Friday, March 30, 2012

துடிப்பு


பகுத்தறிவு...
பாதை மங்கிய பொழுது...
கை பிடித்து கவிதை சொன்னவள்!!!

காலங்களை...
எனக்கு போதனைகாளாக...
படைத்து கொண்டவள்!!!

வீம்பு பண்ணி...
விளையாட்டாக என்னில்
மோதிப்பார்க்கும் தேவதை அவள்!!!

கள்ளம் கபடம்....
அறியாத பேதை அவள்..
வஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள்!!!

வசை பாடுபவர் முன்னே.....
என்னை திசை மாற்றிய...
என்னவள் அவள் தானே!!!

இன்றோ இதயத்தில்...
மட்டும் பூத்துவிட்டு...
என்னை தட்டுத் தடுமாற வைக்கின்றாளே!!!

பூவை...
கொய்யவும் முடியவில்லை...
பூவையவளை உணரவும்...
முடியவில்லை!!!

என்னவள்...
எனக்கானவள்...
என்னுள் புதைந்தவள்...
எனக்காக மட்டுமே பிறந்தவள்!!!

வாழ்வேன்...
என்னவளை இதயத்தில் மட்டும்....
சுமந்தே வாழ்வேன்...
என் இதயத் துடிப்பு அடங்கும் வரைக்கும்!!!

No comments:

Post a Comment