வாசனை...
கொண்ட ...
உள்ளம் தானே...
என் உள்ளம்...
நீ அங்கே....
வாழ்வதால் தானோ...!!!
காலம்...
இட்ட கோலம் தான்...
கவிதையால்...
வாழ்கின்றோம்...
காரணம் இன்றி...
தவிக்கின்றோம்...!!!
பாவி நான் ....
பரிதவிக்கின்றேன்...
என்னவளே...
உன் முகம்...
காணா வாடுவதை...
யார் அறிவார்...
என்னவளே...!!!
தேடிப்...
பார்க்கின்றேன்...
நினைவுகளில்...
ஒன்றாகி விட்ட...
உன்னுடன்...
சேர்ந்து நானும்...
உயிர்...
வாழ்வது தெரியாது...
தேடி...
அலைகின்றேன்...!!!
கானல் நீர்...
என்று புலம்புகின்றேன்....
கண்ணே...
நீ....
என்னுடன் ...
சங்கமித்தது தெரியாது
வாடுகின்றேன்...!!!
என்னவளே....
உன்...
நினைவொன்றே போதும்...
காலமெல்லாம்...
நான் வாழ்வேன்...
கனவுகளோடு...!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
No comments:
Post a Comment