வார்த்தையில்...
கனிவு ...
வாய் நிறையப்...
புன்னகை...
பூத்திடும்...
தினம்...
இவள் பக்கமே...!!!
மனதில்...
வஞ்சமில்லா...
உண்மையை...
நெஞ்சில்..
சுமந்து...
வாழத் தெரிந்த...
தேவதையும் அவளே....!!!
துன்பங்கள்....
இவளிடம்...
போவதற்கே...
நடுங்கி ஓடுமே...
இவளிடம்...
தோற்றுப் போவோம்...
என்ற...
பயத்தில் தானோ...!!!
பொய்மை...
இவளைக்...
கண்டு வெறுத்து...
ஒதுங்குமே...
இவளுக்கும்...
பிடிக்காததினால்...
வெறுத்துப் போகுமே...!!!
காலம்...
கையில்...
தேவதையாக...
பிடித்து தந்ததினால்....
நெஞ்சில்...
சுமக்கின்றேன்...
தினம் தோறும்....!!!
[கவிஞர் கா இராஜேந்திரா]
No comments:
Post a Comment