!!

தோழி
உன்னைக் கண்டபின்பு
உரிமை எடுத்துக்கொண்டேன்
உன்னில் இருந்து என்னை
பிரிக்க முடியாத உரிமையை
நான் மட்டுமே
எடுத்துக்கொண்டேன்
நட்பின் பாடங்களை
தினம் ஒரு பந்தி
உன்னிடம் இருந்தே
கற்றுக்கொண்டேன்...!!!

மனம் கனக்கும்
தினம் ஏதோ
கணக்குப் போடும்
வாழ்வே விந்தையாக மாறி
உலகையே
வெறுக்கச் சொல்லும்
கண்மூடி என்னை மறந்து
உன்னை நினைத்துவிட்டால்
எல்லாமே மறந்து போகுமே
வாழத்தான்
மனதும் துடிக்குமே
தோழி உன்னிடம்
மயங்குகின்றேன்
உன் நட்புக்காக மட்டும்
ஏங்குகின்றேன்...!!!

அட்டைப் பூச்சிகள்....!!!



இரத்தக் கோளாறுகளில்
மூளையை மக்க வைத்து
முதுகெலும்புகளை
தொலைத்து அலையும்
வல்லூறுகள் கதைகள்
எங்கே தான்
போய் முடியுமோ...!!!

காலங்கள் தேடி வந்து
பாடங்கள் புகட்டினாலும்
கோரப்பற்கள் மட்டும்
அடுத்தவன் மேனியை
சுவை பார்க்கத்தான்
துடிக்கின்றதே...!!!

உடலில் ஒட்டி இருந்த
துணியை
விற்றுத் தின்றுவிட்டு
அடுத்தவன் வீட்டில்
நோட்டம் இடும்
நோக்கம் தான் என்னவோ...!!!

காதுகளையும்...
கண்களையும் மூடிக்கொண்டு
பயணிக்கின்றேன்
என்னை அனைத்து
யார் தொடர்ந்தாலும்
நம்பிக்கையோடு
அவர்களையும்
அனைத்துக்கொண்டு
நானும் தொடருகின்றேன்...!!!

அட்டைப்பூச்சிகளும்
ஒட்டுண்ணிகளும் தானாகவே
விழுந்து அழிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
நானும் பயணிக்கின்றேன்
புதுத்தெம்போடு...!!!